இதைப் பின்பற்றினால் முடியாது என்ற சில விஷயங்களையும் முடித்துக் காட்டலாம்!

Can in can't
Can in can'tImge credit: Kelly Exeter

நாம் இந்த நாளில் இதுதான் செய்யப்போகிறோம் என்று சில விஷயங்களைக் காலையில் முடிவு செய்து வைத்திருப்போம். அல்லது அந்த விஷயங்கள் நமது தினசரி வேலைகளாகவும் இருக்கலாம். ஆனால் எதோ ஒரு முக்கியமான விஷயங்களால் நேரம் செலவாகி அதனை செய்ய முடியாத நிலை ஏற்படும். ஒரு நாள் என்றால் பரவாயில்லை தினமும் இது தொடரும்போது அந்த பழக்கமே நம்மிடம் இருந்து விலகிப்போய்விடும்.

இன்று இதனை செய்ய முடியாது என்று நீங்கள் யோசிக்கும் சமையங்களில் நாளை கட்டாயம் செய்ய வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். செய்யமுடியாத நாட்களில் அதற்கு பதிலாக, அதனை ஈடுகட்ட என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி யோசியுங்கள். உதாரணத்திற்கு சில அன்றாட பழக்கங்களை எப்படி ஈடுக்கட்டுவது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

1. காலையில் அல்லது மாலையில் நீங்கள் வழக்கமாக செய்யும் தியானம் ஒருநாள் செய்ய முடியவில்லை என்றால், அன்று காபியோ அல்லது டீயோ குடிப்பதற்கு முன்னர் சில நிமிடங்கள் கண்களை மூடிக்கொண்டு எதைப் பற்றியும் நினைக்காமல் மூச்சை இழுத்து விடுங்கள். அவசர அவசரமாக குடிக்காமல் பொருமையாக குடியுங்கள். இது உங்கள் மனதை அமைதிப் படுத்தும்.

2. உங்களுக்கு இன்று பிரார்த்தனை செய்ய முடியவில்லை என்றால், ஒவ்வொரு முறையும் சாப்பிடுவதற்கு முன்பு கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் கடவுளை நினைப்பதும், அவர் கொடுத்த அனைத்திற்கு நன்றி செலுத்துவதும் பிரார்த்தனை தான்.

3. உங்கள் மனதில் உள்ளதை தினமும் எழுதி வைத்துக்கொள்ளும் பழக்கம் உடையவராக நீங்கள் இருக்கும்போது, ஆனால் அதற்கான நேரம் இல்லையென்றால், காரிலோ பேருந்திலே ஏறி உட்கார்ந்தப் பின் உங்களுக்கு நீங்களே அந்த நாளைப் பற்றி பேசிவிட்டு கிளம்புங்கள்.

4. இன்று ஒரு தோல்வியை சந்தித்தீர்கள் என்றால், கடைசியாக அடைந்த வெற்றியை நியாபகப்படுத்திக்கொண்டு முயற்சி செய்யுங்கள். இந்த விஷயம் முடியாது என்று நினைப்பதை விட சென்ற முறை எப்படி முடிந்தது என்பதைப் பற்றி யோசியுங்கள்.

5. வேலை அதிகமாக இருக்கும் சமயத்தில் உங்களுக்குப் பிடித்தமானவரிடம் பேச முடியாது என்று எண்ணிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டீர்கள் என்றால், போன் செய்து ஒரு ஐந்து நிமிடங்கள் பேசிவிடுங்கள்.

6.  உங்களைப் பொலிவாக்கும் அழகு சாதனப் பொருட்களை நீங்கள் பயன்படுத்த முடியாது என்று தோன்றினால், சத்துமிக்க உணவுகளை அன்று சற்றுக் கூடுதலாக எடுத்துக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
நேர்மறை வார்த்தைகளின் பலன்கள் என்ன தெரியுமா?
Can in can't

7.  இன்று உங்களுக்குப் பிடித்தவற்றை செய்ய முடியாது என்று நினைத்தால், அதனை செய்ய என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் தினமும் ஓவியம் வரைவீர்கள், ஆனால் அன்று வரைய முடியவில்லை என்றால், கைக்கு கிடைக்கும் பேனா, பென்சில், காகிதம் ஆகியவற்றை வைத்து மனதில் தோன்றுவதை கிறுக்கினாலும் பரவாயில்லை கோடாவது போடுங்கள்.

8.  கதைப் படிக்க முடியவில்லை என்றால், கவிதைப் படியுங்கள். உங்கள் குழந்தைகளைக் கொஞ்ச முடியவில்லை என்றால் அன்பாக நான்கு வார்த்தைகள் பேசுங்கள்.

 நாம் அன்றாட செய்யும் சில விஷயங்களை அன்று செய்யலாமா வேண்டாமா என்பதை சில சமயம் நேரம் தான் முடிவு செய்யும். நமக்கு கிடைக்கும் நேரத்தை நாம் எப்படி மாற்றிக்கொள்ள முடியும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டுமே தவிர, என்றும் அந்த விஷயத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்க கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com