யார் மனதையும் புண்படுத்தாதே…பண்படுத்து!

motivation Image
motivation ImageImage credit - pixabay.com

முகம்மது நபிகள் யார் மனமும் புண்படக்கூடாது என்பதற்காக தன்னைத்தானே  வருத்திக் கொண்டார். ஒருமுறை நபிகளிடம் ஒரு முதிய பெண்மணி திராட்சைக் குலையைக் கொடுத்து ஏற்கச் சொன்னார்.

மூதாட்டி எதிரே பழக்குலை முழுவதையும் உண்டார். மூதாட்டிக்கு மிக்க மகிழ்ச்சி. நபியின் தோழர்கட்கு ஒரே ஆச்சர்யம். எல்லோர்க்கும் பங்கிட்டு உண்ணும் தாங்கள் ஏன் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டீர்கள் என்று கேட்டனர்.  அவர் "அந்தப் பழங்கள் கொடும் புளிப்பாக இருந்து. நீங்கள் வாயில் போட்டவுடன் சீ சீ பழம் புளிக்கிறது என்று கூறிவிட்டால் அந்த அன்னை வேதனைப்படுவார். அதனால்தான் அவரை மகிழ்விக்கும் எண்ணத்தில் நானே உண்டு விட்டேன்" என்றார்.

உலகம் முழுவதும் இறையருளாளர்கள் இப்படித்தான் இருப்பார்கள். காட்டில் இராமனைக்காண குகன் மீனையும்.  தேனையும்  ஏந்தி வருகிறான். ஒரே மீன் வாடை ‌முனிவர்கள் எல்லோரும் மூக்கை மூடிக்கொண்டனர். தேனையும் மீனையும் வைத்து ராமனை சாப்பிடச் சொன்னான்.

ராமர் அன்புடன், 'அப்பா நீ கொண்டு வந்த உணவு அன்பால் உருவானது. எனவே, புண்ணியத் தன்மை உடையது. இதை நான் உண்டதாகவே நினைத்துக்கொள்" என்றார். மேலும் முனிவர்கள் சார்பில் மன்னிப்பு கேட்கும் பாணியில் "எங்கள் அனைவர்க்கும் இந்த அன்பு உணவு பவித்ரம்" என்று கூறுகிறார்.

பகவான் புத்தர்  இன்னும் ஒரு நடை கூடப் போய்விட்டார். ஒரு ஏழை பகவான் புத்தரை தன் வீட்டிற்கு வந்து பிட்சை ஏற்க வற்புறுத்தினார். அந்த ஏழை வீட்டில் மரக்கறி எதுவும் இல்லை நாய்க்குடையைப் பதப்படுத்தி சமைத்து புத்தருக்குக் கொடுத்தான்.   புத்தர் வாயில் வைத்தபோது  அது கசந்தது. அது நஞ்சாக மாறியிருந்தது. அவன் மனம் நோக்கம் கூடாதே என்று புத்தர் சாப்பிட்டார் வெளியே வந்ததும் தலைசுற்றி வாந்தி எடுத்தார். குழம்பிய சீடர்களிடம், "உலகில் இவனே பாக்கியவான்.

இதையும் படியுங்கள்:
கல்யாண விருந்தில் இடம் பெறும் ஒரே கீரை இதுதாங்க!
motivation Image

புத்தருக்குக் கடைசியாக உணவிட்ட பேறு பெற்றவன் என்றார். முதல் வாய் உண்டதுமே அது விஷம் என்று அறிவித்திருக்கலாமே என்று மலர் புலம்பியபோது அவர் நடக்க வேண்டியது நடந்திருக்கிறது. மரணம் ஒரு பெரிய விஷயமே அல்ல. புத்தருக்கு இறுதி போஜனம் அளித்தவன் என்றே அறிவியுங்கள் என்றார்.

இப்படிப்பட்ட பண்பாளர்களிடமிருந்து நாம் புண்படுத்தலை தவிர்க்க கற்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com