பயிற்சி இருந்தால் எல்லாமே ஈஸி. பயிற்சி இல்லாவிடிலும் முயற்சி செய்தால் தன்னால் ஈஸியாகிவிடும்!

Father with son...
Father with son...www.mensxp.com

காட்சி 1:

“ஏண்டா! இந்த சின்னக் கணக்கைக்கூடப் போட முடியலையா? எவ்வளவு ஈஸி. அரை மணி நேரமா சும்மா டைம் பாஸ் பண்ணிக்கிட்டு இருக்க!” என்று சத்தம் போட்ட தந்தையிடம்,

“அப்பா! எனக்குத் தெரியலை. நீங்க சொல்லிக் கொடுங்க” என்றான் மகன்.

வாங்கிப் பார்த்த தந்தைக்கு சுத்தமாகத் தெரியவில்லை. ஈஸியில்லையெனப் புரிய, பேசாமல் அங்கிருந்து நகன்றார். முயற்சி செய்யவில்லை.

காட்சி 2:

“டார்லிங்! உனக்கு மைசூர்ப் பாகு செய்யத் தெரியுமா?”

“ஓ! ரொம்ப ஈஸிங்க!”

“எனக்கு சாப்பிடணும்போல இருக்கு. செஞ்சு தரயா?”

“சரிங்க!” என்று சொல்லி கிச்சனுள் சென்ற டார்லிங் அரைமணி நேரமாக வெளியே வரக் காணோம். கணவன் உள்ளே சென்று பார்க்கையில், மைசூர்ப் பாகு கல் மாதிரி இருந்தது. கரண்டியும் வாணலியும் முத்தமிட்டுக்கொண்டிருந்தன.

காட்சி 3:

அலுவலக அதிகாரி தன்னால் செய்ய இயலாத கடினமான சில வேலைகளை, “இதெல்லாம் ஈஸியானதுதான்” என்று கூறி, கீழ் வேலை பார்ப்பவர்களிடம் தள்ளிவிட்டு விடுவார். அதைச் செய்பவர்களுக்குத்தான் ஈஸியா? இல்லையா? என்பது தெரியும். பலர் முணுமுணுத்தவாறே, மண்டையை உடைத்துக்கொண்டு வேலையில் ஈடுபடுவார்கள். முயற்சி செய்து முடிப்பவர்கள் சிலரே.

இதையும் படியுங்கள்:
முதுமை கோடுகளை நீக்கி, இளமையை தக்கவைக்கும் எண்ணெய்!
Father with son...

ப்படித்தான் எந்த ஒரு விஷயத்தையும் சற்று எட்டியிருந்து பார்க்கையில் ‘ஈஸி’ என்று நினைக்கத் தோன்றும். செய்ய முற்படுகையில்தான் அதன் சிரமங்கள் புரிய வரும். ஈஸியென எண்ணி ஒரு காரியத்தில் இறங்கியபின், அது ஈஸியாக இல்லாவிட்டால்கூட, மனதைத் தளரவிடாமல் முடிந்தவரை அதில் ஈடுபட்டு முடிப்பது அவசியம். கண்டிப்பாக முயற்சி திருவினையாக்கும்.

இதுகுறித்த ஒரு சம்பவமும், முன்னுரையும்.

முன்னுரை:

சைக்கு ஸ்ருதி முக்கியமென கலைஞர்களுக்குத் தெரியும். தும்பூரா, ஹார்மோனியம், எலெக்ட்ரானிக் கருவி போன்றவைகளில் ஸ்ருதி வைத்துக்கொள்வார்கள். ஸ்ருதி ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இதைக் கையாளும் முறைகள்:

தம்பூரா: இதன் தந்திகளில், ஒரு கையிலுள்ள மூன்று விரல்கள் ‘ஸ – பா – ஸா’வை இசைக்க, மற்றொரு கை அதன் அடிப்புறப் பகுதியைத் தாங்கிக்கொண்டிருக்கும். எத்தனை கட்டையில் ஸ்ருதி வைக்கவேண்டுமென்பதை இசைக் கலைஞர்கள் கூறுவார்கள்.

ஹார்மோனியம்: ஸ்ருதிக்கேற்ப ஒரு கையிலுள்ள மூன்று விரல்கள் ‘ஸ-பா-ஸா’ என்கிற கட்டைகளில் வைத்து, மற்றொரு கையால் நாதம் வருவதற்குரிய விசைப்பலகையை இயக்க வேண்டும். இதில் அநேக வகைப் பாடல்களை அநாயாசமாக பலர் வாசிப்பதுண்டு.

