

உடல் மொழி (Body language) பற்றிய எவ்வளவு ஆளமான புரிதல் உங்களிடம் இருக்கிறது. நாம் இன்டர்வியூவில் தேர்வாவது முதல் காதல் கைக்கூடுவது வரை, மதிப்பு கூடுவது முதல் தலைவர்கள் உருவாவது வரை, மக்களை கட்டிப்போட்டு தன்னுடைய ஆளுமைக்கு கீழ் கொண்டு வருவது வரை இந்த உடல்மொழி என்பது மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இதுவரை பாடி லேங்குவேஜ் பற்றி நீங்கள் கவனிக்காத விஷயங்களைப் பற்றி தான் இந்தப் பதிவில் காண உள்ளோம்.
பொதுவாக பாடி லேங்வேஜ் என்று நாம் சொல்வது ஆடை அலங்காரத்தை மட்டுமில்லை. அதையெல்லாம் தாண்டி மிகவும் நுணுக்கமாக, "இதையெல்லாம் கூடவா கவனிக்க போகிறார்கள்?" என்று நீங்கள் நினைக்கும் விஷயங்கள் மற்றவர்களிடம் தாக்கத்தை உருவாக்கும் விஷயத்தைப் பற்றி பார்க்க போகிறோம்.
1. Walking style
நீங்கள் ஒரு இடத்திற்கு சென்று வாயை திறந்து பேச ஆரம்பிக்க தொடங்குவதற்குள் உங்களை பற்றி நீங்கள் எப்படிப்பட்டவர் என்று அவர்கள் முடிவு செய்து விடுவார்கள். அது எப்படி என்று கேட்கிறீர்களா? அங்கே தான் உங்கள் Walking Style மிக பெரிய தாக்கத்தை உருவாக்குகிறது. உங்கள் தன்னம்பிக்கை எந்த அளவு இருக்கிறது என்பதை நீங்கள் நடப்பதை வைத்து மற்றவர்களால் சுலபமாக கண்டுப்பிடித்துவிட முடியும்.
இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது. நீங்கள் நடக்கும் போது உங்கள் முதுகுத்தண்டு நேராகவும், உங்கள் தோல்கள் நிதானமாகவும் இருக்க வேண்டும். மார்ப்புப்பகுதி நேராக விரிந்த மாதிரி இருப்பதுப்போல பார்த்துக் கொள்ளுங்கள். இது ஆண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை தரும். கீழே குனிந்து தரையை பார்த்தப்படி நடக்காதீர்கள். அது என்ன சொல்லும் என்றால், நான் இங்கே Insecured ஆக இருக்கிறேன். இந்த சூழல் என்னுடைய கண்ட்ரோலில் இல்லை என்பதை காட்டும்.
கைகள் அதனுடைய போக்கில் இயல்பாக அசைந்தால் போதும். மிகவும் வேகமாக ஓடுவதைப்போல் நடக்காதீர்கள். அது யாரோ உங்களை துரத்துவதுப்போன்ற உணர்வைக் கொடுக்கும். மிகவும் பொறுமையாக ஆமைப்போலவும் நடக்கக்கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட Confident ஆன ஒரு நடை வேண்டும்.
2. Standing style
நடக்கும் போது எப்படி பவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதைப்போலவே நிற்கும் போது confident ஆக உணர சில வரைமுறைகள் இருக்கிறது. நம் உடலில் கால்பகுதி 40 முதல் 50 சதவீதம் உள்ளது. அதனால் நாம் எப்படி நிற்கிறோம் என்பது மிகவும் முக்கியமாகும். சிலர் நிற்கும் போது மொபைலை எடுத்து பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். இல்லையென்றால் அங்கும் இங்குமாக பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இது எதைக் காட்டுகிறது என்றால், நீங்கள் பதற்றமாக இருக்கிறீர்கள். அங்கிருக்கும் விஷயத்தில் உங்களுக்கு ஆர்வம் இல்லை என்று புரிந்துக் கொள்வார்கள்.
இரண்டு கால்களிலும் சரியான எடையைக் கொடுத்து நின்றால், நீங்கள் மிகவும் Powerful ஆன நபர் போன்று தெரிவீர்கள். கைகளை கட்டிக் கொண்டிருக்காதீர்கள். அவ்வாறு செய்யும் போது நீங்கள் ஒரு தற்காப்பு மனநிலையில் இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள். எனவே, இதுப்போன்ற விஷயங்களை செய்யாமல் இருந்தாலே மற்றவர்களுக்கு உங்கள் மீது மரியாதை தானாகவே வந்துவிடும்.
3. Sitting style
நீங்கள் எங்கு உட்கார்ந்தாலும் நீங்கள் தான் அந்த இடத்திற்கே பாஸ் என்பதுப் போல உட்கார வேண்டும். மிகவும் ரிலாக்ஷாக தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மிகவும் சிம்பிள். முதுகை ரிலாக்ஷாக வைத்துக்கொண்டு சேரில் சாய்ந்து உட்கார வேண்டும். கூண் விழுந்ததுப்போல உட்காரக்கூடாது. சோம்பலாக உட்கார்ந்தால் ஆர்வம் இல்லை என்று மற்றவர்கள் நினைப்பார்கள். கால்களை ஆட்டுவது, மடக்கி உட்காருவது இதையெல்லாம் தவிர்த்து விடுங்கள்.
4. Hand movements
உங்கள் கைகள் நீங்கள் பேசக்கூடிய வார்த்தைகளுக்கு உயிர்க் கொடுக்கும். இதற்கு முக்கியமான Power gestures இருக்கிறது. நீங்கள் ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டும் என்று நினைக்கும் போது ஒருவிரலை மட்டும் வைத்து சுட்க்காட்டி சொல்லுங்கள். இரண்டு கைகளையும் வைத்து ஒரு சட்டத்தை (Frames) உருவாக்குவதுப் போல பேசுங்கள்.
சரியான நேரத்தில் சரியான கை அசைவை செய்தால் நீங்கள் மிகவும் சக்தி வாய்ந்த நபராக தெரிவீர்கள். இந்த சின்ன சின்ன விஷயங்களை இப்போதிலிருந்தே செயல்பட தொடங்குங்கள். அனைவரும் உங்களிடம் மரியாதையாக நடந்துக் கொள்வதை உணர முடியும். முயற்சித்துப் பாருங்களேன்.