motivation Image
motivation ImageImage credit - pixabay.com

‘காலத்திற்கு ஏற்ற மாற்றம் தேவை’ ஏனென்று தெரியுமா?

Published on

‘அந்த காலத்தில் நானெல்லாம்' என்று பழைய விஷயங்களை நினைத்து அசை போடும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. பழைய கால நினைவுகள் மகிழ்ச்சியை தந்தாலும் காலத்துக்கு ஏற்றபடி மாறுவது என்பது மிகவும் அவசியமாகும். அதுவும் தொழில் துறையில் இருப்பவர்கள் கண்டிப்பாக நேரத்திற்கு தகுந்தார்போல தம்முடைய தொழிலில் மாறுதல் ஏற்படுத்தும்போது அசுர வளர்ச்சியை காண்கிறார்கள்.

அமேஸான் முதலில் ஒரு புக் ஸ்டோராக இருந்தது. ஆனால் மக்களின் தேவையை பொருத்து அது E-Commerce platform ஆக மாறியது. இன்டர்நெட் போன்ற தொழில்நுட்பம் மற்றும் மக்களின் தேவையை உணர்ந்து அமேஸான் செய்த உடனடி மாற்றமே இன்று உலகிலேயே அசைக்க முடியாத தலை சிறந்த நிறுவனமாக அமேஸான் இருப்பதற்கு காரணமாகும். அது மட்டுமில்லாமல் ஆன்லைன் ஷாப்பிங் முதன்முதலில் இந்தியாவில் வந்த போது மக்கள் பணத்தை செலுத்திவிட்டு பொருளுக்கு காத்திருப்பதற்கு பயந்தார்கள். அதை புரிந்து கொண்டு Cash on delivery போன்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது. இதுபோன்ற சின்ன சின்ன மாற்றங்கள் தான் அமேஸானின் அடுத்தடுத்த அசுர வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது.

இதுவே நோக்கியா நிறுவனத்தை எடுத்து கொண்டால், சரியான நேரத்தில் சரியான மாற்றம் நடக்காததால், மொத்த சாம்ராஜ்ஜியத்தையும் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஸ்மார்ட் போனின் வருகை ஏற்பட்ட போது, அதற்கு தகுந்தாற்போல தன்னுடைய போன்களில் மாற்றம் ஏற்படுத்தாமல் இருந்தது, சரியான மார்க்கெட்டிங் ஸ்டிரேட்டஜி (Marketing strategies) இல்லாதது, கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டது ஆகிய காரணங்களே நோக்கியாவின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

என்னதான் ஒருகாலத்தில் நோக்கியா நம்பர் 1 இடத்தில் இருந்திருந்தாலும் புது தொழில்நுட்பம் வர வர அதற்கு ஏற்றார் போல மாற்றங்களை செய்து கொள்ளாமல் விட்டது தோல்விக்கு காரணமானது என்றே சொல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு வைர நகை மீது ஆசையா? ஜாதகம் என்ன சொல்கிறது தெரியுமா?
motivation Image

நீங்கள் ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்துகிறீர்கள் என்பது வெற்றி பெற்றதற்கான அறிகுறி இல்லை. சரியான நேரத்தில் சரியான மாற்றத்தை மக்களின் தேவையறிந்து கொண்டு வருவது, பிரச்னைகளை சமாளித்து அதற்கு ஏற்றார் போல வளர்ச்சியடைவதையே வெற்றியாக கருத முடியும்.

சரியான நேரத்தில் செய்யக்கூடிய சின்ன மாற்றம் கூட மிகப் பெரிய பிரம்மாண்ட வெற்றியை தரும். அதற்கு சரியான உதாரணம் அமேஸான் நிறுவனம். மாற்றம் இல்லையேல் மக்கள் மறந்துவிடுவார்கள், அதற்கு சரியான உதாரணம் நோக்கியா நிறுவனம். இதை சரியாக புரிந்து கொண்டு முடிவெடுக்கும் போது கண்டிப்பாக வெற்றி நிச்சயம்.

logo
Kalki Online
kalkionline.com