உங்கள் மனதுக்குப் பிடித்த வேலை அமைய வேண்டுமா? இதை செய்தாலே போதும்!

Motivation Image
Motivation Image

னதுக்குப் பிடித்த வேலை நமக்கு கிடைக்க வேண்டும் அப்படியே கிடைத்தாலும் அது நல்லபடியாக அமைய வேண்டும் என்றெல்லாம் நாம் கனவு காண்கிறோம். ஆனால் இன்று இருக்கும் சூழ்நிலையில் அப்படி பெரும்பாலும் அமைவதில்லை. கிடைத்த வேலையில் மனநிறைவு கிடைக்குமா என்றுதான் நாம் தேடிக் கொண்டிருக்கிறோம். அதுதான் நிஜம்.

இளம் வயதில் இருந்தே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். நான் திறமையான அதிகாரியாக ஆக வேண்டும், மருத்துவராக ஆக வேண்டும், என பல கனவுகள் இருக்கும். இவற்றையெல்லாம் நீங்கள் அடைய வேண்டும் என்றால், பாசிடிவ் எண்ணம், செயல் மற்றும் விடாமுயற்சி ஆகியவை தேவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதோ பிடித்த வேலையைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த சில டிப்ஸ்கள் இங்கே தெரிந்துகொள்ளவோம்.

விரும்பிய வேலையை அடையாளம் காணுதல்:

குடும்பத்தை நடத்த வேண்டும் என்பதற்காக, ஏதாவது ஒரு வேலையில் சேர வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் படித்த படிப்பிற்கான வேலை அல்லது பிடித்த வேலையைத் தேட முயற்சி செய்யுங்கள். இதோடு விரும்பிய சம்பளம், பிடித்த வேலை என்பதோடு எந்த இடத்தில் அதாவது ஊரில் பணிபுரிந்தால் உங்களுக்கு வசதியாக இருக்கும் என்பதையும் தேர்வு செய்யவும்.

கனவு காணுதல்: 

ஒவ்வொருவரும் வேலை கிடைப்பதற்கு முன்னதாக, பிடித்த வேலை கிடைத்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? எப்படியெல்லாம் திறமையின் மூலம் முன்னேற்றத்தை அடையலாம் என நினைத்து கனவு காண்போம். நீங்கள் என்ன கனவு கண்டீர்களோ? அதை உங்களது பணியில் செய்ய முயலுங்கள். நிச்சயம் எந்த இடையூறுகள் வந்தாலும் உங்களால் வெற்றி காண முடியும்.

நேர்மறையான மனநிலையை உருவாக்குங்கள்:

இன்றைக்கு ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். உங்களுக்கு எந்த வேலையை செய்தால் நன்றாக இருக்கும் என்றும், அதன் மேல் ஆசைகள் இருந்தால் அதை வெளிப்படுத்த முயலுங்கள். வேலைக்கான தேடல்கள் மற்றும் பணிகளை செய்யுங்கள்.

செயல்முறைப்படுத்துதல்: 

நீங்கள் உங்களுக்கான வேலை வாய்ப்புகளைத் தேட வேண்டும். எந்த துறையில் நீங்கள் வேலைக்குச் செல்ல விரும்புகிறீர்களோ? அத்துறையில் உள்ளவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். என்ன தேவை? என்பதைத் தெரிந்துக்கொண்டு உங்களுடைய வேலைக்கான விண்ணப்பங்களுடன் நேர்காணலுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
உருட்டி விட்டான் பாறை, தோல் உரிச்சான் மேடு, தொங்க விட்டான் குகை இதெல்லாம் உள்ள கோட்டை எங்குள்ளது தெரியுமா?
Motivation Image

விடாப்பிடியாக இருத்தல்:

இன்னும் வேலை கிடைக்கவில்லையே? என்ற எண்ணத்தை இளைஞர்கள் முதலில் தூக்கி எறிய வேண்டும். ஒரு பாசிட்டிவ்வான அணுகுமுறை மற்றும் விடாமுயற்சியோடு உங்களது வேலையை நீங்கள் தேட வேண்டும். குறிப்பாக சரியான நேரத்தில் நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கவும்.

ஒருவேளை பல முறை முயற்சித்தும் உங்களது கனவு வேலை கிடைக்கவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். தற்போது கிடைத்திருக்கும் வேலையை அக்கறையுடன் செய்வதோடு நன்றி தெரிவிக்கவும். இதுபோன்ற வழிமுறைகளை நீங்கள் வாழ்க்கையில் பின்பற்றினாலே, நிச்சயம் உங்களுக்கான நல்ல வேலையை நீங்கள் பெற முடியும். சரியான நேரத்தில், சரியான வேலை கிடைக்கும் என்பதை மட்டும் நினைவில் வைத்து அதற்கான முயற்சியை மட்டும் எடுங்கள்.

மேற்கண்டவைகளை  படித்து முடித்த பிறகு உங்கள் மனதில் ஒரு தெம்பு பிறக்கும் நிச்சயமாக நம் மனதிறகு பிடித்த வேலை நமக்கு அமையும் என்ற தெம்புதான் அது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com