அதிகமாகச் செய்யக்கூடாத ஐந்து விஷயங்கள்!

success image
success imagehttps://www.maalaimalar.com/

னிதர்கள் எதையாவது செய்து வாழ்வில் முன்னேறலாம் என்று வழி தேடிக் கொண்டே இருப்பார்கள். அதில், சிலர் எந்தெந்த செயல்களைச் செய்தால் முன்னேறலாம் என்று நினைப்பார்கள். ஆனால், மனிதனின் வாழ்க்கையில் என்னென்ன செயல்கள் செய்யக்கூடாது, என்று தெரிந்தாலே முன்னேறி விடலாம். அப்படி அதிகமா செய்யக்கூடாத ஐந்து விஷயங்களைப் பற்றி இதில் பார்ப்போம்.

 1.யாரையும் அதிகமாக நம்பாதீங்க

ற்றவர்களை நம்பி இருப்பதால் உங்களுக்குப் பொருளாதாரரீதியாகவும், மனரீதியாகவும் பெரிய சிக்கல்கள் உருவாகும். பிறர் மீது வைத்த நம்பிக்கை உங்கள் மீது மட்டும் வைத்துப்பாருங்கள். உங்கள் மதிப்பும், பொருளாதார வளர்ச்சியும், இன்பமும் அதிகமாகும்.

2. அதிகமாக எதிர்பார்க்காதீர்கள்

 ப்போதும், எங்கேயும், யாரிடமும் அதிகமா எதையும் எதிர்பார்க்கக் கூடாது. அதிக எதிர்பார்ப்பின் முடிவு ஏமாற்றம்தான்.

 எதிர்பார்ப்பற்ற அன்பு,உறவு முறை தான் நீண்ட காலத்திற்கு வரும். எதிர்பார்ப்புகளுடன்கூடிய உறவில் இருக்கும்போது உங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். நாம் நினைப்பதுபோல் மற்றவர்களால் நடந்துகொள்ள முடியாது. அதேபோல் மற்றவர்கள் நினைப்பது போல் நம்மாலும் நடந்துகொள்ள முடியாது. அதனால் எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டு வாழப் பழகிக் கொள்ளுங்கள்.

3. அதிகமாக யோசிக்காதீர்கள்

 ரொம்ப அதிகமாக எதைப் பற்றியும் யோசிக்காதீர்கள். இவர் ஏன் அதைச் செய்தார்.  அவர் ஏன் இப்படிப் பேசினார். இப்படி எந்த ஒரு நபரையோ, எந்த ஒரு செயலையோ பற்றிய அதிகம் தேவையில்லாமல் யோசிக்காதீர்கள். அப்படி யோசித்தால் மன நிம்மதி இருக்காது.

4. அளவுக்கு அதிகமாக யார் மேலும் அன்பு வைக்காதீர்கள்

 ளவுக்கு அதிகமாக ஒருவர் மீது நாம் அன்பு செலுத்தும்பொழுது அவர்களுடைய பிரிவையோ, அவரேகூட நம்மை விட்டு விலகலாம்.  இழப்பையோ நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது நமக்கு மிகுந்த வலி தரக்கூடிய ஒரு நிகழ்வாக மாறிவிடும்.

 5.கடந்த காலத்தைப் பற்றிப் பேசாதீர்கள்

 வாழ்க்கையில் நடந்து முடிந்தவற்றைப் பற்றிப் பேசாதீர்கள். ஏனெனில் வாழ்க்கை என்பது கடந்ததை நினைத்து வாழ்வதல்ல. நிகழ்வதிலிருந்து வாழ்வது. அதனால், நிகழ்காலத்தில் வாழ கற்றுக்கொள்ளுங்கள். கடந்த காலத்தில் உங்களுக்கு எவ்வளவு பிரச்னைகள் இருந்திருந்தாலும் அதைப் புறம் தள்ளிவிட்டு, உங்கள் எதிர்காலத்தை மாற்ற வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

இந்த ஐந்து விஷயங்களை கடைபிடித்து வந்தால், உங்கள் எதிர்காலம் உங்கள் கண்முன்னே தெரியும். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com