நாம் நல்ல முன்னோடியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்?

Good precursor
Good precursor
Published on

இன்றைய வேகமாக வளர்ந்துவரும் உலகில், நாம் ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும் என்றால், எதையாவது முதலில் செய்துதான் நிரூபிக்க வேண்டும். இது உங்கள் தொலைநோக்கு பார்வை, தைரியம் மற்றும் நீங்கள் சந்திக்கப் போகும் பின்னடைவுகளின் தாக்கத்தைப் பொறுத்தே அமையும். முன்னோடிகள் யார்? தெரியாதவற்றிற்குள் நுழையத் துணிபவர்கள்; சவால்களை எதிர்கொண்டு, மற்றவர்களை தங்கள் வழியைப் பின்பற்ற ஊக்குவிப்பவர்கள். அப்படி மற்றவர்களுக்கு முன்னோடியாக உங்களை எவ்வாறு உருவாக்கிக்கொள்ளலாம் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

வளர்ச்சி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்:

ஒரு முன்னோடியாக இருப்பதற்கான அடித்தளம் ‘வளர்ச்சி மனப்பான்மையே’. அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் உங்கள் திறன்களையும் புத்திசாலித்தனத்தையும் எவ்வாறு வளர்த்துக்கொள்கிறீர்கள் என்பதே இதன் பொருள். முன்னோடிகள் சவால்களைத் தடையாக எடுத்துக்கொள்ளாமல் அதை ஒரு வளர்ச்சிக்கான வாய்ப்பாகக் கருதுவார்கள். ஒவ்வொரு பின்னடைவும் வெற்றிக்கான படிக்கட்டுகள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதால்தான் அவர்கள் தோல்வியைக் கண்டு பயப்படுவதில்லை. இப்படி வளர்ச்சி மனப்பான்மையை வளர்ப்பதன் மூலம், புதிய பாதைகளை உங்களால் முன்னெடுத்து தொடங்கமுடியும்.

ஒரு தெளிவான பார்வையை வளர்த்துக்கொள்ளுங்கள்:

ஒரு முன்னோடியாக விளங்குவதற்கு, அவர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்பது பற்றிய ஒரு தெளிவான பார்வை இருக்க வேண்டும். இந்தப் பார்வைதான் உங்களுக்கோ அல்லது பிறருக்கோ ஒரு வழிகாட்டும் நட்சத்திரமாக செயல்படுகிறது. உங்கள் உணர்வுகள், மதிப்புகள் மற்றும் இலக்குகள் பற்றிய சிந்தனைக்கு நீங்கள் நேரத்தைச் செலவிடுவது முக்கியம். நீங்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்கள்? நீங்கள் என்ன மரபை விட்டுச் செல்ல விரும்புகிறீர்கள்? போன்றவற்றுக்கு நீங்கள் ஒரு தெளிவான பார்வையைப் பெற்றவுடன், அதை செயலாற்றக்கூடிய பயணம் எவ்வளவு கடினமாக இருந்தாலும், நீங்கள் செலுத்தும் கவனம் மற்றும் உத்வேகம்தான் உங்கள் இலக்கை அடைய வைக்கும்.

தைரியம் மற்றும் சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்:

அறியப்படாத விஷயத்துக்குள் நுழைவதற்கு அபாரமான தைரியம் தேவை. முன்னோடிகள் ஆபத்துகளை கடக்கவும், நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்ளவும் தயாராக இருப்பார்கள். பயம் என்பது நம் அன்றாட செயல்பாட்டின் ஒரு இயல்பான பகுதி என்பதை அவர்களின் மனதில் என்றைக்கும் நிலைத்திருக்கும். காரணம் ஒரு முன்னோடியின் பாதை பெரும்பாலும் சவால்கள் மற்றும் பின்னடைவுகள் நிறைந்ததாக இருக்கும். அப்படிப்பட்ட பின்னடைவை சந்திக்கும்போதுதான், தோல்விகளில் இருந்து மீளவும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தொடர்ந்து முன்னேறவும் அது அனுமதிக்கும்.

இதையும் படியுங்கள்:
அச்சத்தை அச்சமின்றி எதிர்கொள்ளுங்கள்!
Good precursor

புதுமை மற்றும் படைப்பாற்றலை வளர்ப்பது:

புதுமை மற்றும் படைப்பாற்றல் – இவைதான் முன்னோடிகளிடம் இயல்பாக இருக்கக்கூடியவை. முன்னோடிகள் சாதாரண மனிதரைக் காட்டிலும் சற்று தனித்துவமாய் சிந்திப்பார்கள் மற்றும் ஒரு விஷயத்தைச் செய்ய புதிய மற்றும் சிறந்த வழிகளை எப்போதும் தேடிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் தற்போதைய நிலையில் திருப்தி அடையாமல், மேலும் தொடர்ந்து புதுமைகளைப் புகுத்தி தங்களை மேம்படுத்தவே முயல்வார்கள். உங்கள் சிந்தனைக்குச் சவால்விடும் நபர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள். அதுவே வெவ்வேறு கோணங்களில் யோசிக்க உங்களை ஊக்குவிக்கும்.

வலுவான உறவுகளை உருவாக்குங்கள்:

எந்த முன்னோடியும் தனியாக வெற்றி பெறுவதில்லை. வலுவான, ஆதரவான உறவுகளை உருவாக்குவது மிகவும் அவசியம். உங்கள் பார்வை மற்றும் மதிப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்கு தகுந்த வழிகாட்டிகள் மற்றும் கூட்டு பணியாளர்களுடன் செயலாற்ற பாருங்கள். இப்படிப்பட்ட உறவுகளால்தான் ஆதரவு, ஊக்கம் மற்றும் மதிப்புமிக்க கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. உங்கள் இலக்குகளை அடைய உதவும் வாய்ப்புகளை இவை உருவாக்குகின்றன.

இதையும் படியுங்கள்:
இயல்பான நிலையில் இருப்பவர்களுக்கு எப்போதும் சந்தோஷம்தான்!
Good precursor

உங்கள் நோக்கத்தில் உறுதியாக இருங்கள்:

இறுதியாக, உங்கள் நோக்கத்தில் உறுதியாக இருப்பது முக்கியம். ஒரு முன்னோடியின் பயணம் நீண்டது மற்றும் பெரும்பாலும் சவாலானது. விட்டுக்கொடுக்க நினைக்கும் நேரங்கள் வரும். இந்த மாதிரி தருணங்களில், உங்கள் தொலைநோக்கு பார்வையுடன் மீண்டும் இணைந்து, நீங்கள் ஏன் ஆரம்பித்தீர்கள் என்பதை உங்களுக்கு நீங்களே நினைவூட்டுவது முக்கியம். இப்படி உங்கள் நோக்கத்திற்கு உண்மையாக இருந்தாலே கடினமான காலங்களில் அது உங்களுக்கு வழிகாட்டியாக செயல்படும். இறுதியில் நீங்கள் காட்டிய இந்த அர்ப்பணிப்பே, உங்களைப்போல இருக்க நினைக்கும் மற்றவர்களையும் தங்கள் சொந்தப் பாதைக்கான பயணத்தைத் தொடர ஊக்குவிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com