சூரிய ஒளி எனும் மருந்தின் மகத்துவம் தெரியுமா?

மே 3, உலக சூரிய தினம்
sunbath
sunbathhttps://tamil.samayam.com

தினமும் குளிப்பது அவசியம். அதோடு, இந்த சூரியக் குளியலும் அவசியம். தினமும் காலை குறைந்தபட்சம் 5 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பதால் முகப்பரு, அரிக்கும் சரும அழற்சி, மஞ்சள் காமாலை, சருமத் தடிப்பு அழற்சி மற்றும் பூஞ்சை சரும தொற்று நோய்கள் முதலிய எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் இருக்க உதவும். குழந்தைகளை தினமும் காலை 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் வைத்திருந்தால் போதும், அது அவர்களுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும். எந்த வகைப் புற்றுநோய் வருவதையும் தவிர்க்க சூரிய ஒளி நம் சருமத்தில் படுமாறு இருந்தால் போதும்.

காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை, உடம்பு முழுவதும் வலிக்கிறது என்று பலர் புலம்புவதை கேட்கலாம். காரணம் வைட்டமின் டி பற்றாக்குறை. இதன் தினசரி தேவை பெரியவர்களுக்கு 2000 IU, சிறுவர்களுக்கு 400 முதல் 1000 IU வரை. காலை நேரத்தில் வெற்று உடம்புடன் வெயிலில் நின்றால் 20,000 IU வைட்டமின் டி நமக்கு கிடைக்கும்.

இன்சுலின் உற்பத்தியில் வைட்டமின் டி முக்கியப் பங்கு வகிக்கிறது, வைட்டமின் டி குறைபாட்டால், இன்சுலின் எதிர்ப்பால் அவதியுற நேரும். அது டைப் 2 நீரிழிவு நோயை உண்டாக்கும். சூரிய ஒளியில் நிற்பதால் அது சருமத்தில் பட்டு சருமம், வைட்டமின் டிஐ உற்பத்தி செய்யும். அதன் மூலம் பார்வை வலுப்பெறும். இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தி பெருகும். இரத்த சோகை தவிர்க்கப்படும். முடி நிறம் மாறாது. சூரிய ஒளியின் நன்மைகள் காலை 6 முதல் 8. இந்த நேரத்திலும் மாலை 5 முதல் 6.30 இந்த நேரத்தில் கிடைக்கும் இதமான செந்நிற வெயிலே நம் உடலுக்கு ஆரோக்கியமானது.

இந்த சூரிய ஒளி நம் மீது படும்பொழுது நம் உடலில் உள்ள கொழுப்பு வைட்டமின் டியாக மாற்றப்படுகிறது. இந்த வைட்டமின் டி சத்து கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்களை உடல் உறிஞ்ச உதவுகிறது. வைட்டமின் டி உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கிறது. எலும்பு மற்றும் தசை ஆரோக்கியம் அதிகரிப்பு, இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குதல், இரத்த நாளங்களின் ஆரோக்கியம், மூளை சுறுசுறுப்பு, இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க.

அது மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு ஏற்படும் ரிக்கட்ஸ் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோராசிஸ் போன்ற எலும்பு நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது. நம் தூக்கத்திற்குத் தேவையான மெலடோனின் என்ற ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து இரவில் நல்ல தூக்கத்தை கொடுக்கும். இந்த மெலடோனின் இரவில்தான் சுரக்கிறது.

கண் பார்வை கோளாறுகள் வராமல் தடுக்கிறது. இதனால்தான் பிறந்த குழந்தைகளை முதல் ஒரு மாதத்திற்கு சூரிய ஒளியில் மருத்துவர்கள் காட்டச் சொல்கிறார்கள். தினமும் ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் பொழுதைக் கழிக்கும் குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை பிரச்னை வருவது குறைவு என்கிறார்கள் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். நம் உடலில் பூஞ்சை தொற்று, நுண்கிருமிகளின் தொற்றுகளை அழிக்கும் திறன் சூரிய ஒளிக்கு உள்ளது. இதனால்தான் நாம் துணிகளை துவைத்து வெயிலில் காய வைக்கிறோம்.

ஆண்களுக்கு சுரக்கும் டெஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் சுரப்பை அதிகரித்து ஆண்மையை அதிகரிக்கிறது. சூரிய ஒளி சருமத்தில் படுவதால் செரட்டோனின் சுரப்பியின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நம்முடைய நரம்பு மண்டலம் பலம் பெறுகிறது. மேலும், சருமப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ஆனால், 11.30 முதல் 4.30 இந்த நேரத்திற்குட்பட்ட வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த நேர வெயிலானது புற்று நோயை ஏற்படுத்தக் கூடியது.

இதையும் படியுங்கள்:
வீட்டில் மகிழ்ச்சி பொங்க வாஸ்து சாஸ்திரம் காட்டும் ஓவியங்கள்!
sunbath

வாரத்தில் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குறைவான ஆடை அணிந்து காலை வெயிலில் நிற்பதன் மூலம் சூரிய ஒளியின் முழு பலயையும் பெற முடியும். இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உங்களுக்கு வேண்டுமென்றால் தினமும் 20 நிமிடமாவது காலை, மாலை செந்நிற வெயிலில் நில்லுங்கள்.

போதுமான அளவு சூரிய ஒளியைப் பெறுவது மனநிலைக் கோளாறுகளை எதிர்த்துப் போராட உதவும். குறிப்பாக, பருவ கால பாதிப்புக் கோளாறான SAD என்பது ஒரு வகையான மனச்சோர்வு ஆகும். இது பொதுவாக இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருக்கும்போது ஏற்படும். சூரிய ஒளியின் பற்றாக்குறை மூளையின் ஹைபோதாலமஸ் செயல்படும் விதத்தை பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது. போதுமான சூரிய ஒளி பெறாதது செரோடோனின் அளவைக் குறைக்கலாம். இது மனச்சோர்வுக்கு பங்களிக்கும். எனவே, அதிக சூரிய ஒளியைப் பெறுவது உங்கள் செரோடோனின் அளவையும் உங்கள் மனநிலையையும் அதிகரிக்கும்.

காலை நேர சூரியக் குளியலே சிறந்ததாகக் கருதப்படுகிறது. காரணம் பெரும்பாலும் சூரிய ஒளியின் நன்மைகள் அப்போதுதான் கிடைக்கும். மேலும், புற ஊதாக் கதிர்களும் அந்தளவு வலுவாக இருக்காது. எனவே, தினமும் காலை 15 நிமிட சூரியக்குளியல் பெற்று ஆரோக்கியமாக இருப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com