

சில குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். ஆனால் பரிட்சை ஹாலுக்குள் நுழைந்தவுடன் மறந்து விடுவார்கள். அதற்கு அவர்கள் மறக்காமல் நன்றாக தேர்வு எழுத இப்படியும் பயிற்சி கொடுக்கலாம்.
1. சில குழந்தைகள் பலூனில் காற்றின் நிரப்புவார்கள் அதை நொடியில் கட்ட மறந்து விடுவார்கள். அப்படி கட்டாமல் விட்டால் காற்று வெளியேறிவிடும். அதை ஊதியதில் எந்தவித பயனும் இருக்காது. அது போல் தான் நாம் படித்த படிப்பை மனதில் நன்றாக பதிய வைப்பதற்கு பல முறை படிக்க வேண்டும் .ஒரு முறை படித்தால் சரியாக புரியாது. இரண்டு மூன்று முறை அதை ஆழமாக படித்து அர்த்தத்தை விளங்கிக் கொண்டால் மனதில் நிறுத்தி வைப்பது எளிது. பிறகு தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் கூட அதை சரிவர சொல்ல முடியும்.
2. அதேபோல் ஒரே விஷயத்தை பல்வேறு கோணங்களில் படிக்க தெரிந்து வைத்திருக்க வேண்டும். கணக்கு என்றால் அதை ஒரு ஸ்டெப், ஒரே மாதிரியாக போடாமல் பல்வேறு வழிமுறைகளில் அதற்கு விடை காண முயற்சிக்கலாம். அது பல்வேறு நுணுக்கங்களை நமக்கு கொண்டு வந்து சேர்க்கும். அப்படி படிக்கும் பொழுது படிக்கும் ஆர்வம் அதிகமாகும் .கவனச் சிதறல் ஏற்படாது. ஆர்வமும், சிதறாத மனமும் இருக்கும்பொழுது மனதில் பதிய வைப்பது எளிது. அது புதிது புதிதாக பல்வேறு விஷயங்களை கற்பதற்கு வலியுறுத்தும்.
3. எல்லாவற்றுக்கும் மேலாக ஹோட்டலில் சர்வராக பணிபுரிபவர்கள், ஏர் ஹோஸ்டர் ஆக இருப்பவர்கள், பஸ்ஸில் டிக்கெட் கொடுப்பவர்கள் இவர்களை கவனித்தால் அந்த நேரத்தில் சரியாக யாரிடம் எவ்வளவு பணம் வாங்கினோம், டிக்கெட் கொடுத்தோம், யார் எடுக்கவில்லை என்பதை சரியாக கண்டுபிடித்து அதை வசூலித்து விடுவார்கள். அதற்குக் காரணம் அந்த நேரத்தில் அவர்கள் மனதில் அந்த விஷயத்தை நன்றாக பதிய வைப்பது தான் அதுபோல் அலட்சிய படுத்தாமல் ஆர்வமுடன் அந்த விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தி படித்தால் மூளையில் நன்றாக பதியும் இது ஒரு வகை பயிற்சி.
4. தையற் கலையை கற்றுக் கொள்கிறோம் என்றால் அது தொடர்புடைய அத்தனை வகை தையலையும் கற்றுக்கொண்டு ஜொலிக்கலாம். (நாம் பல்லை பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தால் அது தொடர்புடைய நான்கு கட்டுரைகளை நம் கல்கி ஆன்லைன் வெளியிடுவது போல்) இது ஒரு வகை பயிற்சி. இப்படி கற்றுக்கொள்ளும் பொழுது நிறைய ஐடியா தோன்றும். எதனால் இந்த ஐடியா தோன்றுகிறது என்று கவனித்து பார்க்கும் பொழுது நினைவாற்றல் அதிகரிக்கும்.
5. சிவப்பு கலருடன் வெள்ளை கலரை கலந்து கலர் அடிக்கும் பொழுது ரோஸ் நிறம் வரும். அப்பொழுது இதை இதனுடன் சேர்த்தால் இதுதான் விடை என்று தெரிந்து உணர்ந்து படிக்கும் பொழுது அது ஆழமாக மூளையில் பதியும். இப்படி குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கச் செய்யலாம்.