துன்பங்கள் இல்லாத மனிதர்கள் உண்டென்று இந்த உலகத்தில் யாரவது உண்டா? இருக்கலாம், மயானத்தில் அமைதியாக உறங்கி கொண்டிருக்கும் நல்ல மனிதர்கள்தான். ஏனென்றால் அவர்களுக்குதான் இன்பம், துன்பம் எதுவுமே தெரியாது.
இந்த இன்பங்களும் துன்பங்களும் மனிதர்களாக ஏற்படுத்திகொண்ட ஒரு மாயையான சிந்தனையாகும். இன்பத்திற்கும் துன்பத்திற்கும் ஏதாவது உருவம் இருக்கின்றதா? நிச்சயமாக இல்லை என்ற பதில் தான் சரியானதாக இருக்கும்.
நடக்கும் நிகழ்ச்சிகள் தனக்கு சாதகமாக இருந்தால் அதை இன்பம் என்றும், பாதகமாக இருந்தால் துன்பம் என்றும் ஒருவர் செயற்கையாக, மனதின் தவறான உந்துதலில் அல்லது மனதின் தவறான சிந்தனையானால் எடுத்து கொள்கிறார். எனவே ஒருவர் துன்பம் என்று தன்னை மனதாலும் உடலாலும் கஷ்டபடுத்தி கொள்கிறார் என்றால் அது மனம் சார்ந்த பிரச்னை அல்லது சிந்தனை என்று அடித்து கூறலாம்.
இந்த மனம் சார்ந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு மனதை சரியாக சிந்திக்க செய்வதுதான். அதற்க்கு ஒரே தீர்வு தியானம்தான். தியானத்தின் மூலம் மூளையினுடைய அலைகள் ஒழுங்கு படுத்தப்பட்டு எது உண்மை, எது போலி என்று சிந்திக்க செய்யும். அப்படி சிந்திக்கும்போது அங்கு இன்பம் துன்பம் என்ற மாயைகளுக்கு வேலை இல்லை.
துன்பங்கள் என்று மனிதன் நினைத்து கொண்டு இருக்கும் செயல்கள் எதுவும் நிரந்திரம் அல்ல. அதே போன்று இன்பம் என்று மனிதர்கள் நினைத்து கொண்டு இருக்கும் எந்த செயல்களும் நிரந்திரம் அல்ல. இதை எப்போது உணருவோம் என்றால் மனது தெளிவாக அல்லது சரியாக சிந்தனை செய்யும்போதுதான்.
இந்த உலகத்தில் எல்லா செயல்களுமே இரட்டை இரட்டையாகத்தான் இருக்கும். இதை ஒரு இயற்கையின் விதி என்று சொல்லலாம். மின்சாரத்தை எடுத்து கொண்டீர்கள் என்றால் அதில் positive negative என்ற விதியின் அடிப்படையில்தான் ஒலி, ஒளி கிடைக்கிறது. அதுபோன்று வாழ்க்கையில் இன்பம் துன்பம் என்ற இரண்டும் இருந்தால்தான் வாழ்க்கை என்ற ஒளி விளக்கு பிரகாசமாக எரிய முடியும்.
குடும்பத்தில் ஆணும், பெண்ணும் சேர்ந்து ஒத்து சென்றால்தான் குடும்ப வாழ்க்கை பிரகாசிக்கும். இங்கும் இரட்டை விதிதான்.
பூஜ்யமும் ஒன்றும் சேர்த்தால்தான் இந்த உலகில் எந்த computer ம் இயங்க முடியும். பூஜ்யமும் ஒன்றும் சேரும்போதுதான் அங்கு கம்ப்யூட்டர் இயங்குவதற்கு binary என்ற concept உருவாகிறது. இங்கும் இரட்டை விதிதான்.
இன்பமும் துன்பமும் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதை நாம் முதலில் உணரவேண்டும் அதற்கு ஏற்றார்போல் நம் மனப் பக்குவத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.