‘எல்லாமே போச்சு! வாழ்க்கை முடிந்துவிட்டது!’ என்று புலம்புபவரா நீங்கள்? மீண்டு வரலாமே!

Fearing about the lost Life
Fear about the life

வாழ்க்கை என்பது மகிழ்ச்சியின் சிகரங்கள் மற்றும் விரக்தியின் பள்ளத்தாக்குகள் நிறைந்த ஒரு சுழற்சி பயணம். சில சமயங்களில், நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்று எண்ணி, நம்பிக்கையின்மையின் விளிம்பில் நிற்பதைக் காணலாம். ஆனால் அந்த இருண்ட தருணங்களில் கூட, முன்னேற்றத்தின் வழியை மீண்டும் கண்டறிந்து நம் வாழ்க்கையை மீட்டெடுக்கும் வாய்ப்பை எப்படி உருவாக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

1. வெற்றிடத்தை ஒப்புக்கொள்ளுங்கள்

நாம் தொலைந்து விட்டதாக உணரும் போது, ​​​​முதலில் நம் உணர்ச்சிகளை ஒப்புக் கொள்வது மிகவும் அவசியம். அதைவிட்டு நம் வலியை மறந்தோ அல்லது எல்லாம் நன்றாக தான் இருக்கிறது என்று உங்களுக்கு நீங்களே நடித்துக்கொள்வது உங்கள் போராட்டத்தை நீடிக்க தான் செய்யும். மாறாக, வெறுங்கையுடன் நிற்பதுபோல் உணருங்கள். காரணம் இழந்த உணர்வு மனித அனுபவத்தின் இயல்பான பகுதியாகும். அதற்கென்று நீங்கள் அழிந்துவிட்டீர்கள் என்று அர்த்தமல்ல; இதன் பொருள் உங்களுக்கு சிறந்த வேறொன்று காத்திருக்கிறது என்பதே.

2. கடந்து வந்த பாதையை பற்றி சிந்தியுங்கள்

ஒரு படி பின்வாங்கி, உங்கள் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி சிந்தியுங்கள். எந்த தருணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தன? எந்த அனுபவங்கள் உங்களை உருவாக்கின? நீங்கள் வெறுத்த வேலைகள், மனதிற்கு பிடித்தவர்களிடம் பேசிய தருணங்கள், அல்லது நேசிப்பவரின் மரணம் போன்று முடிந்து விட்ட அத்தியாயங்களைக் புரட்டிப் பாருங்கள். இந்த விஷயங்கள் நம் நேரத்தை வீணாக்குவது போல் உணரலாம். ஆனால், அவை தான் புதிய தொடக்கங்களுக்கான இடத்தையும் உருவாக்குகின்றன. இந்த விஷயங்கள் தான் உங்களை நன்றாக சலவை செய்து, நீங்கள் யார் என்பதை கண்டறியும் வாய்ப்பை மீண்டும் பெற்று தரும்.

3. பொழுதுபோக்குகளை மீண்டும் பார்வையிடுங்கள்

ஒரு காலத்தில் உங்கள் ஆர்வத்தைத் தூண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பதை நினைவிற்கு கொண்டு வாருங்கள். ஒருவேளை நீங்கள் வண்ணம் தீட்டவோ, இசைக்கருவி வாசிக்கவோ அல்லது கவிதை எழுதவோ பழகி இருக்கலாம். அந்த பழைய பொழுதுபோக்குகளை மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். சில நேரங்களில், தொலைந்து போன நோக்கங்கள் மற்றும் கவனங்கள் நீங்கள் பிடித்ததை செய்யும் போது வெளிப்படலாம்.

இதையும் படியுங்கள்:
இயற்கை நறுமணப் பொருட்களை நாமே எப்படி உருவாக்குவது?
Fearing about the lost Life

4. புதிய விஷயங்களுடன் பரிசோதனை செய்யுங்கள்

வாழ்க்கையின் அர்த்தம் பெரும்பாலும் ஆராய்வதிலிருந்து வெளிப்படுகிறது. புதிதாக ஏதாவது ஒன்றை முயற்சிக்கவும். எடுத்துக்காட்டிற்கு சமையல் வகுப்பு, நடனப் பயிற்சி அல்லது தற்காப்பு கலைகளை கற்பது போன்ற அனுபவங்கள் உங்கள் செயலற்ற உணர்வுகளை எழுப்பி, ஒரு நோக்கத்துடன் உங்களை இணைக்கும். இறுதியில் உங்களை எதிர்பாராத பாதைகளுக்கு அழைத்து சென்று பல பொக்கிஷங்களை உங்கள் கண்களுக்கு புலப்பட வைக்கும்.

5. இணைப்பைத் தேடுங்கள்

தனிமை, இழப்பு உணர்வுகளை அதிகரிக்கிறது. நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது ஆதரவு குழுக்களை அணுகவும். உங்கள் போராட்டங்களைப் பகிர்ந்து, மற்றவர்களின் கதைகளைக் கேளுங்கள். எந்த நேரத்திலும் நாம் தனியாக இல்லை என்பதை இணைப்பு நமக்கு நினைவூட்டுகிறது. சில சமயங்களில், வேறொருவருக்கு அவர்களின் வழியைக் கண்டறிய உதவுவது நமது சொந்த பாதையை கூட ஒளிரச் செய்யலாம்.

6. மீண்டு வாருங்கள்

மூடல் என்ற வார்த்தை நம் வாழ்க்கையில் என்றைக்கும் நிரந்தரமானது இல்லை. எதிலும் ஓர் மீள்வதற்கான வாய்ப்பு ஒளிந்திருக்கும். அது தெரியவரும் பட்சத்தில் நம் மனதில் தோல்வியால் உண்டான காயங்கள், கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்விடும்.

ஆகையால் நாம் மனதில் வைக்க வேண்டிய ஒரே விஷயம் இயற்கையாக நம் வாழ்க்கைக்கு ஒரு முடிவு வரும் வரை, வாழ்வதற்கான வாய்ப்புகள் இன்னும் இருக்கிறது என்பதே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com