நமது வாழ்க்கையில் நடக்கும் அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு! 

Sad Girl
Everything Happened for A Reason

நமது வாழ்க்கையில் எல்லாம் ஒரு காரணத்திற்காகதான் நடக்கிறது” என்ற நம்பிக்கை பெரும்பாலான மனிதர்களால் நம்பப்படுகிறது. வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும், நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருந்தாலும் அதன் பின்னால் ஒரு நோக்கம் அல்லது பெரிய அர்த்தம் இருப்பதாக இது நமக்கு உணர்த்துகிறது. நீங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் இதன் உண்மையை புரிந்துகொள்ள முடியும். 

இந்த கருத்தின் அடிப்படைக் கொள்கை என்னவென்றால், என்னதான் நாம் அதிகப்படியான துன்பங்களை எதிர்கொண்டாலும், அதன் நோக்கம் மற்றும் அனுபவத்தை புரிந்துகொண்டு வாழ்க்கையில் வெற்றி அடைவதை நோக்கியே நம்பிக்கை இருக்க வேண்டும் என்பதை தெரியப்படுத்துவதற்காகும். ஒரு நபர் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, அந்த நபரின் தனிப்பட்ட வளர்ச்சி, எதையாவது ஒன்றை முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் மற்றும் சுய முன்னேற்றத்திற்கான விஷயங்களை தேட ஊக்குவிக்கிறது. 

நமது வாழ்க்கையில் மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாத பகுதியாகும். ஒரு காரணத்திற்காக நடக்கும் அனைத்துமே, இந்த மாற்றங்களை புரிந்து கொள்வதற்கும், ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை நடத்துவதற்கும் நமக்கு கற்பிக்கிறது. இது உங்களுக்கு உடனடியாக தெரியவில்லை என்றாலும், உங்கள் வாழ்வில் நடந்த ஏதோ ஒரு கெட்ட விஷயம் காரணமாக எதிர்காலத்தில் நல்லது நடந்தால், இந்த கருத்தின் உண்மை உங்களுக்கு புரிய வரும். 

எல்லாம் ஒரு காரணத்திற்காக தான் நடக்கிறது என்கிற நம்பிக்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டால், நீங்கள் பார்க்கும் அனைத்துமே உங்களுக்கு அழகாகத் தெரிய ஆரம்பிக்கும். வாழ்க்கையில் கெட்ட விஷயங்கள் நடந்தாலும், அதை எதிர்கொண்டு அடுத்த இலக்கை நோக்கி நகர ஆரம்பிப்பீர்கள். யாரிடமும் அதிகம் கோபம் வராது. உங்களை முன்னேற்றுவதில் மட்டுமே அதிக கவனம் இருக்கும். இந்த மனநிலை உங்களை நல்ல நிலைக்கு கொண்டு சென்று, வாழ்க்கையில் ஒரு நிம்மதியான சூழலை உருவாக்கும். 

இதையும் படியுங்கள்:
புத்தகங்களைப் படிப்பதற்கான எலான் மஸ்கின் 5 யுக்திகள்! 
Sad Girl

எனவே உங்கள் வாழ்வில் இனி எது போன்ற கெட்ட விஷயங்கள் நடந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நல்லது நடந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதோ, அதேபோல கெட்டதையும் சமமாக எடுத்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற கெட்ட நிகழ்வுகளை உங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ளுங்கள். 

இந்த மனநிலை உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். 

நடப்பது எல்லாம் நன்மைக்கே! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com