Chanakya
Chanakya

சாணக்கியர் கூறும் 6 விதிகளைப் பின்பற்றுங்கள் , உங்களை எந்த விஷயத்திலும் யாராலும் அசைக்க முடியாது!

Published on

சாணக்கியர் இந்தியாவின் ராஜநீதியின் தந்தையாக அறியப்படுகிறார். அன்று அவர் அரசனுக்காக வகுத்த விதிகள் இன்று அனைவருக்கும் பொருந்துமாறு இருக்கிறது. உங்களைச் சுற்றி உள்ள அனைவரும் நீங்கள் வாழ்க்கையில் வெல்ல வேண்டும் என்று நினைப்பது இல்லை. அவர்கள் உங்களின் நண்பராக நடிப்பவர்கள் , உங்களது உறவினர்கள் ,  நீங்கள் மதிக்கும் நபர்கள் , உங்களது குடும்பத்தினராக கூட இருக்கலாம்.

 உங்களின் முன்னேற்றம் பலருக்கும் பொறாமை தரலாம். ஆனால் , உங்களை சுற்றி இருப்பவர்கள், நீங்கள் ஒருவேளை முன்னேறி விட்டால் அவர்களை மதிக்க மாட்டீர்கள் , அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க மாட்டீர்கள் என்று நினைத்து உங்களின் முன்னேற்றத்தினை விரும்பாமல் இருக்கலாம். சில சமயம் உங்களின் முன்னேற்றத்திற்கு தடையாக கூட அவர்கள் இருக்கலாம்.

நீங்கள் முன்னேற்றம் இல்லாமல் இருந்தால் பலமுறை உங்களைச் சுற்றி உள்ளவர்களால் அவமானப்படுத்தப்பட்டு இருப்பீர்கள். உங்களது வார்த்தைகள் புறக்கணிக்கப்படும் ,உங்களின் மரியாதை குறைக்கப்பட்டு இருக்கும்.இவற்றிலிருந்து நீங்கள் முதலில் விடுபட வேண்டும். சாணக்கியரின் இந்த விதிகளை நீங்கள் பின்பற்றினால் உங்களை எவராலும் வெல்ல முடியாது. 

1.பயத்தை ஒழியுங்கள் 

முதலில் உங்களது பயம் தான் உங்களது தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கிறது , உங்களுக்கு உங்களின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும், சந்தேகம் வரும்போது பயம் வருகிறது.பயம் உங்களை பலவீனப்படுத்தும் , அந்த பலவீனம் உங்களுக்கு தயக்கம், தைரியமின்மை, துணிச்சலின்மை ஆகியவற்றை ஏற்படுத்தி உங்களை முன்னேறிவிடாமல் தடுக்கும். ஒரு நாய்க்கு நீங்கள் பயந்தால் , அது உங்களை தெருவிற்கு நுழைய விடாமல் துரத்தும். நீங்கள் ஓடினால், அது இன்னும் துரத்தும், நீங்கள் நின்று துணிச்சலோடு அதை பார்த்தால் அதுவும் நின்று விடும். இது போலத்தான் மனிதர்களும் வாழ்க்கையும், நீங்கள் பயந்தால் ஓட வேண்டி இருக்கும், துணிந்து நின்றால் வெல்வதற்கு தயாராகி விட்டீர்கள் என்று அர்த்தம்.

2. பலவீனத்தை மறையுங்கள் 

உங்களது பலவீனத்தை யாரிடமும் வெளி காட்டாதீர்கள். உங்களது பலவீனத்தை பயன்படுத்தி ,நீங்கள் உங்களை பரிதாபமாக காட்ட முடிந்தால் , உங்கள் மீது பரிதாபப்படுவார்களே! தவிர வேறு எதையும் செய்ய மாட்டார்கள். உங்களது பலவீனம் வெளியில் தெரிந்தால் அதை வைத்து உங்களை மேலும் பலவீனப்படுத்துவார்கள். உங்களை குட்டிக் குட்டியே முன்னேற விடாமல் தடுத்து விடுவார்கள். உங்களின் பொருளாதார நிலை, குடும்பத்தின் பிரச்சினைகள், துணையுடன் மனஸ்தாபங்கள் போன்ற பலவீனங்கள் அனைத்தையும் மறைத்து வையுங்கள். நீங்கள் பலமானவராக தெரிந்தால் மட்டுமே , உங்கள் மீது மதிப்பு இருக்கும். உங்களின் மதிப்பில் தான் உங்களது வெற்றி இருக்கும். 

