பொழுதுபோக்கு பொன்னானது!

Motivation image
Motivation imagepixabay.com

நாம் எல்லோரும் கேட்ட பழமொழி ‘An apple a day keeps doctor away’ அதுபோல, A hobby a day keeps the doldrums away. இதுவும் கேட்டிருப்போம்.

பொழுதுபோக்கு நம்மை மந்தமாக்கிவிடாமல்  உற்சாகமாக வைத்திருக்க உதவும். உடலை மட்டுமின்றி மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

விளையாட்டா? எனக்கு தெரியாதே! பாட்டா? நோ நோ! டான்ஸா? சான்ஸே இல்லை! நம்மில் பலர் மனதில் தோன்றுவது இது. தவறே இல்லை. எல்லோருக்கும் எல்லாம் தெரிய வேண்டியதில்லை.

இறுக்கமான மனதை உற்சாகப்படுத்தி உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் பல பொழுதுபோக்குகள் கொட்டிக்கிடக்கின்றன. நமக்கு பொருத்தமானதை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எல்லோராலும் பொழுதுபோக்கிற்காக பணம் கட்டி விளையாட்டு கூடம் செல்ல முடியுமா என்ன??

னிமை விரும்பியாக இருப்பவர்களை கேலி செய்ய வேண்டாம். தனிமையில் பல ஆக்கப்பூர்வமான விஷயங்கள் அவர்கள் மனதில் தோன்றும். தோன்றியதை செய்து மனதை ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் வைத்திருப்பார்கள்.

அதில் பலர் எழுத்தார்வம் மிக்கவர்களாக இருப்பார்கள். நிறைய புத்தகங்கள் படிப்பார்கள். பாடுபவர்களாக இருப்பார்கள். இது அனைத்தும் ஆரோக்கியமான மனநிலை தரும்.

சரி. பாடத் தெரியாவிட்டால் என்ன?? பாடல் கேட்பதும் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அருமையான பொழுதுபோக்குதான். பணிச்சுமைகளால் அவஸ்தைப்படுபவர்களுக்கு ஓய்வு நேரத்தில் இசை கேட்பதும், பார்க்கில் சிறிது நேரம் அமர்வதும்  மனதை மிகவும் லேசாக்குமே!

எழுதப் பிடித்தவர்கள் எழுதலாம். சிலருக்குத் தோட்ட வேலைகள் பிடிக்கும். பல பெண்கள் தங்கள் மாடித் தோட்டத்தில் காலை நேரத்தை இயற்கையுடன் இணைந்து செலவு செய்து மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பதைப் பார்த்து இருக்கிறோம்.

எனக்குச் சமையல் பிடிக்கும். விதவிதமாக சமையல் செய்து குடும்பத்தை அசத்துவேன் என்று சொல்பவர்களும் உண்டு. சமையல் கலையும் அருமையான பொழுதுபோக்குதான்.

இதையும் படியுங்கள்:
கலியுகம் முடியும்போது உயிர்த்தெழும் நந்தி எந்தக் கோயிலில் உள்ளது தெரியுமா?
Motivation image

கூடைகள் பின்னுவது, கை வேலைகள் செய்வது பலரின் பொழுதுபோக்காக இருக்கிறது. பலருக்குக் கோயில் செல்வதும் சொற்பொழிவுகள் கேட்பதும் பிடித்தமானது. அதுவும் ஆரோக்கியமான பொழுதுபோக்குதானே!

எழுதுவதோ, படித்தலோ, பாடுதலோ, நடனமோ, நடைப்பயிற்சியோ.  தேர்ந்தெடுப்போம் நம் பொழுதுபோக்கை. பொன்னான ஓய்வு நேரத்தில் ஏதாவது ஒரு பொழுதுபோக்கை பட்டியலிட்டு மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வோம். பிடித்த நண்பர்களைச் சந்திப்போம். பிடித்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்வோம்.

மகிழ்ச்சியுடன் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக என்றும் வைத்திருக்க தேர்ந்தெடுப்போம் நல்ல பொழுதுபோக்கை.

Make a commitment to have fun.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com