வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள், கனவு என்பது மிக மிக அவசியமாகும். கனவை மட்டும் கண்டு கொண்டிருப்பது வெறும் கனவாகத்தான் இருக்கும், நிஜமாகாது, தொடர்ந்து கனவோடு இணைந்து பயணம் செய்தால்தான் அது செயல் வடிவம் பெறும். வாழ்வில் நம் இலக்கை அடைவது எப்படி என்று யாரும் வந்து நமக்குப் பாடம் எடுக்க மாட்டார்கள், கற்றுக் கொடுக்கவும் மாட்டார்கள்.
நாம்தான் நமக்கான குறிக்கோளை வகுத்துக்கொண்டு இலக்கை அடையப் போராட வேண்டும். பலருக்கும் பல குறிக்கோள்கள் இருக்கும், அதை அடைவதற்கான முயற்சியில்தான் பலரும் தோற்றுப் போகிறார்கள். இருந்தாலும் உங்களது குறிக்கோள்களை, முயற்சிகளை மட்டும் கைவிடாதீர்கள். நீங்கள் கண்ட குறிக்கோளை அடைய எந்நேரமும் சிந்தித்துக்கொண்டே இருங்கள். கனவில் இருந்துதான் சிந்தனை பிறக்கும். உங்கள் சிந்தனைதான் செயல்களாகும்.
உங்கள் குறிக்கோள் மற்றும் கனவை படிப்படியாக நடைமுறைப்படுத்தினாலே வெற்றி உங்கள் வசமாகும். மற்றவர்களை வெற்றி பெறச் செய்து நாமும் வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் நம் கனவு மெய்ப்பட வேண்டும்.
உங்களின் வெற்றி முகவரி இன்னொருவருக்குச் செல்லாமல் இருக்க வேண்டுமானால், உங்களின் கனவை இன்றே நனவாக்கும் முயற்சியை தொடங்குங்கள். வெற்றி நிச்சயம்.