
பொதுவாக நல்ல பழக்கமோ அல்லது கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகாதீர்கள். கெட்ட பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம். ஆனால், பழக்கத்திற்குக்கூடவா என்று கேட்பது புரிகிறது.
நீங்கள் ஒரு அட்டவணை போட்டு சில நல்ல பழக்கங்களை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஓரிரு மாதங்கள் அதன்படியே செயல்பட்டு பிறகு ஒரு கட்டத்தில் அதை இயந்திரத்தனமாக மாறும்.
உதாரணமாக காலையில் காபி குடித்துவிட்டு பேப்பர் படிப்பது பழக்கம் என்று இருந்தால் ஒருநாள் ஏதோ காரணத்திற்காக காபி சாப்பிட முடியவில்லை அன்று பார்த்து பேப்பரும் வரவில்லை என்றால் அப்பொழுது உங்களிடம் ஒரு பரபரப்பு ஒரு இயல்பற்ற தன்மை ஏற்படும்.
இது எதைக்கட்டுகிறது' நீங்கள் ஒரு அடிமை என்பதை இல்லையா? பழக்கத்திற்கு அடிமையானால் என்ன நிகழும்!
நீங்கள் மெல்ல மெல்ல உங்கள் சுயசிந்தனையை இழப்பீர்கள். அடிமைத்தனம் உங்கள் இரத்தத்தில் ஊறிவிடும். பிறகு உயிர் போனாலும் என் பழக்கத்தை விடமாட்டேன் என்று தத்துவம் பேசுவீர்கள்.
உங்கள் மனவலிமையை இழப்பீர்கள் மனவலிமையை இழந்தால் லட்சியமாவது வெற்றியாவது ஒன்றும் நடக்காது.
சுருக்கமாகச் சொன்னால் நீங்கள் ஒரு இயந்திர மனிதனாக மாறி விடுவீர்கள். நல்ல பழக்கமே இயந்திரத்தனமாக மாறும்போது, கெட்டப் பழக்கங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.
ஒரு நல்ல பழக்கத்தை நிறுத்த அல்லது மாற்ற வேறொரு நல்ல பழக்கத்தை கையாளவும் பழைய பழக்கத்தை விடும்பொழுது மனம் சற்று தடுமாறும், முரண்டு பிடிக்கும் பிறகுதான் புதிய பழக்கத்தை ஏற்றுக்கொள்ளும். பிறகு மெல்ல புதிய பழக்கத்தை ஏற்றுக்கொண்ட மனம் பிறகு மெல்ல அதை இயந்திரத்தனமாக ஆக்கும். ஒரு கட்டத்தில் இந்தப் பழக்கம் இல்லாது இருக்க முடியாது என்ற கட்டம் வரும். அப்பொழுது அதை நிறுத்தி வேறு ஒன்றை கையாளவும். இப்படி மாற்றி மாற்றி செய்து கொண்டே இருக்க வேண்டும். இது சற்று கடினமான வேலைதான்.
பழக்கம் என்பது மனதின் செயல். இது இறந்தகால எண்ணப் பதிவில் இருந்து வருவது. இந்த எண்ணப் பதிவில் இருந்து நீங்கள் செயலாற்றும்பொழுது அது இயந்திரத்தனமாகிறது. எப்பொழுது ஒரு செயல் இயந்திரத்தனமாக இயங்குகிறதோ அது பழக்கம் ஆகிவிடுகிறது. ஆகவே விழிப்புணர்வோடு மவைலிமையை இழக்காமல் இருக்க வேண்டுமானால் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளத்தான் வேண்டும்.