எலெக்ட்ரானிக் ஸ்ருதிப் பெட்டி: ஆட்டோமேடிக்காக, தேவைக்கேற்ப ஸ்ருதியை இதில் set செய்துகொள்ள இயலும். கைகளின் தயவு தேவையில்லை.

பலர் தம்பூரா மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்ருதிப்பெட்டி என இரண்டையும் உபயோகிப்பதுண்டு. தம்பூரா மற்றும் ஹார்மோனியத்தில் ஸ்ருதி போடுவதற்கு நல்ல பயிற்சி தேவை. ஈஸி கிடையாது. பார்ப்பதற்கு ஈஸி போல தோன்றும்.

ப்போது சம்பவத்திற்கு வருகிறேன்.

ஹார்மோனியத்தில் ஸ்ருதி போடுங்களேன்...
ஹார்மோனியத்தில் ஸ்ருதி போடுங்களேன்...depositphotos.com

சபா ஒன்றில் பக்திப் பாடல்களின் நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதை அறிந்து, அங்கே சென்றேன். ஐந்து பெண்மணிகள் குழுவாகப் பாட அமர்ந்திருந்தனர். அதில் தலைமை தாங்கிப் பாடல்களை ஆரம்பிக்கும் பெண்மணி எனக்குத் தெரிந்தவராக இருந்தார். அவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறி பார்வையாளர் பகுதியில் சென்று அமர்ந்தேன்.

சபா தலைவர் பாடுபவர்களை அறிமுகம் செய்தார். அவர்கள் பாட ஆரம்பிக்கும் முன்பாக, தலைமைப் பெண்மணி, ‘மீனா! ஒரு அரைமணி நேரம் எங்களுக்காக ஹார்மோனியத்தில் ஸ்ருதி போடுங்களேன்!” எனக் கூறுகையில், தயங்கினேன். ஏதோ 5 – 10 நிமிடங்கள் என்றால் பரவாயில்லை. அரை மணி நேரமா? என்று யோசித்தேன்.

மீண்டும் அவர் கேட்கையில், “அதற்கென்ன! எத்தனை கட்டையில் ஸ்ருதி என்று வைத்துக் கொடுங்கள்” என்றேன்.

பல வருடங்களுக்குப் பிறகு ஹார்மோனியத்தில் ‘ஸ – பா – ஸா’. ‘ஈஸிதான்’ என மனதிற்குள் மத்தாப்பூ பிரகாசித்தது.

ஹார்மோனியத்தில் 4½ கட்டை ஸ்ருதியை அவர் வைத்துக்கொடுக்க, மிகவும் கெத்தாக அதைத் தொட்டு வணங்கி, கீழே அமர்ந்து ஹார்மோனியத்தை இயக்க ஆரம்பித்தேன்.

அவர்களின் முதல் பாடல் முடிவடைகையில் கால் வலிக்க, ஒரு காலை லேசாக மடித்து வைத்துக்கொண்டேன். அடுத்த பாடலின் இடையில் கை வலிக்க ஆரம்பிக்க, லேசாக விசைப்பலகையை இயக்கி ஸ்ருதி போடுகையில், முதலில் போட்ட மாதிரி ஸ்ருதியை கொஞ்சம் அழுத்தமாகப் போடுங்களேன்” என்று பாடுபவர்கள் மெதுவாகக் கூறுகையில், முடியவில்லையென பதிலளிக்க மனம் வரவில்லை.

இதையும் படியுங்கள்:
ஓ மணப்பெண்ணே! இதையெல்லாம் கவனி 6 மாதங்களுக்கு முன்னே!
Father with son...

ஈஸியில்லை என்று புரிந்துபோனது. இருந்தாலும், ஏற்றுக்கொண்டதை நல்லபடியாக செய்ய சக்தியைக் கொடு கடவுளே! என அனைத்து தெய்வங்களையும் வேண்டிக்கொண்டேன். கண்களை மூடி ரசிப்பதுபோல பாவனை செய்து, கைவலியைப் பொறுத்துக்கொண்டு அழுத்தமாக ஸ்ருதி போட; அரை மணி நேரம் ஓடிவிட்டது. நிகழ்ச்சியும் முடிவடைந்துவிட்டது.

ஈஸியென எண்ணியது ஈஸி இல்லை எனினும், இடையில் நிறுத்திவிடாத மன உறுதியை அளித்தது இறையருளே.

பயிற்சி இருந்தால், எல்லாமே ஈஸிதான். பயிற்சி இல்லாவிடினும், முயற்சி செய்தால், ஓரளவு ஈஸியாக்கிவிடலாம்.

என்ன சரிதானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com