உங்கள் மூளையை சரி செய்யும் Dopamine Fasting!

Dopamine Fasting
Dopamine Fasting

இன்றைய அதிகப்படியான கவனச்சிதறல்கள் மற்றும் தூண்டுதல்கள் நிறைந்த உலகில் Dopamine Fasting என்பது நம்மை மீண்டும் சிறப்பாக மாற்றும் ஒரு பிரபலமான நடைமுறையாகும். மேலும் இந்த நடைமுறை நாம் தேவையில்லாத Dopamine அடிமைத்தனத்தை குறைக்க உதவுகிறது. 

பலருக்கு இந்த நடைமுறை சரியான தீர்வைக் கொடுப்பதில்லை என்பார்கள். ஏனெனில் அவர்களால் அவர்கள் அடிமைப்பட்டு கிடக்கும் விஷயங்களில் இருந்து விடுபட முடியாமல் போவதால், இந்த நடைமுறை பலனளிக்கவில்லை எனக் கூறுவார்கள். ஆனால் சரியான முறையில் Dopamine Fasting இருந்தால் எப்படிப்பட்ட அடிமைத்தனத்தில் இருந்தும் நம்மால் வெளிவர முடியும். இந்த நடைமுறையில் நாம் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட டோபமைன் கிளர்ச்சி தரும் விஷயங்களைக் குறைக்க போகிறோம். 

இந்த முறையை நீங்கள் கஷ்டப்பட்டு செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக இதை உங்கள் பழக்கமாக மாற்றிக் கொண்டால், உங்கள் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை நீங்கள் காணலாம். 

Dopamine Fasting-ல் நீங்கள் இருக்கும் போது, உங்களுக்கு அதிகமாக கவனச்சிரல்களை ஏற்படுத்தும் விஷயங்களை கண்டறிந்து அவற்றை குறைக்க வேண்டும். அல்லது சில கட்டுப்பாடுகளை நீங்களே விதித்துக் கொள்ள வேண்டும்.

  • உதாரணத்திற்கு தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக எந்த சமூக ஊடகங்களையும் நான் பயன்படுத்த மாட்டேன்.

  • தினசரி செய்ய வேண்டிய முக்கிய வேலைகளை செய்யாமல் வீடியோ கேம் விளையாட வேண்டாம். 

  • மாலை 5 மணிக்கு முன்னதாக டிவி, Netflix என எதையும் பார்க்க மாட்டேன். 

  • காலையில் எழுந்ததும் முதல் 2 மணி நேரத்திற்கு ஸ்மார்ட்போனை கையில் எடுக்க மாட்டேன்.

  • நடைப்பயிற்சி செய்யும் போது கையில் ஸ்மார்ட்போன் கொண்டு செல்ல மாட்டேன். 

  • அதிகப்படியான ஆஃப்லைன் செயல்களில் ஈடுபடுவேன். 

இதையும் படியுங்கள்:
உங்கள் மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க ஆசையா? இந்த 6 விஷயங்களை சரியாகச் செய்யுங்கள்! 
Dopamine Fasting

இது போன்ற எளிமையாக பின்பற்றக்கூடிய தீர்மானங்களை முதலில் திட்டமிடுங்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மாதத்தில் ஒரு நாள் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த மாட்டேன். எனக்கு எதுவெல்லாம் டோபமைன் கிளர்ச்சியைத் தூண்டுகிறதோ அதை எல்லாம் ஒரு மாதத்திற்கு செய்ய மாட்டேன் என்பது போன்ற சவால்களை உங்களுக்கு நீங்களே நிர்ணயித்துக் கொண்டு. தொழில்நுட்ப அடிமைத்தனத்திலிருந்து வெளியே வாருங்கள்.

இந்த நடைமுறையை நீங்கள் சரியாக பின்பற்றும் போது, வாழ்க்கையின் மிக முக்கிய தருணங்களில் கவனம் செலுத்தி உங்களை நீங்கள் சிறப்பாக மாற்றிக் கொள்ள உதவும். தேவையில்லாத டெக்னாலஜி கவனச்சிரல்களால், வாழ்க்கையை மோசமாக்கிக் கொள்ளாமல், இது போன்ற முயற்சிகளில் இறங்கி, வாழ்வை சிறப்பாக மாற்ற முயலுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com