
இறைவன் கொடுத்த வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற பல விஷயங்களில், நாம் புாிந்துகொள்ளும் நிலையில், மனித முகங்களில்தான் எத்தனை எத்தனை பாா்வை, எத்தனை எத்தனை சூழ்ச்சி, எத்தனைஎத்தனை வேகம்,
எத்தனை எத்தனை, முகபாவங்கள், எத்தனை, எத்தனை எண்ணங்கள். அப்பப்பா அவைகளை பலவாறு அடுக்கிக்கொண்டே போகலாம்.
அது விஷயத்தில் நாம் எடுத்து வைக்கும் அடிகளில், பழகுகிற விதங்களில், வெகு ஜாக்கிரதையாக பழகவேண்டும்.
இங்கே பிறர் மீது நம்பிக்கை வைப்பதும், உண்மையைக் கடைபிடிப்பதிலும் நிறைய வித்யாசங்கள் உள்ளன.
பொதுவாகவே பாா்த்துப் பழகு, தப்பாகப் பழகிவிடாதே,! ஜாக்கிரதை!
யாரையும் எளிதில் நம்பிவிடாதே, என பொியவர்கள் சொல்வது நிஜம்.
உண்மையாய் பழகும் நபர்களை அடையாளம் காண்பது எளிதான விஷயமல்ல. நிதானத்துடன் பழகு, நம்பிக்கை வை, அதேநேரம் அதீத நம்பிக்கையும் ஆபத்தாகவே முடியும் என நமது வீட்டுப் பொியவர்கள் நம்மீதுள்ள அக்கறையில் பேசுவாா்கள்.
அவர்கள் சொல்லும் போதனைகள் அப்போது நமக்கு கசப்பாகத்தான் தொியும். எாிச்சல்கூட வரலாம்.
ஏன் சில சமயம் எனக்கு எல்லாம் தொியும்.
நான் என்ன சின்ன குழந்தையா? தேவையில்லாமல் தலையிடவேண்டாம். உங்க வேலையைப் பாருங்கள், என்று கூட சொல்வதும் நடைமுறையில் பல குடும்பங்களில் நிகழ்ந்து வருவதும் வாடிக்கையே! உண்மை கசக்கத்தான் செய்யும்.
பொய் இனிப்பாகத்தான் தொியும். நாம்தான் பொியவர்கள் சொல்லுகின்ற பாடங்களை மனதில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பலரது அனுபவங்களே நமக்குபாடமாக அமைவதே உண்மை.
இதைப்போன்றே நாம் ஒருவரைக்கண்டவுடன், அவரைப் பற்றி நமது மனமானது அவர் சொல்லும் விஷயங்களை அப்படியே நம்புவது அறியாமையுடன் கூடிய உண்மை.
சில சூழலில் நாம் நன்கு பழகிய நபர்கள் சந்தர்ப்ப சூழலுக்கேற்ப அவர்களை மாற்றிக்கொள்ளும்போது பழகாத மனிதர்கள் மீது நாம் நம்பிக்கை வைத்தது உண்மைதானோ எனத்தோன்றும்.
அப்போது நமது மனதில் கவிஞரின் பாடலே நினைவில் வந்து போவது வியப்புதான்" உண்மை எது பொய் எதுன்னு, ஒன்னும் புாியலே, நம்ம கண்ணை நம்மாலே நம்ப முடியலை"
ஆக நாம் எதிலும் கவனச்சிதறல் இல்லாமல் நம்பக்தன்மையோடு உண்மை நிலை அறிந்து பழகவேண்டும்.
எந்த புற்றில் எந்தப்பாம்பு இருக்கிறது என்பது கண்டும்பிடிக்க முடியாத காலமிது. எனவே எதையும் எளிதில் நம்பிவிடாமல் எது உண்மை, எது பொய் என நிதானத்துடன் செயல்பட்டு, விவேகத்துடன் நடந்து கொள்வதே மிகவும் சாலச்சிறந்தது.
பொியவர்கள் அவர்களது அனுபவ பாடங்களை நமக்கு சொல்லும் போது ஏற்றுக்கொள்வதே நல்ல ஆரோக்கிமான வாழ்விற்கு அடித்தளமாகும்!