வெற்றியாளராக மலரச் செய்யும் காலை நேர செயல்பாடுகள் எது தெரியுமா?

Motivation image
Motivation imagepixabay.com

வெற்றியாளராக வேண்டும் என்கிற எண்ணம் நிறைய பேருக்கு உண்டு. ஆனால் அதற்கு திறமையும் ஆசையும் மட்டும் இருந்தால் போதாது. அவற்றை முறையாக செயல்படுத்த வேண்டும். வெற்றியடைய விரும்புபவர் ஒரு நாளின் முக்கியமான பகுதியான காலை நேரத்தில் செய்ய வேண்டிய முக்கியமான ஏழு விஷயங்கள் என்ன என்பதைப் பற்றித்தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

அதிகாலையில் எழுவது;

திகாலையில் எழும் பழக்கம் ஒரு வெற்றியாளருக்கு மிகவும் முக்கியமான தேவையாகும். காலையில் சீக்கிரம் எழும்போது அது ஒருவரை நாள் முழுவதும் உற்சாகமாக வைக்கிறது. அன்றைய வேலைகளை திட்டமிட உதவுகிறது. அதே சமயம் உடலையும் ஆரோக்கியமாக வைக்கிறது.

அலைபேசியை தொடாமல் தொடாமல் இருப்பது;

காலையில் கண்விழித்ததும் நிறைய பேர் செய்யும் முதல் வேலை அலைபேசியை  எடுப்பதுதான். ஆனால் அது நேர விரயத்திற்கு மட்டும் காரணமாவதில்லை. அதில் வரும் செய்திகளும், சமூக வலைதளங்களில் காணப்படும் விஷயங்களும், வாட்ஸ் அப் வணக்கங்களும், தேவையில்லாத கவலைகள், மன வருத்தங்கள் மற்றும் வெட்டி அரட்டைக்கே வழிவகுக்கும். எனவே காலையில் செல்போனை தொடக்கூடாது.

தியானம் செய்தல்;

 ல் தேய்த்து, முகம் கழுவிக்கொண்டு சில நிமிடங்கள் அமைதியாக தியானம் செய்வது நல்லது. மனதில் எழும் தேவையில்லாத எண்ணங்களை விலக்கி அன்றைக்கு செய்யப் போகும் வேலைகளில் கவனம் செலுத்தவும் நாள் முழுக்க ஈடுபாட்டுடனும் கவனத்துடன் வேலை செய்யவும் உதவும். கடினமான பணிகளை செய்வதற்கு இது மிகவும் உதவும்.

திட்டமிடுவது

திட்டமிடாமல் வேலை செய்யும்போது பரபரப்பு, அவசரம் நிலவும். செய்யும் வேலைகளில் தவறுகள் நேரும். எனவே அன்றைக்கு என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமோ அனைத்தையும் அழகாக திட்டமிடுவது அவசியம். அன்றைக்கு என்ன உடை உடுத்துவது என்பதில் ஆரம்பித்து இரவு வரை செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிடுதல் அவசியம். அதை இவர் நோட்டில் கூட குறித்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
உடலுக்குச் சிறந்தது ஒமேகா 3 அமிலமா? ஒமேகா 6 அமிலமா?
Motivation image

பால் சேர்க்காத டீ அருந்துதல்;

பால் சேர்க்காத டீ அருந்துதல் உங்களை உற்சாகமாக வைக்கும். கிரீன் டீ அல்லது மூலிகை டீ குடிக்கலாம். அதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பாற்றலை தரும். மனதையும் சுறுசுறுப்பாக வைக்கும்.

உடற்பயிற்சி;

தினமும் 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள செல்களை ஊக்குவித்து புத்துணர்ச்சி தரும். 15 நிமிடம் நடக்க வேண்டும். அப்போது எண்டார்பின்கள் சுரந்து மனதுக்கு உற்சாகம் அளிக்கும். 10 நிமிடம் யோகா செய்ய வேண்டும். இது எல்லாமே உடலுக்கும் மனதுக்கும் தேவையான உற்சாகத்தையும் எனர்ஜியையும் தரும்.

குளிர்ந்த நீரில் குளிப்பது;

து உடலுக்கு சுறுசுறுப்பை அளிக்கிறது. தேவையான எனர்ஜி அளிக்கிறது அன்றைய நாள் எதிர்கொள்வதற் கான சுறுசுறுப்பை அளிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com