இலட்சியக் கனவு காணுங்கள்!

Dreams are very powerful...
Dreams Image credit - pixabay
Published on

"இலட்சியக்கனவை நெஞ்சில் ஏற்றி உதயக் கிழக்கை உனக்குள் ஏற்று உழைப்பு நதியில் தினம் நீந்து உலகம் உனக்குள் இன்றே அடங்கும்"

னவுகள் மிகவும் ஆற்றல் மிக்கவை. உங்களின் ஆழ்மனதில் நிழலாடும் காட்சிகள் கனவுகளாகின்றன. மேலும் கனவுகளோடு நின்று விடாமல் உங்கள் எதிர்காலத்தைப் பற்றியும் சாதிக்க விரும்பும் துறை குறித்தும் மனதில் வெள்ளோட்டம் பார்க்கவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, உங்கள் தொழில் வாழ்க்கையில் எந்த நிலையை அடைந்திருக்க வேண்டும் என்றும், குடும்ப வாழ்க்கையில் எந்த நிலைக்கு உயர்ந்திருக்க வேண்டும் என்றும், சமுதாய சேவையில் நீங்கள் என்னென்ன சாதித்து இருக்க வேண்டும் எனவும் உங்கள் மனதில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு எண்ணிப் பார்த்து, மனக்காட்சிகளை வரையவேண்டும். இவ்வாறு மனக்காட்சிகளை வரையும்போது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் உங்கள் இலட்சியக் கனவுகள் பதிவாகின்றன. பின்னர், அப்பதிவுகளே உங்களை இயக்கும் ஆற்றலாகவும் மாறிவிடுகிறது.

இவ்வாறு உள்ளத்தில், ஆற்றலும் இலட்சிய வேட்கையும் ஊற்றெடுத்துக் கொண்டே இருப்பதால் உங்களுக்கு வாழ்வில் சலிப்புத் தோன்றாது. அத்தோடு மனச்சோர்வோ, மனத் தளர்வோ ஏற்படாது. முகத்தில் மலர்ச்சியும், செயலில் உத்வேகமும், சொல்லில் தெளிவும் தோன்றிவிட்டால் உங்கள் செயலில் வெற்றி மலர்ந்து விடும்.

அவ்வாறு எண்ணிப் பார்க்கும்போது மனதில் தோன்றும் நிகழ்வுகள் முழுமையாகத் தெரிகின்றனவா அல்லது தெளிவில்லாமல் தெரிகின்றனவா என்பதை கூர்ந்து கவனியுங்கள்.

தெளிவாகத் தெரிந்தால் உங்கள் மனம் தெளித்த நீரோடையாகவும், உங்கள் இலட்சியத்தில் நீங்கள் உறுதியாகவும் இருக்கிறீர்கள் என்று பொருள்.

மனக்காட்சிகள் தெளிவில்லாமல் இருந்தால், உங்கள் சிந்தனைகள் தெளிவாக இல்லை எனவும், உங்களுக்கு இலட்சியப்பிடிப்பு குறைவாகவே உள்ளது எனவும் பொருள்.

மேலும், உங்கள் மனக்காட்சிகளே பின்னாளில் உண்மை நிகழ்வுகளாக நடந்தேறுகின்றன என மனோதத்துவ அறிஞர்கள் கூறுகின்றார்கள். ஆகவே உயர்ந்த இலட்சியத்தைக் கனவுகளாக காணுங்கள்.

உங்கள் கனவுகள் பகற் கனவுகளாகவே உள்ளனவா அல்லது இலட்சியக் கனவுகளாக மாறுகின்றனவா? என்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடம்!
Dreams are very powerful...

அதை உணர்வது மிகவும் எளிது. அதாவது செயலோடு இணைக்கப்பட்ட கனவுகள் இலட்சியக் கனவுகள், அவ்வாறு செயலோடு இணைக்கப்படாத கனவுகள் பகற்கனவுகள்.

உங்கள் கனவுகளை நோக்கி நீங்கள் செயல் ரீதியாக பயணம் படத் தொடங்க வேண்டும். எடுத்துக்காட்டாக. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் தொழிலதிபராகத் உயர்ந்திருக்கிறீர்கள் எனவும் உங்களிடம் ஆயிரம் நபர்கள் பணிபுரிகிறார்கள் எனவும், உங்கள் கம்பெனியின் வியாபாரம் ரூபாய் நூறு கோடியை எட்டியுள்ளது எனவும், நீங்கள் கம்ப்யூட்டருக்குத் தேவையான உபரி பாகங்களைத் தயாரிப்பதாகவும் கனவு காண்கிறீர்கள் என்றால் வெறும் கனவோடு நின்று கொண்டால் அது பகற்கனவு. இதையே செயலோடு இணைந்தால் அது இலட்சியக் கனவாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com