பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது?

How to deal with problems?
How to deal with problems?
Published on

இந்த பதிவை படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு வேலை இல்லாமல் இருக்கலாம். குடும்ப கஷ்டங்கள் இருக்கலாம். வேலை இழக்கும் அபாயம் இருக்கலாம். நம்மை பிறர் புரிந்து கொள்ளவில்லை என்ற கவலை இருக்கலாம். பிறர் உங்களுக்கு காயங்களை பரிசாகக் கொடுக்கலாம். பிறர் மோசமான துரோகத்தை இழைக்கலாம்.

ஆனால் இவை அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு ஏதோ ஒரு காரணத்திற்காக வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். நிச்சயமாக இதுபோன்ற கடினமான சூழல்களை எண்ணி மனம் வருந்த நேரிடும். ஆனால் அந்த மன வருத்தத்திற்கு காரணமாக இருக்கும் காரணிகளை எப்படி விடுவது என்பது பற்றி யாரும் சிந்திப்பதில்லை.

உங்கள் வாழ்க்கையில் அனைத்தையுமே ஒரு மூன்றாம் நபர் பார்வையிலிருந்து சிந்தித்துப் பாருங்கள். இதனை ஏன் கூறுகிறேன் என்றால், ஒரு மூன்றாம் நபராக நாம் நம் வாழ்க்கையை காணும்போது, ஒரு தெளிவான முடிவுகளை எடுக்க அது உதவும். இதுவே நமது வாழ்க்கையைப்  பற்றி அதிகமாக சிந்தித்துக் கொண்டே இருந்தால் அந்த சிந்தனையே நமக்குள் பய உணர்வை ஏற்படுத்தி நம் முடிவுகளை எடுக்க விடாமல் தடுத்துவிடும்.

உங்கள் வாழ்வில் எந்த பிரச்சனையாகினும் அதிலிருந்து சற்று விலகி நின்று அதைப் பற்றி நன்கு சிந்தியுங்கள். இது எதனால் எனக்கு ஏற்பட்டுள்ளது? இதை எப்படி நான் சரி செய்ய முடியும்? இது மேலும் தீவிரமடையாமல் எப்படி தடுப்பது? என்பது போன்ற சிந்தனைகள் நீங்கள் மூன்றாம் நபர் பார்வையிலிருந்து பார்த்தால் மட்டுமே தெரியும். கவலை கவலை என புலம்பிக்கொண்டே இருந்தால் தீர்வுகளை யார்தான் காண்பது. நம் வாழ்க்கை முழுவதுமே கவலைகள்தான். சற்று அதனைப் பற்றி சிந்தித்து, அதிலிருந்து வெளிவர முயற்சித்துப் பாருங்கள்.

இதையும் படியுங்கள்:
Tech Mahindra: வேலை தேடுபவர்களுக்காக புதிய இணையதளம்!
How to deal with problems?

தூர நின்று உங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது கவலைகள் கூட கடுகுகளாகவே தெரியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com