கல்யாண விருந்தில் இடம் பெறும் ஒரே கீரை இதுதாங்க!

புளிச்சாகீரை
Pulicha keerai

ணவுக்காகப் பயன்படுத்தும் கீரை வகைகள் எத்தனையோ இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளன. அதில் ஒன்றுதான் புளிச்ச கீரை. கொஞ்சம் புளிப்புத்தன்மையும், நல்ல ருசியும் கொண்ட கொண்டது. இதை ஆந்திர மாநிலத்தில் ‘கொங்குரா’ என்கிறார்கள். பொதுவாக திருமண விருந்துகளில் கீரைகள் இடம் பெறுவது இல்லை. ஆனால் ஆந்திர மாநிலத்தில் நடக்கும் திருமணங்களில் ‘கொங்குரா’ கட்டாயம் இருக்கும்.

100 கிராம் புளிச்ச கீரையில் 1.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. 11 வகை அமினோ அமிலங்கள் உள்ளன. 3.3 கிராம் புரதச்சத்து உள்ளது. 46 கலோரிகள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, பி1 (தியாமின்), பி2 (ரிபோஃப்ளேவின்) வைட்டமின் பி9 (ஃபோலிக் ஆசிட்) மற்றும் வைட்டமின் சி, இ, டி சத்து உள்ளது. அதோடு லாஜிக் அமிலம், பொட்டாசியம், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைய இருக்கு. இதில் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சோடியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. ஃப்ளேவனாய்ட்கள், பாலிஃபினாலின் ஆசிட்கள், ஆந்தோசியானின்கள் ஆகிய ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளது.

புளிச்ச கீரை உடலில் இருக்கும் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும், உடலுக்கு உரமூட்டும் கீரை என்கிறார்கள். இரத்தத்தை சுத்தமாக்கும், வாத நோய்கள் வராமல் தடுக்கும், உடலில் உருவாகும் கட்டிகளை ஆற்றக் கூடியது. பித்தத்தை போக்கும், உடல் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும். உடலில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கும், சிரங்கு புண்கள் மீது இதை அரைத்து பூச அவை சரியாகும். புளிச்சக்கீரை இரத்தத்தின் அளவு மற்றும் தரம் இரண்டையும் அதிகரிக்கிறது.

புளிச்சகீரையின் இலை மற்றும் பூக்கள் இரண்டுமே உடலை குளிர்விக்கும் தன்மை கொண்டது. இது கல்லீரலில் உள்ள நச்சுக்களையும், கொழுப்பையும் போக்குகிறது. கல்லீரலை பாதுகாக்கிறது. புளிச்ச கீரையை மிதமான அளவு அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கிறது. இரத்தத்தை சுத்திகரிக்கிறது. இது கல்லீரலின் சுமையை குறைக்கிறது.

புளிச்ச கீரையில் அதிகம் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியச் சத்துக்கள் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பை குறைக்கிறது. நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இது இரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த உணவாகும்.

குரோமியம் பிக்ரோலினேட் என்ற மூலப்பொருள் இந்த கீரையில் உள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கும், உயர் இரத்தம் அழுத்தம் உள்ளவர்களும், அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கும், இந்த கீரை போல அருமருந்து வேறில்லை.

பாலூட்டும் தாய்மார்கள் பாலை நிறுத்த நினைக்கும்போது பாலை குறைக்க உதவுகிறது. அதனால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கான பால் தேவை அதிகம் இருக்கும்போது புளிச்சக்கீரையை சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் குழந்தைக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து அளவை குறைக்கும்.

புளிச்ச கீரையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வீரியமிக்க புற்றுநோய் செல்களை அழித்து, அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இது உடலில் டியூமர் மற்றும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது. இதில் உள்ள குளோரோஃபில்கள், உடலில் ஹீமோகுளோபின்கள் அளவை அதிகரிக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
தேனீக்களின் விசித்திர வாழ்க்கை முறை பற்றி தெரியுமா?
புளிச்சாகீரை

புளிச்ச கீரையை வழக்கமாக எடுத்துக்கொள்வது, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க உதவுகிறது. இது கல்லீரல், சிறுநீரகம் மற்றும் செரிமான மண்டலத்தை சுத்தம் செய்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியச் சத்துக்கள், உங்கள் எலும்பை வலுவாக்கிறது. இக்கீரையில் அதிகம் உள்ள வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின்கள் உருவாக உதவுகிறது. இது கண் பார்வையை அதிகரிக்கவும், மாலைக்கண் நோயை தடுக்கவும் உதவுகிறது.

வாதநோய் உள்ளவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை புளிச்சக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் வாத நோய் தணிந்துவிடும். மஞ்சள் காமாலைக்கு ஆளானவர்கள் கைப்பிடி அளவு புளிச்சகீரையை அரைத்து சாறு எடுத்து மோருடன் கலந்து பருகி வர மஞ்சள் காமாலை குணமடையும்.

சொறி, சிரங்கு உள்ளவர்கள் அதற்கான மேல்பூச்சு மருந்து போட்டு வரும் நேரங்களில் இந்த புளிச்சக்கீரையை சமைத்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுவது குணம் பெறுதலை விரைவுபடுத்தும்.

புளிச்சக்கீரையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பராமரிக்க உதவுகிறது. இது டைப் 2 டயாபடீஸ் நோய் உள்ளவர்களுக்கு உதவுகிறது. பல்வேறு வகையான சிறுநீர் பாதை தொற்றுக்களையும் புளிச்சக்கீரை சரி செய்கிறது. மேலும், பாலியல் நோய்களையும் வராமல் சரிசெய்ய உதவுகிறது.

இத்தனை நன்மைகள் இருந்தாலும் இந்தக் கீரையை குறைவான அளவுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகம் எடுத்தால் அது உடலில் வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்றின் சமநிலையை பாதிக்கும். உடல், கால்சியத்தை உறிஞ்சுவதை தடுக்கும். இந்த கீரையை மண் சட்டியில்தான் சமைக்க வேண்டும். மெட்டல் பாத்திரங்களில் சமைக்கும்போது, அதனுடன் பாத்திரம் வினைபுரியும். பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com