
உங்களை நம்புங்கள். உங்களை உண்மையாகவே நம்புங்கள். ஒரு மலையையே நீங்கள் தகர்த்திக் காண்பிக்க முடியும். நிச்சயமாக நீங்கள் அதைச் செய்யமுடியும். பெருவாரியான மக்கள் இதை நம்புவதில்லை. அதன் காரணமாகவே பெருவாரியானவர்கள் சோர்த்து அயர்ந்து உட்கார்ந்து விடுகின்றனர்.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவேளை மலையையே புரட்ட முடியும் என்று யாரோ சொன்னது எல்லாம் வெறும் புரட்டு, அப்படிச் செய்யவே முடியாது. மலையே நகர்ந்து செல் நகர்ந்து செல், என்றெல்லாம் சொல்லி மலைகள் நகர்ந்ததில்லை. முற்றிலும் நடக்க முடியாத செயல் அது அப்படி நினைத்துக் கொள்வதும் வடிகட்டின முட்டாள்தனமாகும் என்று சிலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.
அப்படிப்பட்டவர்கள் ஒரு மனக்குழப்பத்தில் இருப்பவர்கள். ஒன்று நடக்க வேண்டும் என்று நினைப்பது ஒன்று. ஆனால் அப்படி நடத்தேவிடும் என்று நம்புவது இன்னொன்று. உண்மையில் உங்களுடைய வெறும் ஆசைகள் மட்டுமே ஒரு காரியத்தைச் செய்வதற்கு உதவுவதில்லை.
உதாரணத்திற்கு செல்வச் செருக்கு மற்றும் டாம்பீகத் தோற்றத்தோடு இருக்கும் ஒரு வீட்டை விரும்பிய மாத்திரத்தில் நீங்கள் அடையவே முடியாது. விரும்பிய மாத்திரத்தில் ஒரு தலைமைப் பதவி உங்களை வந்து அடைய முடியாது .வெறும் விருப்பம் உயர்ந்த நிலைகளைக் கொண்டுவர முடியாது.
ஆனால் நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும், மலைகளையே நீங்கள் நகர்த்திக் காட்டலாம். நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும், நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்.
நம்பிக்கை எனும் சொல்லின் சக்தியில் மந்திரமோ தந்திரமோ மாயா ஜாலமோ இல்லை.
நம்பிக்கை என்பது இப்படித்தான் வேலை செய்கிறது. நம்பிக்கை என்பது அழுத்தமான நேர்மறை உணர்வைக் கொண்டது. நான்வென்றே தீருவேன்' என்ற கொள்கையைப் பறைசாற்றுகிறது. சந்தர்ப்பங்களுக்குத் தேவையான சக்தியைப் பெறச் செய்கிறது. நான்-செய்ய - முடியும் என்ற பேருந்துதல் உங்களை ஆட்கொள்ளும் பொழுது, எப்படிச்- செய்வது என்ற வழிமுறைகள் தாமாகவே மேலிடுகின்றன.
இளைஞர்களில் ஒரு சிறு விழுக்காடு நிச்சயம் 'வெற்றி அடைவோம் என்ற அழுத்தமான நம்பிக்கையை உடையவராக இருக்கிறார்கள். செய்து முடிக்க வேண்டிய பணியை அவர்கள் ஆரம்பிக்கும்பொழுது, நிச்சயமாக நான் உயரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன் என்ற அழுத்தமான நம்பிக்கையுடன்தான் அணுகுகிறார்கள். போதுமான அளவுடன் கூடிய நம்பிக்கையே அவர்களை உயரத்திற்கு கூட்டிச் செல்கிறது.
நிச்சயமாக தாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் அது ஒன்றும் நடக்க முடியாத செயல் அல்ல. தங்களுக்கு முன் சென்றவர்கள் விட்டுச் சென்ற நம்பிக்கைத் தடையங்களை இந்த மக்கள் ஆராய்கிறார்கள்.
அவர்களுக்கு முன் வெற்றி பெற்றவர்களின் ஆற்றல் சரித்திரங்களைப் புரட்டுகிறார்கள். எப்படிப் பிரச்சினைகளை அணுகினார்கள்? எப்படி முடிவுகளை எடுத்தார்கள் என்பதை எல்லாம் ஆராய்கிறார்கள். குறிப்பிட்ட பணிகளைத் தொடங்கும் முன் அவர்களுடைய மனப்பாங்கு எப்படி இருந்திருக்கிறது என்பதை எல்லாம் ஆராய்ந்திருக்கிறார்கள்.
தான் நிச்சயமாகச் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கை கொண்டவருக்கே எப்படிச் செய்ய ஆரம்பிக்கலாம் என்ற உணர்வு மேலிட்டு வெற்றி பாதைக்கு செல்கிறார்கள்.