உங்க மனம் சொல்வதை மட்டும் கேட்பவரா நீங்க? வாழ்க்கை உங்கள் கையில்!

motivation image
motivation imageImage credit - pixabay.com
Published on

"Follow your heart, your instincts. People might try to dissuade you from your passion, but no one can live your life but you. உங்கள் மனம் சொல்லும் வழியைப் பின்பற்றுங்கள், உங்கள் உள்ளுணர்வையும். பிறர் உங்களைத் திசை திருப்பவும் கூடும், ஆனால் உங்கள் வாழ்க்கையை வேறு யாரும் வாழ்ந்திட இயலாது. - olympia dukakis.

ஒலிம்பியா டுகாகிஸ் பிரபலமான  அமெரிக்க நடிகை. அவர் 130 க்கும் மேற்பட்ட மேடை தயாரிப்புகளிலும், 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் மற்றும் 50 தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர். அமெரிக்க நாடக அரங்கில் நடிகராகவும், இயக்குநராகவும், ஆசிரியராகவும், ஒரு டஜன் அல்லது அதற்கு மேற்பட்ட படங்களில் தோன்றிய பிறகு, தனது 89 வயதில் இறந்த ஒலிம்பியா டுகாகிஸ், சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்றதன் மூலம் ஒரே இரவில் மிகவும் பிரபலமானவர். திரைப்படங்களிலும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

இவரது வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு  நிகழ்வுகள் பல தன்னம்பிக்கை கதைகளை சொல்கிறது. மேலேயுள்ள இவர் சொன்ன கருத்து வெற்றி பெறத் துடிப்பவர்கள் பின்பற்ற ஏற்றது.

ஆம். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் மனதும் வெவ்வேறு சிந்தனைகள் மற்றும் வெவ்வேறு தருணங்களால் நிரம்பியவை. ஒருவர் பார்வையில் சரி என்று படுவது மற்றவருக்கு தவறாகப் படலாம். ஒருவர் பேசும் சொற்கள் அவருக்கு நியாயமானதாக தெரிந்தாலும் அதை எதிரிலிருந்து கேட்பவர்களுக்கு அநியாயமாகவும் தெரியலாம்.

நிறைய வெற்றியாளர்களை நன்கு கவனித்து பாருங்கள். தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்பதுபோல் வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி தங்கள் மனம் சொல்வதை மட்டுமே அவர்கள் விதிமுறைகளாக வைத்திருப்பார்கள்.  இதைப் பார்க்கும் நாம் ஒரு விதத்தில் அவரின் சர்வாதிகாரம் என்று  எடுத்துக் கொண்டாலும் மறுபக்கம் வெற்றிக்கான அஸ்திவாரமே அது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்தவரின் தலையீடு நமது செயல்களில் இருக்கும் போது நம்மால் சுதந்திரமாக செயலாற்ற முடியாது என்பதுதான் உண்மை. நமது மனம் சொல்லும் நியாயமான விஷயங்களை கேட்டு அதன்படி நடக்கும் போது எளிதாக நம்மால் அந்த விஷயத்தில் கவனம் செலுத்த முடியும். ஏனெனில் நமது உள்ளுணர்வு நமக்கு அங்கு பாதுகாப்பு தருகிறது இது நாம் சொன்னது என்று. ஆனால் அதுவே பிறர் சொல்லக் கேட்டு நாம் ஒரு செயலில் இறங்கும்போது நமது சுயம் பாதிக்கப்பட்டு தன்னம்பிக்கை அங்கு குறையத் துவங்குகிறது.

தேர்வின்போது தான் படித்ததை சுயமாக எழுதும் மாணவன் தங்கு தடை இன்றி எழுதி வெற்றி பெறுகிறான். இதுவே அடுத்தவன் சொல்லிக் கொடுத்து அதைக் கேட்டு எழுதும் மாணவன் தட்டு தடுமாறி எழுதி தோல்வி முகத்தை தழுவுகிறான். இது நம் வாழ்வின் அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும் சிறு உதாரணம்தான்.

இதையும் படியுங்கள்:
அன்பெனும் நீர் ஊற்ற மகிழ்ச்சியும் வெற்றியும் தேடி வரும்!
motivation image

ஒரு வீடு வாங்க வேண்டும் என்றால் அதை கனவில் கண்டபடி கட்டி முடிக்கத் தேவையான பணத்தை சம்பாதிப்பது முதல் அதை கட்டி முடித்து அந்த வீட்டில் குடியேறுவது வரை அவரவர் மனம் சொல்வதை விரும்பினால் நாம் விரும்பும் வகையில் அந்த வீடும் அமைந்திருக்கும். ஆலோசனை சொல்கிறேன் பேர்வழி என்ற பிறரின் தலையீட்டில் அந்த வீட்டை உருவாக்கினால் அவர்கள் சொன்ன அந்த விஷயங்கள் நம் கண்களில் படும்போதெல்லாம் நமக்கு ஒரு விதமான அழுத்தம் வருவதை தவிர்க்க முடியாது. ஏனேனில் அவை நம்முடையது.

ஆகவே நாம் நாமாக இருப்போம். நமது மனது சொல்வதை மட்டும் கேட்போம். அத்துடன் எச்சரிக்கை தரும் உள்ளுணர்வையும் கவனிப்போம். அப்போதுதான் நம் வாழ்க்கையை நாமே வாழ முடியும் வெற்றியுடன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com