
நாம் தினமும் சந்திக்கின்ற நிகழ்வுகளும், பார்க்கின்ற காட்சிகளும், கேட்கின்ற வார்த்தைகளும் எல்லாமே அனுபவங்கள்தான். அனுபவங்களை வைத்து நாம் மனதில் உருவாக்கும் எண்ணங்கள் மற்றும் தீர்மானங்கள், கேள்விகள், கேள்விக்கான விடைகள் என எல்லாமே சிந்தனைகள்தான். எனவே, அனுபவங்கள் இல்லாத இடத்தில் சிந்தனைகள் இருக்க இயலாது. ஒரு விஷயத்தை நாம் அனுபவித்தால் மட்டுமே அதைப்பற்றிய சிந்தனை நம் மனதில் எழும்.
ஒருவர் முதல் முறையாக ஒரு பொருளை பார்க்கிறார் என்றால் அதைப் பற்றிய சிந்தனைகள் அவரது மனதில் எழும். அதைப்பற்றி எப்படி, ஏன், எதற்கு என்ற கேள்விகள் எல்லாம் அவரது மனதில் தோன்றி சிந்திக்க வைக்கும். சிந்தனைகள் நம் அனுபவங்களிலிருந்தே வருகின்றது. அனுபவங்கள் இல்லையென்றால் சிந்தனைகள் இருக்க இயலாது. நம்முடைய அனுபவங்கள்தான் நம் சிந்தனையை தூண்டுகிறது எனலாம்.
மனிதனுடைய வளர்ச்சியும், தேய்வும் அவர்களுடைய மனதில் எழும் சிந்தனையை பொறுத்தே அமைகிறது. எனவே நல்லதையே சிந்திக்க வேண்டும். சிந்தனை என்பது தீர்வின் அடிப்படையில் உள்ள ஆராய்ந்து அறியும் திறனாகும். சிந்தனைகளும் அனுபவங்களும் இரண்டுமே மனித அனுபவத்தின் முக்கியமான அங்கங்களாகும். சிந்தனைகள் என்பது நம் மனதிற்குள் நிகழும் ஒரு உள் செயல்முறையாகும். நாம் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்கிறோம் என்றால் அது நம் மனதில் ஒரு உருவத்தை, உணர்வை அல்லது ஒரு கருத்தை ஏற்படுத்துகிறது.
அனுபவங்கள் என்பது நம்மைச் சுற்றியுள்ள உலகத்துடன் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்பாகும். இது ஒரு நிகழ்வாகவும் இருக்கலாம், உணர்வாகவும் இருக்கலாம். ஒரு புதிய நண்பரை சந்திப்பது, புத்தம் புது புத்தகத்தை படித்தது, புதிய இடத்தை பார்ப்பது போன்றவை அனுபவங்களாகும். சிந்தனைகள் மற்றும் அனுபவங்கள் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.
சிந்தனைகள் நம்மை ஆளுமை படுத்தும். நம்மை சிறந்தவர்களாக உருவாக்கும். அனுபவங்களோ நமக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொடுக்கும். நம்மை வளர்க்கும். இந்த இரண்டும் இணைந்துதான் நம்முடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.
அனுபவங்கள் மூலம் நாம் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்கிறோம், கற்றுக்கொள்கிறோம். அந்த அனுபவங்களை வைத்து பல சிந்தனைகளை உருவாக்குகிறோம். எனவே அனுபவங்கள் இல்லாத இடத்தில் சிந்தனைகள் இருக்க முடியாது.
அதேபோல நம்முடைய சிந்தனைகள் நம்முடைய அனுபவங்களை பாதிக்கின்றன. சில சமயங்களில் சிந்தனைகள் நம்மை எதிர்மறையாகவும் பாதிக்கக் கூடும். கவலை, பயம் போன்ற எதிர்மறை சிந்தனைகளை ஏற்படுத்தும். எனவே நம் சிந்தனைகளை கட்டுக்குள் வைத்து நேர்மறையாக சிந்திக்க முயற்சிப்பது மிகவும் அவசியம்.
அனுபவங்களும் சிந்தனைகளும் நம் வாழ்வில் தேவையான முக்கியமான அங்கங்களாகும். எனவே அவை இரண்டையும் சம நிலையில் வைத்து ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ பழகுவோமா.!