ஒவ்வொரு தோல்வியிலும் வெற்றிக்கான விதைகள் உள்ளன. தோல்வியிலிருந்து கற்றுக் கொள்வதுதான் உண்மையான வெற்றி. தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்வது நம்முடைய வாழ்வில் மாற்றங்களைக் கொண்டு வரும்.
தோல்வி என்பது ஒரு வகையான கற்றல். வெற்றிகரமான மக்கள் எப்பொழுதும் தோல்வியை ஒரு அனுபவப் பாடமாகக் கொண்டு வெற்றியை நோக்கி முன்னேறிச் செல்கிறார்கள்.
ஊக்கமும், தோல்வியும்தான் வெற்றிக்கான படிக்கட்டுகள். தோல்விதான் வெற்றியைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தையும், வழிகாட்டுதலையும் வழங்குகிறது. வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் தோல்வியைக் கண்டு ஒருபோதும் பயப்பட மாட்டார்கள். அதிலிருந்து கற்றுக்கொண்டு வளர வேண்டியது அவசியம் என்பதை புரிந்து கொள்வார்கள்.
வெற்றியைக் கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு தோல்வியின் காரணத்தையும் கண்டறிவது முக்கியம். தோல்வியின் காரணத்தை கண்டறிந்தால்தான் அதிலிருந்து வெற்றிக்கான பாதையை அடைய முடியும்.
தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் அதனை ஏற்றுக் கொள்ளப் பழகினால் தான் இன்னும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கான பாதையை அடைய முடியும். தோல்விகள் வெற்றிக்கான படிக்கட்டுகள்.
வாழ்க்கையில் தோல்விகளை எதிர்க்கொள்வதை தவிர்க்க இயலாது என்பது போல் அதைக் கண்டு பயப்படாமல், பின்தங்காமல் இருப்பதும் வெற்றிக்கான முயற்சிகளை எடுப்பதில் தீவிரம் காட்ட உதவும்.
வெற்றியை உங்கள் தலைக்கு வர விடாதீர்கள்; தோல்வியை உங்கள் இதயத்திற்கு வர விடாதீர்கள் என்று கூறப்படுவதுண்டு. ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான விதைகள் என்பதை மறக்க வேண்டாம்.
ஒருமுறை தோல்வி அடைந்தால் எல்லாவற்றிலும் தோல்வி அடைவோம் என்று அர்த்தமல்ல. தொடர்ந்து செய்யும் முயற்சியும், நம்பிக்கையும் நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
தோல்வி என்பது அவமானம் இல்லை. அடுத்து எடுக்கும் முயற்சியை எப்படி கையாள போகிறோம் என்பதை தீர்மானிக்கும் சிறந்த ஆயுதமாக தோல்வி உள்ளது.
தோல்வியுடன் நமக்கு எதிர்மறையான புரிதல் உள்ளது. உண்மை என்னவென்றால் தோல்வியே வெற்றிக்கான முதல் படி. தோல்வி அடையவில்லை என்றால் நாம் வாழ்வில் வெற்றி பெறவில்லை என்று பொருள்.
தோல்வியிலிருந்து நாம் கற்கும் விஷயம் நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கி நம்மை வேகமாக செலுத்துகிறது. நம் முயற்சியை தீவிரப்படுத்துகிறது.