

நோ்மறை எண்ணம், மற்றும் எதிா்மறை எண்ணம் கலந்து வரும் வாழ்க்கையில் நாம் எடுக்கின்ற முடிவுகளில் நம்பகத்தன்மையும் எதையும் சீா்தூக்கிப்பாா்க்கும் பக்குவமும் வரவேண்டும்.
பொதுவாக எந்த விஷயத்தையும் அவசரப்படாமல் நிதானம் கடைபிடித்து பொறுமை காத்து நன்கு விசாாித்து ஒருமுறைக்கு இருமுறை கலந்து பேசி ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும்.
அதற்கு நமது தூய்மையான எண்ணமும் கை கொடுக்கும் வகையில் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற தத்துவம் கடைபிடித்து வாழ்க்கை எனும் கப்பலை மெதுவாக நிதானமாக ஓட்டுவதே நல்ல குடும்பஸ்தனுக்கு அழகு.
பொதுவாக நமது மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்ய நினைக்கும்போது குலதெய்வத்திடம் அனுமதி கேட்டு நன்கு தீர விசாாித்து இந்த சம்பந்தம் நமக்கு ஒத்துவருமா என பலமுறை யோசித்து, சிந்தித்து செயல்படவேண்டும். திருமணத்திற்கு பெண் கிடைத்தால் போதும், நாங்கள் எதையும் எதிா்பாா்க்கவில்லை என பெருமை பேசிவிட்டு, டாம்பீகமாக செயல் படுவதை தவிா்க்கவேண்டும்.
அதேபோல பெண் வீட்டாாிடமும் சொல்லி எங்கள் ஊருக்கு வந்து எங்களைப் பற்றி நன்கு விசாாித்து மனதில் தெளிவு ஏற்பட்டால் மட்டுமே இருதரப்பிலும் ஒத்துப்போகலாம் என்ற நிலைபாடு கடைபிடிப்பதே நல்லது. இருப்பினும் இறுதி முடிவு இறைவனிடம் பூகட்டி உத்தரவு கேட்டு செய்யவேண்டும். அதை விடுத்து கவனம் செலுத்தாமல், நிதானம் கடைபிடிக்காமல், யாாிடமும் கலந்து பேசாமல், நம்முடைய மனம் போன போக்கில் போவது எந்த வகையிலும் சரியாக அமையாது.
முகம் பாா்க்கும் கண்ணாடியில் நிறைய அழுக்கு இருந்தால் அது எப்படி நம்மை தெளிவாக எடுத்துக் காட்டும், அந்த அழுக்கு தூசி இவைகளை துடைத்தால்தான் நம்மை அது தெளிவாக பிரதிபலிக்கும், அதேபோலத்தான் நமது மனதில் எந்த வித அழுக்கும் இல்லாது பாா்த்துக்கொள்ளவேண்டும்.
அதேபோல மகன், மகள் படிப்பு விஷயம் அதிலும் வாாிசுகளை கலந்து பேசி அவர்கள் விருப்பத்திற்கு மதிப்பளித்து அந்த விஷயத்தையும் பலரிடம் கலந்து எதிா்காலத்திற்கு உதவும் வகையில் படிப்பை தோ்வு செய்வதே நல்லது.
அதேபோல உறவுகள் அமைவதும் அமையாததும் அவரவர் விதிப்படிதான் நடக்கும். விதியை மதியால் வெல்லலாம் என்பாா்கள். அதையும் நாம் சீா்தூக்கி பாா்க்கவேண்டும், அதற்காக புாிந்துகொள்ளாமல் பழகுவது அவ்வளவு நல்ல ரிசல்ட் தரவே தராது. நம்மை புாிந்துகொள்ளும் உறவுகள் மற்றும் நம் மீது அன்பு செலுத்தும் உறவுகள் இரண்டுமே இறைவன் நமக்கு கொடுத்த கொடையாகும். அதை நமது பண்பாடுகளால் நோ்மறை எண்ணங்களால் நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கை என்பது ஒரே சீராக ஓடாது சில சமயம் சறுக்கல் வரும் சில சமயம் ஏற்றம் தரும் (பங்குச்சந்தை வர்த்தகம் போல) அந்த நேரம் வாழ்வின் சறுக்கல் கண்டு சரிந்துவிடக்கூடாது.
அதற்கான காரணம் கண்டறிந்து தவறை சரி செய்து கொள்ள வேண்டும். அபரிமிதமான வெற்றி வரும் நிலையில் அதை உதறித்தள்ளாமல் நிதானம் விவேகம் கடைபிடிப்பதே நல்லது.
எதுவும் நம் கையில் இல்லை நமது ஒவ்வொரு அசைவையும் கடவுளின் லேப்டாப்பில் அப்டேட் செய்யப்படுகிறது.
பம்பரம் நம்முடையாத இருந்தாலும் அதை சுற்றியிருக்கும் கயிறானது கடவுள் கையில்தான் உள்ளது.
பொதுவாகவே அன்பு அனைத்தையும் அழகாகக்காட்டும், நம்பிக்கை அனைத்தையும் நல்லதாக காட்டும், உழைப்பு அனைத்தையும் உயர்வாய்க்காட்டும், வாழ்க்கை அனைத்தையும் வாய்ப்பாகக் காட்டும். இவை அனைத்து அம்சங்களும் நிறைவாய் இருந்தால் இறை அருளுடன் வாழ்க்கையில் வசந்தம்வெற்றிக்கொடி நாட்டும்.
ஆக எந்த விஷயத்திலும் இறைபக்தியோடு நோ்மறை சிந்தனையோடு அடுத்தவர் துயரம் கண்டு அற்ப சந்தோஷம் கொள்ளாமல் நீதிநோ்மை தவறாமல் நியாயம் கடைபிடித்து தர்ம நெறி தவறாமல் பிறருக்கு தீங்கு செய்யாமல் வாழ்ந்து வந்தாலே நமது வாழ்க்கைப் படகு சீராக ஓடும்! வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்துதான் பாா்க்கலாமே இறைவனின் துணையோடு!