இந்த 7 திறன்கள் மட்டும் இருந்தால்... என்ன ஆகும் தெரியுமா?

Motivaton Image
Motivaton ImageImage credit - Pixabay.com

1. கணினி பொது அறிவு திறன்கள்:

* இன்றைய உலகில் இருக்கும் அனைத்து இளைஞர்களும் கட்டாயம் கணினி பற்றி சிலவற்றைத் தெரிந்துகொண்டே இருக்க வேண்டும். 

* முக்கியமாக விரைவாகவும் துல்லியமாகவும் typing செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

* மைக்ரோசாப்ட் ஆபிஸ் தொகுப்பு மற்றும் அதில் பயன்படுத்தும் shortcuts பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். 

* இன்னும் ஒருபடி மேல போக ஆசைபட்டால்  ஐடி நிறுவனங்களில்  பயன்படுத்தும் coding பற்றியும் தெரிந்து வைத்துக்கொள்ளலாம்.

2. வீட்டு பராமரிப்புத் திறன்கள்:

* அடிப்படை வீட்டு பழுது மற்றும் பராமரிப்பு அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.

* மின் சாதனங்களை சரிபார்ப்பது, உடைந்த பைப்பை சரி செய்தல், தோட்ட வேலைகள், நீர் அடைப்பு ஏற்பட்டால் அதை வடிகட்ட வடிகால்களை அவிழ்த்தல் போன்றவற்றை கற்று வைப்பது நல்லது.

* தையல் திறன்களை வளர்த்துக்கொள்வதும் சிறந்தது. முக்கியமாக பட்டன்களை சேர்த்தல், பொருத்தமற்ற ஆடைகளை கண்டறிவது, துணிகளின் தரத்தை ஆராய்வது போன்ற அடிப்படை விஷயங்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளலாம்.  

3. வாகன பராமரிப்பு மற்றும் பாதுகாப்புத் திறன்கள்:

* அடிப்படை ஆட்டோமொபைல் ரிப்பேர் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி கற்றுக்கொள்ளுங்கள். 

* வரைபடத்தைப் பார்த்து புரிந்து வைப்பது  எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள். இன்றைய உலகில் அதை நம்பித்தான் நிறைய பேர் தொழில் செய்கிறார்கள். 

* செயலிழந்த பேட்டரியை ஜம்ப்ஸ்டார்ட் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். ஏனென்றால் ஏதோ ஒரு சமயம் நமக்கு இல்லை பிறருக்கோ உதவி செய்துகொள்ள பயன்படும். 

* பஞ்சரான டயரை மாற்றுவதில் வல்லவராக இருங்கள்.

4. பேச்சு திறன்கள்:

* பிறர் என்ன சொல்கிறார் என்பதை அமைதியாக கேட்கப் பழகுங்கள். கேட்கும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்.

* பேச்சு திறன் மற்றும் எழுத்து திறனை வளர்த்துக்கொள்ள தினமும்  பயிற்சி செய்யுங்கள். இதை வைத்து உங்கள் மனநிலையைத் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் வெளிப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள். இதனால் மற்றவர்களின் உடல் மொழியை வைத்தே நீங்கள் அவர்களைப் பற்றி புரிந்துகொள்ளலாம்.

5.  நேரக் கட்டுப்பாடு மேலாண்மை திறன்கள்:

* பணிகளுக்குத் தக்க முன்னுரிமை அளித்து இலக்குகளைச் சிரமமின்றி அடைய வழிகள் அமைக்கவும். காலெண்டர்கள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி உங்கள்  திட்டமிடு பழக்கத்தை அதிகப்படுத்துங்கள். 

* உங்கள் அன்றாட உற்பத்தித் திறனை மேம்படுத்தும் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் பழக்கங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
கொழுப்பைக் குறைக்கும் 6 அற்புதப் பழங்கள்!
Motivaton Image

6. உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் திறன்கள்:

* அடிப்படை ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி கொள்கைகளைப் புரிந்துகொள்ளுங்கள். 

* மன அழுத்த மேலாண்மை நுட்பங்கள் பற்றி  கற்றுக்கொள்ளுங்கள். நினைவாற்றல், சுய பாதுகாப்பு பயிற்சி,அடிப்படை முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைக்கான நடைமுறைகளை அறிந்துகொள்ளுங்கள்.

7. நிதி கையாளும்  திறன்:

* பட்ஜெட் மற்றும் உங்கள் நிதிகளை திறம்பட நிர்வகிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். 

* கூட்டு வட்டி, கடன் மதிப்பெண்கள் மற்றும் முதலீட்டு உத்திகள் போன்ற விஷயங்களை புரிந்துகொள்ளுங்கள்.

* வரிச் சட்டங்கள் மற்றும் நிதித் திட்டமிடல் பற்றி நன்கு தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

இப்படி மேலே குறிப்பிட்ட சில வித்தைகளைத் திறம்பட தெரிந்து வைத்துக்கொண்டாலே இந்த விஞ்ஞான உலகில் நாம் திறம்பட பிழைத்து விடலாம். வாழ்க்கையில் முன்னேறி சாதனைகள் பல புரியலாம். மற்றவர்களுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக இருந்து ஆக்கப்பூர்வமான ஆளுமைத் திறன்களை வெளிப்படுத்தி சமூகத்தில் நல்லதொரு இடத்தைப் பிடித்து உயரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com