No English-ல் இருந்து Pro English பேச இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

English speaking
English speaking
Published on

காலேஜ் படிக்கும் போது கஸ்டமர் கேரில் இருந்து யாராவது போன் செய்து ஆங்கிலத்தில் பேசினால் போனை கட் செய்த காலங்கள் உண்டு. ஹோட்டல், ஹாஸ்பிட்டல், ரெஸ்டாரெண்ட் போன்ற இடங்களில் நம்மிடம் இங்கிலீஸில் யாராவது பேசினால் திணறிய நாட்கள் நம் அனைவருக்குமே இருக்கும். ஆனால், தற்போது நம் அனைவருக்கும் வேலை காரணமாக ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் ஆங்கிலத்திலேயே உரையாட வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. எனவே, இந்த பதிவில் நம் ஆங்கில புலமையை எப்படி வளர்த்துக் கொள்வது என்பதைப் பற்றி விரிவாக காண்போம்.

உங்களுடைய ஆங்கில புலமையை அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டிய இரண்டு முக்கிய விஷயங்கள். நீங்கள் ஆங்கிலத்தை சிறப்பாக பேச வேண்டும் என்று நினைத்தால் முதலில் சரிசெய்ய வேண்டியது Grammer ஐ தான்.

ஆங்கிலத்தில்(English) உள்ள கிராமரில் பெரும்பாலும் மக்கள் தப்பு செய்யக்கூடிய இடங்கள் என்று பார்த்தால் Present tense, past tense, future tense ல் தான் அதிகமாக தவறுகள் செய்வார்கள். Is க்கு பதிலாக Was போடுவது, This க்கு பதிலாக That போடுவது போன்ற சின்ன சின்ன தவறுகளையே செய்வார்கள்.

முதலில் நீங்கள் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்று முடிவு செய்துவிட்டீர்கள் என்றால், Theoretical ஆக ஆங்கிலத்தில் கிராமரை தெரிந்துக் கொண்டேயாக வேண்டும். இதை நீங்கள் யூட்யூப் போன்ற சமூக வலைத்தளங்களில் கற்றுக் கொள்ளலாம். இப்போது உங்களிடம் யாராவது வந்து Where have you been? என்று கேட்டால் I was in cafeteria என்று சொல்வதற்கும் Iam in cafeteria என்று சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இதுப்போன்ற சின்ன சின்ன கிராமர்கள் நமக்கு ஆங்கிலம் நன்றாக தெரியுமா இல்லையா? என்பதை எடுத்துக் காட்டும்.

இரண்டாவதாக sentence formation. ஆங்கிலம் நன்றாக தெரிந்தவர்களே ஏதாவது கேள்வி கேட்டால் ஒரே வார்த்தையில் பதில் அளிப்பார்கள். How was your weekend? என்று கேட்டால் Good என்று சொல்வார்கள். இதற்கு காரணம் என்னவென்றால், அவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலுமே ஒரு Sentence ஆக உருவாக்கி பேசத் தெரியாது. எனவே, Sentence Formation படித்து தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதை தெரிந்துக் கொண்டாலே நிறைய வார்த்தைகள் பேச ஆரம்பிப்பீர்கள்.

இதையெல்லாம் செய்த பிறகு கடைசியாக செய்ய வேண்டியது Think in english. தமிழில் யோசித்து அதை ஆங்கிலத்தில் மாற்றி பேச முயற்சிக்கும் போது அதிக நேரம் எடுத்துக் கொள்வோம். இதுவே ஆங்கிலத்தை சரளமாக பேசுவதற்கு கஷ்டப்பட காரணம். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், நீங்கள் யாரிடமாவது ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று எண்ணினால் அவர்களுக்கு தமிழே தெரியாது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
Stoicism: 2300 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் கற்றுக்கொடுத்த ரகசியம்!
English speaking

அப்போது உங்களுடைய சிந்தனை ஆங்கிலத்தில் தான் பதிலை உருவாக்குமே தவிர தமிழைத் தேடாது. ஏனெனில், எதிரிலே இருப்பவர் ஒரு ஆங்கிலேயர் என்ற மனநிலையில் இருப்பீர்கள். இப்படி நீங்கள் நினைத்து பேச ஆரம்பித்தால் உங்களுடைய Thinking தமிழில் இருந்து ஆங்கிலத்தில் தானாகவே மாற ஆரம்பித்துவிடும். இதை அப்படியே பிராக்டிஸ் செய்துக் கொண்டே போனால் யாராவது ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், உடனேயே பதில் சொல்லும் அளவிற்கு தேறியிருப்பீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com