இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!

5 quotes that will change your life
5 quotes that will change your lifeImage Credits: Inc.Magazine
Published on

சில நல்ல தத்துவங்களை நம் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதில் தவறில்லை. அதுபோன்ற தத்துவங்கள் நம் எண்ணங்களை நல்ல வழியில் மாற்றியமைக்கும் போது அது வாழ்விலும் பெரிய மாற்றத்தை தரும். அத்தகைய மாற்றத்தை தரக்கூடிய சிறந்த 5 தத்துவங்களை பற்றித்தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

1. நம்மை நாமே பலவீனமானவராக கருதுவது பெரிய பாவமாகும்.  நான் பலவீனமானவன், என்னால் எதையும் செய்ய முடியாது போன்ற எண்ணங்களால் நம்மை நாமே தரம் தாழ்த்திக்கொள்வதுதான் இருப்பதிலேயே முட்டாள் தனமாக கருதப்படுகிறது. எனவே உங்களை நீங்களே பலம் வாய்ந்தவர் என்று நினைக்காவிட்டால் வேறு யார் நினைக்கப்போகிறார்கள்?

2. யாரெல்லாம் வாழ்க்கையில் எந்த நோக்கமுமே இல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் எதைப் பார்த்தும் எளிதில் கவனம் சிதறக்கூடியவர்களாக இருப்பார்கள். வாழ்வில் எந்த நோக்கமுமே இல்லாதவர்கள் எதை நோக்கி செல்கிறோம் என்ற பாதையே தெரியாமல் ஓடிக்கொண்டிருப்பார்கள். எனவே உங்களுக்கென்று ஒரு நோக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

3. மனிதர்களோ அல்லது சூழ்நிலையோ இரண்டுமே நாம் அதற்கு ரியாக்ட் பண்ணாதவரை பவர்லெஸ் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நாம் ஒரு விஷயத்திற்கு கொடுக்கும் ரியாக்ஷன்தான் முடிவு பண்ணும் நாம் அந்த விஷயத்திற்காக கவலைபடலாமா வேண்டாமா? என்று. அதனால் ஒருவர் நம்மை கஷ்டப்படுத்தினால், அதை நினைத்து கஷ்டப்படுவதும் நம்முடைய சாய்ஸாகவே உள்ளது.

4. இந்த பிரபலமான வரிகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். Why do we fall? So that we keep learning and pick ourselves up என்று சொல்வார். நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகும் போதும் அடுத்தமுறை எப்படி பவர்புல்லாக எழுந்து வருவது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் தோற்றுப்போவதற்கு என்றுமே வருத்தப்படக்கூடாது.

இதையும் படியுங்கள்:
கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய எழுதப்படாத சமூக விதிமுறைகள் என்னென்ன தெரியுமா?
5 quotes that will change your life

5. உங்களுக்கு ஒரு விஷயத்தை செய்வது சந்தோஷத்தை கொடுக்குமானால், மற்றவர்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், சொல்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்படாதீர்கள். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை ஜாலியா செய்துகொண்டு உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள். இந்த 5 தத்துவத்தையும் முயற்சி பண்ணி பாருங்கள். கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com