எந்த ஒரு சூழ்நிலையையும் நிதானமாக கையாள வேண்டும் ஏன் தெரியுமா?


Any situation should be handled calmly...
Try to Anger control...Image Credits: Freepik
Published on

ம் வாழ்க்கையில் பல தருணங்களில், பிரச்னை என்ன என்பதைப் புரிந்துக் கொள்ளாமலேயே அவசரப்பட்டு கோபத்தில் அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு எதிர்வினையாற்றி விடுகிறோம். பிறகு யோசித்துப் பார்த்தால், அதே சூழ்நிலையை  நிதானமாக கையாண்டிருந்தால் அதன் முடிவு வேறுவிதமாக மாறியிருக்கும் என்று தோன்றும்.  இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

ஒரு ஊரில் ஜான் என்பவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு சின்ன வயதிலிருந்தே தான் சம்பாதித்து ஒரு கார் வாங்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. ஒருநாள் அவர் நினைத்த மாதிரியே அவர் ஆசைப்பட்ட காரை வாங்குகிறார். அந்த காரில் ஒரு சின்ன கீறல் கூட ஏற்படாமல் கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொள்கிறார்.

ஒருவாரம் கழித்து ஆபிஸ் போக காரை எடுக்க செல்லும் போது அவருடைய குழந்தை காரில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருப்பதை கவனிக்கிறார். தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அந்த குழந்தையை அடித்துவிடுகிறார். கோபத்தில் சற்று வேகமாக அடித்ததில் குழந்தையுடைய கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு விடுகிறது.

மருத்துவமனையில் டாக்டர் மருந்து வாங்கி வர சொல்லி அனுப்புகிறார். ‘இருந்தாலும் நாம் இவ்வளவு கோபப்பட்டிருக்கக் கூடாது’ என்று வருந்திக்கொண்டே வந்து கார் கதவை திறக்கிறார். அங்கே அந்த குழந்தை, 'I love you daddy' என்று எழுதி வைத்திருப்பதைப் பார்க்கிறார். இதைப் பார்த்த ஜான் அந்த இடத்திலேயே கண்கலங்கி நின்றார். அதற்கு பிறகு அவருடைய வாழ்க்கையில் கோபம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது.

இதையும் படியுங்கள்:
நம்முடன் பழகுபவர்கள் உண்மையாக இருக்கிறார்களா என்பதை எப்படி தெரிந்துக் கொள்வது?

Any situation should be handled calmly...

இதுபோலத்தான் நாமும் ஒரு சூழ்நிலையை முழுமையாக தெரிந்துக்கொள்ளாமல் அடுத்தவர்கள் மீது அதிகமாக கோபப்பட்டு விடுகிறோம். அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு எதிர்வினையாற்றி விடுகிறோம். கொஞ்சம் பொறுமையாக அந்த சூழ்நிலையை  கையாண்டிருந்தால், அதன் முடிவு நல்ல விதமாக அமைந்திருக்கும்.

எனவே, அடுத்தமுறை கோபம் வரும்போது மற்றவர்களை நம் கோபம் எந்த அளவு பாதிக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். கண்டிப்பாக கோபத்தை கட்டுப்படுத்தி அந்த சூழ்நிலையை நமக்கு சாதகமாக மாற்ற முடியும். முயற்சித்துதான் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com