
உழைக்க தெரிந்தவனால் மட்டுமே வாழ்க்கை ரசிக்க முடியும். வேறுவிதமாகச் சொன்னால் வாழ்க்கை என்பதன் அர்த்தமே உழைப்புதான். உழைப்பு என்று சொல்லும் பொழுது அதனுடன் வெற்றியும் சேர்ந்து நிற்கிறது. வெற்றி என்றால் பயன்தான் பயன் இல்லாத உழைப்பு வீண்தான்.
ஒரு அலுலகத்தில் ஒரு குமாஸ்தாவாக சேருகிறீர்கள். உண்மையாக உழைக்கிறீர்கள். அதற்கு மெல்ல மெல்ல உங்களுக்கு வேலை உயர்வு வரும். ஆனால் உங்களுடைய குறிக்கோள் எவ்வளவு சீக்கிரம் மேனேஜர் ஆகமுடியும் என்பதில் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் எப்படி உழைக்கவேண்டும். என்னென்ன தகுதிகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். என்பதில் உங்கள் ஆர்வம் இருக்க வேண்டும். அதற்காக மேற்கொண்டு எதை படிக்கலாம் எப்படி அடுத்தவரை கவரும்படி நடந்துகொள்ள வேண்டும் . எப்படி உங்கள் தனித்தன்மையை அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் என்பதிலேயே உங்கள் கவனம் இருக்க வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால் நீங்கள் இப்பொழுதே கனவு காண வேண்டும். அதாவது நீங்கள் ஒரு மேனேஜராக ஆனால் கனவு மாத்திரம் போதாது அதற்கு ஏற்ப புத்திசாலித்தனமான உழைப்பும் வேண்டும்.
தடைகள் இல்லாமல் முன்னேற்றம் கிடையாது. தடங்கல் என்பது உங்கள் தன்னம்பிக்கைக்கு வைக்கும் பரீட்சை. எந்த அளவுக்கு உங்கள் தன்னம்பிக்கை வலுவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு உங்கள் தடங்கல்கள் சீக்கிரம் தவிடுபொடியாகிவிடும்.
தேவை விழிப்புணர்வு, ஆர்வம், விடாமுயற்சி. தயவு செய்து அடுத்தவர்களைப் பார்த்து பொறாமை கொள்ளாதீர்கள் .மாறாக, அடுத்தவர் எப்படி முன்னேறுகிறார் என்று கவனித்துப் பாருங்கள். ஒரு சமயம், அவர் ஏதாவது ஒரு குறுக்கு வழியில் கூட -அரசியல்வாதிகள் குறுக்கீடு, லஞ்சம் போன்றவற்றால். முன்னேறலாம். அதற்காகக் கவலைப்படாதீர்கள் ஆனால் அதைப் பின்பற்றாதீர்கள் பின்னால் நீங்கள் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிவரும் நேர்மையாக முயற்சி செய்யுங்கள் போதும்.
நீங்கள் ஒரு வியாபாரியாக இருந்தால், வெறும் உழைப்பு மாத்திரம் போதாது. முக்கியமாக உங்களுக்கு நாணயம் வேண்டும்.
நீங்கள் வியாபாரத்தில் நேர்மையாகவும், நாக்கு நயத்தோடு வசீகரமாகவும் புன்முறுவலோடு எந்த அளவுக்கு பேசுகிறீர்களோ அந்த அளவுக்கு வியாபாரம்" ஓஹோ "என்று நடக்கும் .
அடுத்து, நீங்கள் வியாபாரத்தில் பிறருக்கு கடன் கொடுப்பதுபோல். நீங்களும் பிறரிடம் கடன் வாங்க வேண்டிவரும். அப்பொழுது அதைத் திருப்பிக் கொடுப்பதைப் பற்றி பலதடவை யோசித்து, அவரிடம் வாக்குறுதி கொடுக்க வேண்டும். அப்படி வாக்குறுதி கொடுத்தால், எந்த குழ்நிலையிலும் அதை எப்படியாவது திருப்பிக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்க முடியாவிட்டால். அன்றைக்கு நீங்களே அவரிடம் நேரடியாகச் சென்று நிலைமையைச் சொல்லி மேலும் சில நாட்கள் தவணை கேட்கலாம். ஆனால் இது அடிக்கடி நேராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
வியாபாரத்தில் நீங்கள் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை சமாளிக்க வேண்டிவரும். இதற்கு மிகுந்த பொறுமை தேவை சில நேரங்களில் நஷ்டப்படவும் நேரிடும். பரவாயில்லை. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக நம்புங்கள். அதாவது எந்த சூழ்நிலையிலும் உங்கள் வாடிக்கையாளர்களை எந்தக் காரணம் கொண்டும் இழந்து விடாதீர்கள்.
வேறுவிதமாகச் சொன்னால். வாடிக்கையாளர்கள் அல்லது வாங்குபவர்கள்தான் உங்களுடைய உண்மையான முதலாளிகள் இப்படி எண்ணுபவர்களின் வியாபாரம் பலமடங்கு பெருகி செழித்து வரும்.
ஆகவே உழைப்பே உயர்வு தரும் என்பது எண்ணி உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும்.