It depends on who we associate with
motivational articlesImage credit - pixabay

நாம் யாருடன் பழகுகிறோம் என்பதை வைத்து நம் குணம் மாறுபடுமா?

Published on

‘உன் நண்பன் யார் என்று சொல். நீ யாரென்று சொல்கிறேன்’ என்று சொல்வதுண்டு. நம்முடைய குணம் நாம் யாருடன் பழகுகிறோம் என்பதை வைத்து மாறுபடும். நல்லவர்களுடன் பழகினால் நல்ல குணங்களும், கெட்டவர்களுடன் பழகினால் கெட்ட குணங்களும் நமக்கு வரக்கூடும். இதைப்பற்றி தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.

ஒரு ஊரில் ஒரு நேர்மையான மனிதர் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார். அவர் மிகவும் நல்லவர், அன்பானவர். அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் அந்தக் கடையில்தான் பொருட்களை வாங்குவார்கள். அதனால் அவர் மதியம் வீட்டிற்கு சாப்பிட போகும் போதுக்கூட கடையை மூட மாட்டார்.

ஒரு திருடன் அந்த வழியாகப் போக, திருடனை கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வீட்டிற்கு சாப்பிட செல்கிறார். திருடனும் மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறான். கல்லாப்பெட்டி திறந்திருக்கிறது. அது நிறைய காசும் இருக்கிறது. மேலும் கடைக்கு இரண்டு மூன்று பேர் வந்து பொருட்களை வாங்கிவிட்டு காசும் கொடுத்துவிட்டு போகிறார்கள்.

இப்போது திருடனின் நண்பன் வந்து, ‘இதுதான் சரியான நேரம். சீக்கிரமாக காசை எடுத்துக் கொண்டு ஓடி விடலாம்’ என்று கூறுகிறான். ஆனால், திருடனுக்கு ஏனோ திருடுவதற்கு இந்தமுறை தயக்கமாக இருந்தது.

சாப்பிட சென்ற கடைக்காரரும் வந்து விடுகிறார். உங்கள் பொருட்களெல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறான். கடைக்காரரோ, ‘அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. உங்களை நம்பி தானே கடையை ஒப்படைத்துவிட்டு சென்றேன். அதெல்லாம் சரியாகத்தான் இருக்கும்’ என்று கூறுகிறார். திருடனுக்கு மனம் மிகவும் நெகிழ்ந்துப் போகிறது.

‘உங்களைப் போன்ற நல்லவருடன் கொஞ்சம் நேரம் பழகியதற்கே மனம் இவ்வளவு தூய்மையாகிறதே! வாழ்நாள் முழுவதும் நல்லவர்களுடன் பழகினால் மனம் எவ்வளவு தூய்மையாகும்’ என்று சொல்கிறான். கடைக்காரர் ஒன்றும் புரியாமல் நிற்க, ‘ஐயா! நான் ஒரு திருடன் உங்கள் கடைக்கு திருடத்தான் வந்தேன். ஏனோ தெரியவில்லை எனக்கு உங்களிடம் திருடத் தோன்றவில்லை. இனி வாழ்நாள் முழுவதும் திருடப்போவதில்லை’ என்று கூறி அவர் கால்களில் விழுந்து வணங்குகிறான்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் எந்நேரமும் அகிம்சையை கடைப்பிடிக்க முடியுமா?
It depends on who we associate with

இந்த கதையில் வந்ததுப் போலதான் நம் குணம் நாம் யாருடன் பழகுகிறோம் என்பதை பொருத்துதான் இருக்கிறது. நல்லவர்களுடன் பழகும்பொழுது நமக்கும் நல்ல குணங்கள் தானாக வந்துவிடும். இதை புரிந்துக்கொண்டால் நிச்சயம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.

logo
Kalki Online
kalkionline.com