இதையும் படியுங்கள்:
நம்மால் கட்டுப்படுத்த முடிவதில் கவனம் செலுத்துவது சிறந்தது!
Chanakya

3. ரகசியத்தை காப்பாற்றுங்கள்

உங்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் எந்த ஒரு ரகசியத்தையும், உங்களது திட்டங்களையும், எதிர்கால செயல்பாடுகளையும் வெளியில் இருப்பவர்களிடம் தெரிவிக்காதீர்கள். உங்களின் வெற்றி ரகசியம் தெரிந்து விட்டால், பலரும் அதையே முயற்சி செய்வார்கள்  அதனால் நீங்கள் பின்தங்கக் கூடும். உங்களது திட்டங்கள் வெளியில் தெரிந்தால் அவர்கள் அதை செயல்முறைப்படுத்த வாய்ப்புள்ளது. அதனால் உங்களின் வெற்றி ரகசியங்களை பாதுகாப்போடு வைத்திருங்கள்.

4. வெளிவேஷம் போடாதீர்கள்

உலகத்தின் முன்னால் நீங்கள் பணக்காரர் போன்று எந்த ஒரு வேஷமும் போடாதீர்கள், உங்களிடம் இருப்பதை பிரதிபலித்தால் போதும். உங்களுடைய விலை உயர்வான ஆடைகளும் , உங்களது வாகனமும்,  உங்களது ஆடம்பரமும் உங்களுக்கான மதிப்பை தரும் என்று நினைக்காதீர்கள். உங்களது நல்ல செயல்பாடுகளும் உங்கள் மீதான நம்பகத் தன்மையும் , உங்களின் முன்னேற்றமும் உங்களுக்கான மதிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். 

இதையும் படியுங்கள்:
எந்த விலங்கின் கரு வளர்வதை நம்மால் பார்க்க முடியும் தெரியுமா? 90% பேருக்கு இது தெரியாது!
Chanakya

5. எல்லோரையும் திருப்திப்படுத்த முயற்சிக்காதீர்கள் 

நம்மால் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. நம்முடைய வாழ்க்கை, நம்முடைய உழைப்பு, நம்முடைய செயல்பாடுகள் அனைத்தும் தனித்துவமானது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உங்களிடம் யோசனை கூறலாம். ஆனால் , உங்களுக்கு தெரியாதவற்றை உங்களால் செயல்படுத்த முடியாது. உங்கள் மனதிற்கு எது சரி? என்று தெரிகிறதோ அதை செய்யுங்கள். மற்றொருவரை திருப்திப் படுத்துவதற்காக உங்களுக்கு தெரியாத விஷயங்களில் ஈடுபட்டு , அதன் மூலம் தோல்வியை தழுவ வேண்டாம். நீங்கள் எதில் திறமை கொண்டவர் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும்.

6. உங்கள் மீது மரியாதையை உருவாக்குங்கள் 

உங்களது செயல்பாடுகளின் மூலம் மற்றொருவர்களின் நன்மதிப்பை பெற முயற்சி செய்யுங்கள். உங்களின் மரியாதை இன்னொருவரால் கிடைக்காது. அதை நீங்களே உருவாக்க வேண்டும், அதை காப்பாற்றும் பொறுப்பையும் நீங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்னொருவரை நம்பி இருந்தால் உங்களது மரியாதை அவர் கெடுத்து விடவும் வாய்ப்புள்ளது. உங்களின் மரியாதையை எல்லா விதத்திலும் காப்பாற்றும் பொறுப்பு உங்களிடம் தான் உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com