முயற்சி திருவினையாக்கும்!

Motivation image
Motivation imagePixabay.com

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்கிறது திருக்குறள். 

நான் பள்ளியில் படிக்கும்போது ஒரு ஆசிரியை, எப்பொழுதும் யாரையும் திட்டவே மாட்டார். எவ்வளவு குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் 'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்றைக்குமே' ஆதலால் உன்னால் முடியும். நன்றாகப்படி. அடுத்து அதிகம் மார்க் வாங்குவாய் என்று தட்டிக் கொடுத்து படிக்கச் சொல்லுவார். அதேபோல் அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களை அவர் நடத்தினார். அதில் வைக்கும் மாதாந்திர பரீட்சைகளின் போது பத்துக்கு ஆறரை மார்க்குக்கு மேல் போடவே மாட்டார்.  அப்படி ஆறரை மதிப்பெண் யார் வாங்குகிறார்களோ, அவர் பத்துக்குப் பத்து வாங்கினதாக அர்த்தம். ஆதலால் அவரை கஞ்சம் என்று கூட சில மாணவிகள் திட்டுவதுண்டு. அதை அவர் பொருட்படுத்தவே மாட்டார். என்றாலும் அவர் மீது அனைவருக்கும் கடைசி வரையில் (இன்றும் இருக்கிறார்) உயரிய மரியாதையே இருந்தது. இப்பொழுதும் என் தோழிகளை சந்திக்கும் பொழுது அவரின் பெருமையை பேசாமல் நிறுத்த மாட்டோம். அப்படி ஒரு உயர்ந்த குணம் உடையவர் அவர். அவர் தாரக மந்திரமாக எப்பொழுதும் சொல்லும் 'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் ' என்பதற்கு இணங்க ஒரு சிறுகதையை கீழே பார்ப்போம்!

பால் விட்ஜென்ஸ்டைன் என்பவர் பியானோ வாசிப்பதில் ஆர்வம் உடையவர். முதல் உலகப்போரில் தனது வலது கையை இழந்தார். சாதாரணமாக ஒரு விரலில் காயம் ஏற்பட்டால் கூட இசைக் கருவியை கையாளுவது கடினம். ஆனால் அவர் வலது கையை இழந்த பின்பும் மனம் தளராமல் எஞ்சியுள்ள இடது கையால் எவ்வாறு இசைப்பது என்பதை கற்கும் முயற்சியில் ஈடுபட்டார். 

பால் விட்ஜென்ஸ்டைன்
பால் விட்ஜென்ஸ்டைன்

பிரபலமான பல்வேறு இசை அமைப்பாளர்களிடம் இது தொடர்பாக கேட்டார். அப்போதைய பிரபல இசை அமைப்பாளர் ஆன ரோவெல் அவருக்கு உதவினார். அவர் இசை ஆர்வம் கொண்ட பால் விட்ஜென்ஸ்டெயினுக்கு ஏற்றவாறு இசை அமைத்துக் கொடுத்தார். பின் நாட்களில் பிறர் தனது குறையை அரியா வண்ணம் இசைத்து கச்சேரிகளிலும் கலந்து கொண்டு பெரும் புகழ் பெற்றார் பால் விட்ஜென்ஸ்ஸ்டெய்ன் இது அவரது மன உறுதியையும், சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலையும் நமக்கு உணர்த்துகிறது. 

பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கின்ஸ் என்பவரும் பல சவால்களை எதிர் கொண்டவர் தான். பேசுவது, நடப்பது, சுவாசிப்பது என அனைத்திற்கும் அவர் எந்திரங்களின் உதவியை நாட வேண்டிய அளவிற்கு உடன் திறன் குன்றி இருந்தார். இதை அவர் தனது சாதனைக்கு தடையாக ஒருபோதும் கருதியது இல்லை. அவரது அறிவியல் கொள்கைகள் இன்று விஞ்ஞான உலகில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
கீரைகளுக்கெல்லாம் அரசன் பத்துவாக்கீரை பற்றி தெரியுமா?
Motivation image

பிரபஞ்சத்தின் இயக்கம் குறித்து அவர் எழுதிய "காலத்தை பற்றிய வரலாறு " என்ற நூல் மிகவும் பிரசித்தி பெற்ற புத்தகம் ஆகும். பல்வேறு விருதுகளைப் பெற்ற அவர் கூறும் போது ஒவ்வொருவரும் எந்த சூழ்நிலையிலும் தங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதுவே வெற்றிப் பாதைக்கு அவர்களை அழைத்துச் செல்லும் என்கிறார். 

ஒரு குறிக்கோளை திட்டமிடுங்கள். அத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக முயலுங்கள். அவ்வாறு முயலும் போது எவ்வளவு இடுக்கண்கள் ஏற்பட்ட போதிலும் குறிக்கோளை மட்டும் விட்டுவிடாமல் உறுதியுடன் செயல்படுங்கள. அவ்வாறு செயல்படும்போது வெற்றி பெறுவது உறுதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com