கனவு நனவாக, உண்மையான உலகில் வாழுங்கள்..!

Future Dream
Future Dream

பலர் எதிர் காலம் குறித்து கனவு காண போய், கனவு உலகத்தி லேயே வாழ்ந்து வர தொடங்கி உள்ளனர்.

எதிர் காலம் பற்றி கனவு காண்பதில், தவறு ஏதும் இல்லை. முன்னேற அது தேவைதான். ஆனால் கனவு காண்பது மட்டும் எங்கும் அழைத்து செல்லாது. அதற்கு செயல்பாடு மிக முக்கியம். செயல்படுவதற்கு திட்டம் இடுதல் (planning), அடுத்து என்ன நடக்கக் கூடும் என்பது பற்றி எதிர்பார்ப்பு, சிந்தனை (anticipate next developments) செயல் படுவதற்கு தேவையான படிப்பு அறிவு, பொருட்கள், நிதி, தொடர்புக்கள் உருவாக்குதல் போன்ற பல்வேறு அம்சங்கள் பற்றி தெளிவான, வலுவான புரிதல் அத்தியாவசியம். இவற்றில் பல அம்சங்கள் அவ்வப் பொழுது புதுபிக்கவும், நிரப்பிக் கொள்வதும் முக்கியம். இவற்றை அடைய, தக்க வைத்துக் கொள்ள பொறுமை, நிதானம், தன்னம்பிக்கை, பிடிவாதம் கலந்த விடா முயற்சி ( tenacity) ஆகியவை கட்டாயம் இருக்க வேண்டும். நேர்மறை சிந்தனைகள், அணுகுமுறை,( positive thinking cum attitude), சுய உந்துகோல் ( self motivation) பின்னடைவு ஏற்பட்டால் தளர்ந்து போகாமல், பிரச்சனைகளை எதிர் கொண்டு, தீர்வுகள் கண்டு கடந்து செல்லும் மனோ தைரியம், பிறருடன் சேர்ந்து செயல் பட தேவையான குணங்கள் ஒவ்வொன்றும், காணும் கனவுகள் நிஜங்களாக உருவாக தக்க சமயங்களில் கை கொடுத்து உதவும்.

இதையும் படியுங்கள்:
ஆணவம் அறிவை அழிக்கும்; அகம்பாவம் நம்மையே அழிக்கும்!
Future Dream

இவை எல்லாவற்றையும் சேர்த்து இலக்கை அடைந்து வெற்றி பெற சில மூலதனங்கள் பெரிதும் வேண்டும். இங்கு மூலதனம் பணம் அல்ல. இடைவிடாத உழைப்பு, யாரிடம் எந்த வேலை அளிக்க வேண்டும் என்ற அறிவு (knowledge) , சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றிய பொது மற்றும் குறிப்பிட்ட அறிவு (updating of general and specific knowledge) வெகு வேகமாக மாறி வரும் உலக நடைமுறைக்கு ஏற்ப, மாற்றங்களை ஏற்றுக் கொள்வது, பின் பற்றுவது போன்றவை போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் தங்கியிருக்கவும் ( to stay on) , முன்னேறவும் (to surge ahead) மிக மிக அவசியம் என்பதை உணர்ந்து , அதற்கு ஏற்ப தயார் செய்துக்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com