இந்த வழிமுறைகளை பின்பற்றினால் நீங்களும் வெற்றியாளர்தான்!

motivation image
motivation image
Published on

ங்கள் வாழ்வில் வெற்றியடைந்த பிரபலமானவர்களின் முக்கியமான பழக்க வழக்கங்கள் என்னவென்பதை இந்தப் பதிவில் காண்போம். இவற்றை பின்பற்றினால் நீங்களும் வெற்றியாளர் ஆகமுடியும்.

1. வெற்றியாளர்கள் எப்போதும் தங்களுடைய நாளை அதிகாலையில் தொடங்குகிறார்கள். தங்களுடைய குறிக்கோளை அடைவதற்கு எந்த வித தடைகளும் இல்லாமல் அதிகாலை இருக்கிறது என்று நம்புகிறார்கள்.

2. ங்களுடைய லட்சியங்களைப் பற்றி தெளிவாக இருக்கிறார்கள். நீண்ட கால குறிக்கோள். குறுகிய கால லட்சியங்கள் என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். அதை நோக்கி  தங்களுக்கு தாங்களே உற்சாக மூட்டிக் கொண்டு மிக கவனத்துடன் தன்னுடைய இலக்கை நோக்கி செயல்படுகிறார்கள்.

3. ப்போதும் புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொண்டே இருக்கிறார்கள். நிறைய புத்தகங்கள் படிக்கிறார்கள். பயிலரங்குகளில் கலந்து கொண்டு திறனை வளர்த்துக் கொள்கிறார்கள்.

4. வர்களின் நட்பு வட்டம் பெரியது.  பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த மக்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அது அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை தேடித் தருகிறது.

4. நேர மேலாண்மையை கடைப்பிடிக்கின்றனர்.  ஒருபோதும் தங்களுடைய வேலைகளை தள்ளிப் போடுவதே இல்லை. குறித்த நேரத்தில் தங்கள் வேலையை செய்து முடித்து விடுகிறார்கள்.

5.  ங்கள் உடல்நிலை நலனில் மிகுந்த கவனம் செலுத்தி உடற்பயிற்சிகள் செய்கிறார்கள். நல்ல சரிவிகித உணவுகளை உண்ணுகிறார்கள். இது அவர்கள் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது. அவர்களுடைய எனர்ஜி அளவு கூடுகிறது.  ஒருமித்த கவனத்துடன் வேலைகளை செய்து முடித்து வெற்றியும் அடைகிறார்கள்.

6.  மிகவும் கடினமான வேலைகளைக் கண்டு பயம் கொள்வதில்லை. அதில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து துணிச்சலுடன் செயல்படுகிறார்கள். இதுவே சாதாரணமானவர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

இதையும் படியுங்கள்:
குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வேர்க்காய்கறிகள்!
motivation image

7. ணத்தின் அருமை தெரிந்தவர்கள். பொருளாதார மேலாண்மை அறிந்தவர்கள். சம்பாதித்த பணத்தை முதலீடு செய்வதில் மிக கவனமாக இருக்கிறார்கள். தம்முடைய  செல்வத்தை எப்படி பல மடங்காக பெருக்குவது என்ற வித்தை அவர்கள் தெரியும்.

8.  தோல்வியிலிருந்து மீண்டு எழுந்து விடுவது வெற்றியாளர்களின் தனிப்பட்ட  குணமாகும்.  தோல்விகளை பாடங்களாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தை தீர்மானிக்கிறார்கள்.

9.  ணர்ச்சி வசப்படாமல் தங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சிகளில் இறங்குகிறார்கள். தியானம், யோகா  செய்து எப்போதும் சமநிலையான உணர்வுகளை கொண்டிருக்கும் மனதை பெறுகிறார்கள். இது அவர்களது வெற்றிப் பயணத்திற்கு தூண்டுகோலாக இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com