மனதை ஒருமுகப்படுத்துங்கள். வெற்றி வந்து சேரும்!

Motivation article
Motivation articleImage credit - pixabay
Published on

னதைக் கட்டுப்படுத்தும் மார்க்கத்தைதான்  ஜபம் தியானம் என்கிறோம். உடலை நெறிப்படுத்தும் ஆசனங்களை யோகங்கள் என்கிறோம். இவற்றையெல்லாம் நாம் அறிந்து கொண்டால் அற்புதமான வாழ்வை வாழலாம்.

ஒரு சில யோகிகளுக்குதான்  இதன் வழிமுறைகள் தெரியும். காலம் செல்லச் செல்ல   இதை அறிந்த மகான்கள் தோன்றினார்கள் தருமபுரமடம், திருவாவடுதுறை மற்றும் திருப்பனந்தாள் என பல மடங்கள் தோன்றின. எப்படி மின்சாரத்தைப் பயன்படுத்தி மின் விசிறியும் மின்சார ரயில் கார்கள் ஓடுகிறதோ, அதேபோல் மனதைக் கட்டுப்படுத்தும் மார்க்கங்களைக் கற்றுக் கொண்டோமானால்  நம் மனோசக்தியின் மூலம் நாம் விரும்பும் பல காரியங்களை சாதிக்கலாம்.

படித்தவர்களுக்குக் கூட படிப்பில்  எது முக்கியம் என தெரிவதில்லை. தியானம் பல இடங்களில் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. ஒருவன் பணக்காரனாகவும், ஏழையாகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் மனதில் உள்ள எண்ணங்கள்தான் என உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். அதேபோல் அந்த ஆசைகளை எப்படி சீர்படுத்தி வாய்க்கால் வெட்டி பாத்திகட்டி செலுத்து கிறோம் என்பதை மனதை  ஒருமுகப்படுத்துதல் என்பார்கள். மனோசக்தியை ஒருமுகப்படுத்தும் மார்க்கங்களை ஜெபம், தியானம் என்று சொல்கிறோம்.

எந்த எண்ணமும் மனதில் ரகசியமாக வைக்க வைக்க அதற்கு வலிமை அதிகமாகிறது. ஓம் என்ற நாதம் இந்த பிரபஞ்சம் எழுப்புகின்ற உயிர் ஒலி. உலகில்  சிறந்த ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள்  அறிஞர்கள் எல்லோரும் இதை அறிவியல் முறையில் ஏற்றுக் கொள்கிறார்கள். திரும்பத் திரும்ப சொல்வதுதான் மந்திர சக்தியை ஏற்படுத்துகிறது. எதைத் திரும்பத் திரும்பச் சொல்கிறோமோ  அது ஆழ்மனதில் பதிந்து நமக்கு உதவத் தயாராக உள்ளது. ஆழ்மனதில் போடப்பட்ட விஷயங்களை ஆழ்மனம் நிறைவேற்றி வைக்கிறது. முன்னூறு ஆண்டுகளுக்குமுன்  வாழ்ந்த ஃப்ரான்ஸ் நாட்டு மருத்துவர்  "நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையிலும்  முன்னைவிட ஆரோக்கியமானவனாக இருக்கிறேன்" என்று நோயாளிகளை திரும்பத் திரும்ப  சொல்லிச் செய்ததன் மூலம்  அவர்களது நோயைக் குணப்படுத்தினார்.

இதையும் படியுங்கள்:
அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தின் மகத்துவம்!
Motivation article

இப்படியாக, மனதை ஒருமுகப்படுத்தும் பழக்கம்தான் நாம் ஒரு வேலையைச் செய்யும்போது மனதை அந்த விஷயத்தில் ஒருமுகப்படுத்துவது எளிதாகிறது. இதனால் முயற்சிகள் வெற்றி அடைகின்றன. தியானம் மூலம் ஆசைகளை ஆழ் மனதிற்கு அனுப்பி வைக்கும் முறையைக் கற்றுக்கொள்கிறோம். சுயக்கட்டுப்பாட்டின் முக்கியமான  பாடம் இதுதான். இதை விடாது பயிற்சி செய்தீர்களானால் ஆச்சர்யமான நிகழ்ச்சிகள் வாழ்வில் சேர்வதை பார்ப்பீர்கள். வெற்றி உங்கள் கைக்கு வந்து சேரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com