துத்தி இலையின் அற்புத சக்தி.. தொடர்ந்து சாப்பிட்டால்? 

துத்தி இலை.
துத்தி இலை.

இந்தியாவில் குறிப்பிடத்தக்க மருத்துவ குணங்கள் நிறைந்த பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் மூலிகைகளை இயற்கை நமக்கு அளித்துள்ளது. அப்படி பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய தாவரம் எதுவென்றால், அது துத்தி இலைதான். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இந்தத் தாவரம் பல ஆரோக்கிய நன்மைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்தப் பதிவில் துத்தி இலைகளின் நன்மைகளைப் பற்றி நாமும் தெரிந்து கொள்ளலாம். 

1. ஊட்டச்சத்து நிறைந்தது: துத்தி இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கான விட்டமின் ஏ, சி மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ளது. இவை சிறந்த ஆக்சிஜனேற்றிகளாக செயல்பட்டு, தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியமான சருமத்தைப் பராமரிக்கவும், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

2. அழற்சி எதிர்ப்பு பண்புகள்: உடலில் ஏதேனும் அலர்ஜி பாதிப்பு உள்ளவர்கள், துத்தி இலைகளை தாராளமாக சாப்பிடலாம். இது பல்வேறு அழற்சி நிலைகளைத் தணிக்க உதவும். இந்த இலைகளில் flavonoids & phenols போன்ற உயிர் வேதியியல் சேர்மங்கள் உள்ளன. இவை வீக்கம், அலர்ஜி, மூட்டு வலி போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும்.

3. காயம் குணப்படுத்துதல்: துத்தி இலைகள் பலகாலமாகவே காயத்தை குணப்படுத்தும் மேற்பூச்சாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் இலைகளை கசக்கினால் கொழகொழப்பாக மாறிவிடும். இதை அப்படியே காயத்தின் மீது தடவும்போது, ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி, காயம் விரைவாக குணமாவதை ஊக்குவிக்கிறது. 

4. செரிமானத்துக்கு உதவும்: நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த பல வழிகளில் உதவும் துத்தி இலைகள், ஒரு இயற்கை மலமிளக்கியாகும். மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் துத்தி இலைகளை சாப்பிடும்போது எளிதில் குணமாகும். மேலும் இவை குடல் இயக்கத்தை ஒழுங்குப்படுத்தி, செரிமானத்திற்கு பல வழிகளில் உதவுகிறது. 

இதையும் படியுங்கள்:
கணையத்தின் ஆரோக்கியம் காக்கும் பன்னிரண்டு வகை  உணவுகள்!
துத்தி இலை.

5. சுவாச ஆரோக்கியம்: சுவாசப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பாரம்பரியமாகவே துத்தி இலைகள் பயன்படுத்தப்படுகிறது. இருமல், சளி, நெஞ்செரிச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும் தன்மை, இந்த இலைகளுக்கு உண்டு. குறிப்பாக துத்தி இலைகள், வீக்கமடைந்த காற்றுப்பாதையை சரி செய்து, ஆஸ்துமா அல்லது மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

துத்தி இலைகள் பல வழிகளில் நமது நல்வாழ்க்கைக்கு உதவினாலும், அவற்றை நீங்கள் உட்கொள்வதற்கு முன் ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது நல்லது. குறிப்பாக நீங்கள் வேறு ஏதேனும் நோய்களுக்கு ஏற்கனவே மருந்துகளை உட்கொண்டு வந்தால், மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல், இயற்கை சார்ந்த மருந்துகளை உங்கள் விருப்பத்தின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டாம். எனவே துத்தி இலைகளை சரியாக பயன்படுத்தி அதன் ஆரோக்கிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com