
தங்கம்தான் விலை அதிகம் என நினைக்காதீர்கள். சில வகை உயிரினங்கள் தங்கத்தைக் காட்டிலும் மிக அதிக விலையாகும். அவை என்னென்ன உயிரினங்கள் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
ஆர்க்கிட் மான்டிஸ்: 500 டாலரிலிருந்து 3000 டாலர்கள் வரை இதன் விலை. ஆர்க்கிட் செடி போன்ற தோற்றத்துடன் இருக்கும் இவை, உலகிலேயே மிக விலை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
சன்செய் மாத்: இவற்றின் விலை 300 டாலரிலிருந்து 1500 டாலர்கள் வரை. இது அசப்பில் பட்டாம்பூச்சி போல் காணப்படும். நவரத்தினங்கள் போன்று இதன் உடல் ஜொலிக்கும். மடகாஸ்கர் மாடலை அதிகப்படியான அதன் நிறத்திற்காகவே பலரும் விரும்புகிறார்கள்.
பீகாக் ஸ்பைடர்: 1500 டாலரிலிருந்து 5000 டாலர்கள் வரை இவற்றின் விலையாகும். இதன் வண்ணமயமான நிறம் எல்லோரையும் ஈர்க்கிறது. அதிக நிலையுடன் இந்த இனம் குறைவாகவே காணப்படுகிறது.
கோலியாத் பீட்டில்: 2000 டாலர்களிலிருந்து 5000 டாலர்கள் வரை இவற்றின் விலை. அளவில் மிகப்பெரிய பூச்சி இனமாக இது கருதப்படுகிறது. பார்க்கவே கண்களைப் பறிக்கும் இதை வாங்க அதிகம் பேர் ஆர்வமாக உள்ளனர்.
டார்வின் பீட்டில்: 1000 டாலர்களிலிருந்து 4000 டாலர்கள் வரை இதன் மதிப்பு. விஞ்ஞானி டார்வினுக்குப் பிறகு அப்பெயர் சூட்டப்பட்ட இந்த பூச்சி இனத்திற்கு தாடைப்பகுதி வித்தியாசமாக இருக்கும். குறைவாகவே காணப்படும் இனமாகும் இது.
ஸ்டாக் பீட்டில்: 500 டாலர்களிலிருந்து 2500 டாலர்கள் வரை இவற்றின் விலை. இதன் தாடைப்பகுதி நீண்டு இருக்கும். மின்னும் உடல் அமைப்பைக் கொண்டது. இது ஆன்மிகத் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இதன் மார்கெட் மதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
ஜ்வெல் பீட்டில்: இதன் மதிப்பு 800 டாலர்கள் முதல் 3000 டாலர்கள் வரை. பளபளப்பான வண்ணங்கள் போன்ற உடல் அமைப்பைக் கொண்ட இவை, அதன் வண்ணமயமான உடல் அமைப்புக்காகவே அதிக மதிப்பு பெறுகிறது.
எம்பரர் தேள்: இவற்றின் விலை 200 டாலர்கள் முதல் 1200 டாலர்கள் வரை. கருப்பு நிறத்தில் பளபளப்பாக இருக்கும் இது, மிக அரிதாகவே காணப்படுகிறது. தங்கம் கூட கிடைக்கும். ஆனால், இது கிடைப்பது மிகவும் அரிதாகும்.
டரன்டுலா ஹாக் வாஸ்ப்: 100 டாலர்களிலிருந்து 3000 டாலர்கள் வரை இது மதிப்பு பெறுகிறது. இதன் கண்களைப் பறிக்கும் தோற்றம் மற்றும் இது கொட்டினால் அதிக வலி ஏற்படுத்தும் தன்மை பெற்றது.
ஹெர்குலெஸ் பீட்டில்: 1000 டாலர்களிலிருந்து 4000 டாலர்கள் வரை இதன் மதிப்பாகும். வண்டு இனங்களிலேயே உலகத்தில் மிக நீளமானதாக இது அறியப்படுகிறது. இதற்கு கொம்பு போன்ற அமைப்பு உண்டு. இது உலகில் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. தங்கத்தை விட அதிக மதிப்பைப் பெற்றதாக இது தெரிகிறது.