பேராசை பெரு நஷ்டம்னு ஏன் சொன்னாங்க தெரியுமா?

தும்பாட் திரைப்படம்...
தும்பாட் திரைப்படம்...

‘தும்பாட்’ என்ற திரைப்படம் சில வருடங்களுக்கு முன் வந்தது. அதில் வரும் ஒரு காட்சி என்னை மிகவும் கவர்ந்தது. அது என்னை கவர்ந்தது மட்டுமில்லாமல் தலையிலே ஒரு குட்டு வைத்து சிறந்த வாழ்க்கைப் பாடத்தையும் சேர்த்தே கற்றுக்கொடுத்தது. அப்படி என்னதான் அந்த காட்சியில் இருக்கிறது என்று சொல்கிறேன் வாருங்கள்!

தும்பாட் கதையின்படி உலகம் தோன்றியபோது செல்வ வளத்திற்கான கடவுள் 160 மில்லியன் கடவுள்களை படைத்தார். அதில் முதல் கடவுளாக படைத்தது ஹஸ்தரை தான். ஹஸ்தருக்கு செல்வம் மற்றும் தானிய வளங்கள் மீது ஆசை வந்தது.  எல்லாவற்றையும் தான் மட்டுமே அபகரித்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான். எப்படியோ தங்கத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டான். ஆனால் தானியத்தை அபகரிக்க முயற்சிக்கும்போது செல்வ வளத்திற்கான கடவுள் அவனை சிறைப்பிடித்து தாயின் வயிற்றிலேயே அடைத்து விட்டார். அதாவது பூமியில். அத்துடன் தானியங்களை ஹஸ்தரால் தொடமுடியாது என்று சாபமும் கொடுத்துவிட்டார். அவனுக்கு என்று கோவில்கள், வழிப்பாடுகள் இருக்காது என்றுமே கூறிவிட்டார். ஆனால் ஹஸ்தருக்கென்று ஒரே ஒரு கோவில் இருக்கும் சாபம் காரணமாக அந்த ஊரில் எந்நேரமும் மழை பெய்து கொண்டேயிருக்கும்.

விநாயக்தான் இக்கதையின் நாயகன் அவன் சிறுவயது முதலே அந்த ஹஸ்தர் கோவிலில் இருக்கும் புதையல் பற்றிய கதைகளை கேட்டிருப்பான். அவனுக்கு அந்த புதையலை அடைய வேண்டும் என்று ஆசை. ஆனால் அவன் தாய் அவனை அந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு கூட்டி சென்று விடுவாள். ஆனாலும் அவனுக்கு அந்த புதையலை எப்படியாவது அடைய வேண்டும் என்ற வெறி இருந்து கொண்டேயிருக்கும். அவன் வளர்ந்த பிறகு திரும்பி அந்த ஊருக்கு புதையலை எடுப்பதற்காகவே வருவான்.

அந்த புதையில் இருக்கும் ரகசியத்தை ஒரு மூதாட்டியின் மூலம் அறிந்து கொள்வான். அந்தப் புதையல் அங்குள்ள கிணற்றின் வழியே செல்லும் சுரங்க பாதையிலே தான் இருக்கும்.

அங்கேதான் விநாயக் முதன் முதலில் ஹஸ்தரை பார்ப்பான். ஹஸ்தர் கடவுள்  தன்னுடைய இடுப்பிலே தங்க காசுகளை முடிந்து வைத்திருப்பார். அவருக்கு மாவால் செய்த உணவை உண்ண கொடுத்து விட்டு, அதை உண்டு கொண்டிருக்கும் வேளையில், அந்த கவனச்சிதறலை பயன்படுத்தி அதன் இடுப்பில் இருக்கும் தங்க காசுகளை எடுத்து வந்துவிடுவான். தப்பி தவறி ஹஸ்தர் அவனை தொட்டுவிட்டால் கதாநாயகனும் சாபத்தால் பாதிக்கப்படுவான். இருப்பினும் ஆசை யாரை விட்டது, இதையே தொடர்ந்து செய்து அவன் பெரும் பணக்காரனாகவும் ஆகிவிடுவான்.

இப்படியே காலங்கள் ஓட, இப்போது கதாநாயகனுக்கு வயதாகி விடுகிறது. அதனால் இந்த ரகசியத்தை தன் மகனிடம் கூற வேண்டும் என்று அவனையும் அழைத்து சென்று ஹஸ்தரிடம் தங்க காசுகளை எப்படி எடுப்பது என்பதை சொல்லிக் கொடுக்கிறான். இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த மகன் கதாநாயகனுக்கு ஒரு யோசனை தருகிறான். இதுவரை ஹஸ்தருக்கு ஒரே ஒரு மாவினால் ஆன உணவு பொருளை கொடுத்தீர்கள். அதனால் தங்க காசுகளை எடுப்பதற்கான நேரம் நமக்கு குறைவாகவேயிருந்தது. அதனால் இனி ஹஸ்தருக்கு நிறைய உணவு பொருட்கள் கொடுத்தால் நிறைய நேரம் தங்க காசுகளை எடுக்க கிடைக்கும் என்று கூறுவான். இந்த யோசனை கதாநாயகனுக்கு பிடித்து போகவே அவனும் இந்த முறை நிறைய உணவு பொருட்களை எடுத்து கொண்டு வருவான்.

இதையும் படியுங்கள்:
துத்தி இலையின் அற்புத சக்தி.. தொடர்ந்து சாப்பிட்டால்? 
தும்பாட் திரைப்படம்...

இங்கேதான் விதி விளையாடும். அவன் 50 மாவினாலான உணவை எடுத்து வந்து வைத்திருப்பான். ஹஸ்தர் வருகைக்காக கதாநாயகனும் அவனுடைய மகனும் ஆவலுடன் காத்திருப்பார்கள். அப்போது அவன் எதிர்ப்பாராத ஒன்று நடக்கும், அங்கே 50 ஹஸ்தர்கள் வருவர். இதைத்தான் பேராசை பெருநஷ்டம் என்று சொல்லுவார்கள். முன்பு கதாநாயகன் ஒரே ஒரு மாவினாலான உணவை எடுத்து வருவான் ஒரு ஹஸ்தர் வந்தது. அப்போது அவனுக்கு இருந்தது ஆசை. இப்போது 50 எடுத்து வரவும் 50 ஹஸ்தர்கள் வந்து நிற்கிறது. இப்போது அவனுக்கு வந்தது பேராசையல்லவா?

இந்தக் காட்சி உண்மையிலேயே பார்வையாளார்களை அதிர்ச்சிக்குள்ளாகியது என்றே சொல்ல வேண்டும். ஆசைப்படுவதற்கும், பேராசைப்படுவதற்கும் நூலிழையே வித்தியாசம் உள்ளது. ஆசைக்கு ‘போதும்’ என்று சொல்லும் மனம் உண்டு. ஆனால் பேராசை என்பது முடிவிலியாகும். எப்போதும் இருப்பதை வைத்து வாழ்வது சிறந்ததாகும். இப்படி இருப்பது எல்லா சமயங்களிலும் கைக்கொடுக்கும். எல்லாமும் இருக்கும் போதும் வாழ முடியும், எதுவுமே இல்லையென்றாலும் அதிக சிரமம் படமாட்டோம். இந்த காட்சியை பார்க்கும் போது ‘நங்’கென்று தலையிலே குட்டு ஒன்றை வைத்து அருமையான வாழ்க்கை பாடத்தை கற்று கொடுத்தது போல தோன்றியது. என்ன நான் சொல்வது சரிதானே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com