இந்த 10 படிப்பை படிச்சு உங்க நேரத்தையும் பணத்தையும் வீணாக்காதீங்க! ஹார்வர்ட் வெளியிட்ட அதிர்ச்சி பட்டியல்!

studying
studying
Published on

நம்ம அப்பா, அம்மா காலத்துல ஒரு விஷயம் ரொம்ப ஆழமா நம்பப்பட்டுச்சு. "ஒரு நல்ல டிகிரியை முடிச்சுட்டா போதும், வாழ்க்கைல செட்டில் ஆகிடலாம்" என்பதுதான் அது. ஒரு இன்ஜினியரிங் பட்டமோ, ஒரு பிசினஸ் டிகிரியோ கைல இருந்தா போதும், நல்ல சம்பளத்துல வேலை நிச்சயம்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சு. 

ஆனா, இப்போ அந்த காலம் மலையேறிப் போச்சு. உலகமே தொழில்நுட்பத்தால அதிவேகமா மாறிட்டு இருக்கு. இந்தச் சூழல்ல, நாம பொக்கிஷமா நினைக்கிற சில பட்டப்படிப்புகள் தன்னோட மதிப்பை இழந்துட்டு வருது. உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகமே இந்த அதிர்ச்சியான உண்மையை ஒரு அறிக்கை மூலமா சொல்லியிருக்கு.

ஏன் இந்த திடீர் மாற்றம்?

முன்பெல்லாம் ஒரு கம்பெனியில சேந்தா, ஒரே வேலையை வருஷக்கணக்கா செய்வாங்க. ஆனா இப்போ அப்படி இல்லை. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஆட்டோமேஷன் (Automation) இன்னைக்கு பல வேலைகளை மனிதர்களை விட வேகமாவும், துல்லியமாவும் செய்ய ஆரம்பிச்சுடுச்சு. உதாரணமா, கணக்கு வழக்குப் பார்க்குற அக்கவுண்டன்ட் வேலையை இப்போ பல மென்பொருள்கள் சுலபமா செய்யுது. 

இதனால, வெறும் பட்டத்தை மட்டும் வெச்சுக்கிட்டு எந்தப் பிரயோஜனமும் இல்லை. அந்தப் பட்டத்தோட, இன்றைய தேதிக்குத் தேவையான திறன்களும் இருந்தா மட்டும்தான் தாக்குப்பிடிக்க முடியும். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சவரே ஆனாலும், நாலு வருஷத்துக்கு முன்னாடி கத்துக்கிட்டதை வெச்சுக்கிட்டு இப்போ வேலை தேடினா, அதுக்கு மதிப்பு இருக்காது. தன்னைத்தானே அப்டேட் செஞ்சுக்காதவங்க பின்தங்கிடுவாங்க.

இதையும் படியுங்கள்:
தங்கத்தை விட விலை அதிகம்: உலகில் மதிப்பு மிக்க சில பூச்சி இனங்கள்!
studying

மதிப்பு குறையும் படிப்புகளின் பட்டியல்!

ஹார்வர்ட் அறிக்கைப்படி, நாம ரொம்ப உயர்வா நினைக்கிற MBA, பொதுவான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கே இப்போ கொஞ்சம் மவுசு கம்மிதான். ஏன்னா, இந்தப் படிப்பை முடிச்சவங்க லட்சக்கணக்குல இருக்காங்க, ஆனா அதுக்கேத்த வேலைவாய்ப்பு இல்லை. அதே மாதிரிதான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பயோகெமிஸ்ட்ரி போன்ற படிப்புகளும் சவால்களைச் சந்திக்குது.

சரி, ஆர்ட்ஸ் பக்கம் போகலாம்னா, அங்கே சைக்காலஜி, ஹிஸ்டரி, சோசியாலஜி போன்ற படிப்புகளை முடிச்சவங்களுக்கு, ஒரு உயர் படிப்பு இல்லாம நேரடியா நல்ல வேலை கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. ஏன்னா, நிறுவனங்கள் இப்போ பொதுவான பட்டத்தை விட, டேட்டா அனலிட்டிக்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மாதிரி குறிப்பிட்ட திறமைகள் இருக்கிறவங்களையே தேடுறாங்க.

இதையும் படியுங்கள்:
'கஜராஜன்' என்ற சிறப்புப் பட்டம் பெற்ற குருவாயூர் யானை!
studying

அப்போ ஜெயிக்கிறதுக்கு என்னதான் வழி?

இனிமே, ஒரு பட்டம் மட்டுமே உங்களைக் காப்பாத்தாது. அந்தப் பட்டப்படிப்புங்கிறது ஒரு நுழைவுச் சீட்டு மாதிரிதான். உள்ளே நுழைஞ்ச பிறகு, ஜெயிக்கிறதுக்கு உங்களுக்குத் தேவை மூணு முக்கியமான விஷயங்கள்: படைப்பாற்றல் (Creativity), விமர்சன சிந்தனை (Critical Thinking), மற்றும் தொடர்ந்து புதிதாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வம். 

எந்தத் துறையில் இருந்தாலும் சரி, இந்த மூன்றும் உங்ககிட்ட இருந்தா, உங்களுக்குத்தான் எதிர்காலம். தொழில்நுட்ப அறிவோடு, மனிதர்களுக்கு மட்டுமே சாத்தியமான இந்த தனித்துவமான திறன்களையும் வளர்த்துக்கிட்டா, உங்களை யாராலும் அசைக்க முடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com