எதிர்பாராத பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? – ஓர் உண்மை கதை!

Motivation Image
Motivation ImageImage credit - pixabay.com

ணிகள் தயார் செய்யும் ஒரு சிறிய நிறுவனத்தில் இந்த நிகழ்வு உண்மையாக நடைப்பெற்றது. சிறிய நிறுவனம் என்றாலும் அந்த நிகழ்வு பெரிய பிரச்னையை உருவாகி சம்பந்தப்பட்டவர்களைத் திக்குமுக்காட வைத்துவிட்டது. தயாரிப்பில் தவறு நடந்துவிட்டது என்று அறியும் வரையில், எல்லாம் நன்றாக நகர்ந்துக்கொண்டு இருந்தது.


அந்தத் தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபடாத ஒரு ஊழியர் எத்தேசையாக பார்த்து சந்தேகத்தை எழுப்ப, அந்தத் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டுவிட்டது. தயாரிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. அவர்களுக்கு உரைத்தது, அந்த தவறு சரி செய்ய முடியாத ஒன்று என்று. தவறு, ஆர்டர் கிடைத்தது மூன்று இன்ச் குறிப்பிட்ட வடிவில் ஆணிகள். இவர்கள் தயார் செய்து முடியும் தறுவாயில் இருந்தவை, தவறுதலாக இரண்டு இன்ச் ஆணிகள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் பாக் செய்து ஆர்டர் கொடுத்த நிறுவனத்திடம் டெலிவர் செய்ய வேண்டும், கட்டாயமாக. இந்த நிறுவனத்தின் முதலாளிக்குத்தான் தெரியும், எவ்வளவு கடினமான போட்டியில் இந்த ஆர்டரைப் பெற்றுள்ளார் என்று. அது மட்டும் அல்லாமல் இவர்கள் தயார் செய்து கொடுக்கும் இந்த ஆர்டரின் இறுதி பொருட்களின் (finished products) தரம், நேர்த்தி, உறுதி தன்மை போன்றவற்றை வைத்துத்தான் அதிகப்படியான மற்றும் தொடர்ந்து ஆர்டர்கள் பெரும் வாய்ப்புகள் வேறு காத்துக்கொண்டு இருக்கின்றன. இந்தச் சிறு தவற்றால், எல்லா வாய்ப்புக்களும் கைநழுவி போய்விடும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். தவறு எப்படி, ஏன் நடைபெற்றது. யார் யார் பொறுப்பாளிகள் என்று அலசி ஆராய இது உகந்த நேரம் கிடையாது. நேரம் வேறு வெகு வேகமாக கடந்துக்கொண்டு இருக்கின்றது. நிறுவனர் அவ்வளவு அனுபவம் இல்லாதவர். அவர் தந்தைக்குப் பிறகு சமீபகாலமாகத்தான் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அவர் தந்தை மறையும் முன், “நீ எந்த முக்கிய முடிவு எடுப்பது என்றாலும் அல்லது பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்றால், நமது நிறுவனத்தில் முதல் நாளிலிருந்து வேலை செய்யும் அவரைக் கலந்து, அவர் சொல்படி கேட்டு நடக்கவும்” என்று ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி கூறியிருந்தார். அவ்வளவாக படிப்பு இல்லை என்றாலும் அந்த நபர் அனுபவம், பிரச்னை என்ன என்று சிந்தித்து புரிந்துக்கொண்டு, அதை எப்படி கையாள்வது போன்ற நுணுக்கமான விஷயங்களில் கை தேர்ந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் விசுவாசி.
நிறுவனர் உடனே அவரோடு கலந்து ஆலோசித்தார். அவர் தற்பொழுது என்ன பிரச்னை (problem on hand) இந்தப் பிரச்னையால் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பட்டியல் இட்டார்.

அவர் ஆலோசனை கூறினார், நடக்கக்கூடாத தப்பு நடந்துவிட்டது. நாம் இருவரும் உடனடியாக ஆர்டர் கொடுத்த அந்த நிறுவனரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் (அவர் சாதாரணமாக எடுத்துக்கொள்ளுவாரா அல்லது மன்னிப்பாரா என்று எல்லாம் யோசிக்க கூடாது.) எப்படி வரவேற்பு இருந்தாலும் அதைச் சந்தித்துதான் ஆக வேண்டும். நேரம் கடத்தக்கூடாது. அவரைச் சந்தித்து நடந்தது என்ன என்பதை விளக்க வேண்டும், ஒன்றையும் மறைக்காமல்.
அவரை சந்திக்கச் செல்லும்பொழுது, இப்பொழுது தயாரித்துள்ள இறுதி பொருட்கள் சிலவற்றை எடுத்துச்சென்று அவர் பார்வைக்குக் காண்பிக்க வேண்டியது, மிகவும் அவசியம்.

ஒரு வேளை, நமது நேரம் சரியாக இருந்து, இந்த இரண்டு இன்ச் ஆணிகளும் அவர்களுக்குத் தேவை என்றால், அவர்களுக்கு விற்பனை செய்யலாம். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால், அவர்கள் விலையைக் குறைக்கத்தான் செய்வார்கள். பிசினசில் எப்படி நெருக்கடி வரும் என்று யாராலும் துல்லியமாகக் கணிக்கமுடியாது. எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும்.
அவர்கள், அதற்கு சம்மதிக்காவிட்டால் புதிதாக தயார் செய்து டெலிவர் செய்ய போதிய அவகாசம் கேட்டுப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
வேறு வழியில்லாமல் உடனடியாக, ஆர்டர் கொடுத்த நிறுவனத்திரிடம் சென்று மன்னிப்பு கோரி, விவரித்தனர். அந்த நிறுவனர் அனுபவஸ்தர், பிசினசில் அடிபட்டு முன்னுக்கு வந்தவர். நிலைமையைப் புரிந்துக்கொண்டார். அவர்களுக்குத் தேவையானது மூன்று இன்ச்ஆணி மட்டும்தான், அந்தச் சந்தர்ப்பத்தில். இருந்தும், அவருக்குத் தெரிந்த இரண்டு, மூன்று நபர்களிடம் பேசினார். அவர்களில் ஒருவருக்கு இந்தக் குறிப்பிட்ட இறுதி பொருட்கள் தேவையாக இருந்தது. இவரின் சிபாரிசின் பெயரில், இந்த இறுதி பொருட்களுக்கு விடிவு காலம் ஏற்பட்டது.

அது மட்டும் அல்லாமல் மேலும் 10 நாட்கள் அவகாசம் கொடுத்தார். மனதார நன்றி கூறி திரும்பினர்.
அந்த அனுபவஸ்தர் ஆலோசனைபடி இரவு, பகலாக உழைத்து, 10 நாட்கள் அவகாசம் இருந்தும், புதிதாகத் தயார் செய்யப்பட்ட இறுதிப் பொருட்களை 7 நாளில் இருவரும் நேரில் சென்று அவர்கள் மேற்பார்வையில் டெலிவர் செய்தனர். பிறகு அந்த நிறுவனரின் நன்மதிப்பை பெற்று, அவர் உதவியுடனும் வியாபாரத்தில் சிறந்த பெயர் பெற்றனர்.

இதையும் படியுங்கள்:
எண்ணம்போல் வாழ்க்கை என்பது எந்தளவு உண்மை!
Motivation Image

இந்த நிகழ்வு கற்று தரும் பாடங்கள் என்ன?
Smooth sailing என்பது வாழ்க்கையில் சாத்தியமில்லை. ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. தவறு ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல், சம்பந்தப்பட்டவர்கள் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். மன்னிப்பு கேட்கத் தயங்ககூடாது. தவற்றை நியாயப்படுத்த முயற்சிக்கக்கூடாது.

அந்தச் சூழ்நிலையில் டென்சன் அதிகரிக்கும். இருந்தும் பதட்டப்படாமல், அடுத்த நடவடிக்கை எடுக்க முற்பட வேண்டும். இந்தச் சூழ்நிலையில் (situation) கட்டாயமாக அனுபவம் மிக்கவரின் ஆழ்ந்த ஆலோசனை, சப்போர்ட் மிகவும் அத்தியாவசியம். தைரியம் கொடுக்கும், துணை நின்று உதவுவார். மிகவும் முக்கியம் எப்பொழுதும் அனுமானத்தில் தாங்களாகவே கற்பனை செய்துகொண்டு தவிப்பதை அறவே ஒழிக்கவும். (Do not go ahead on the basis of your own assumptions and suffer.)
தவறு செய்தவர்களுடன் பேசி புரிந்துக்கொண்டு, புரிய வைத்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும்.
ஒன்று மட்டும் நிச்சயம். எல்லா பிரச்னைகளுக்கும் முடிவு (solution) உண்டு என்று நம்புங்கள். அதற்கு பொறுமை, பொறுத்தமான நடவடிக்கை, பணம் செலவு செய்தல், நேரம் போன்றவை தேவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com