அரை ஆண்டு பலனுக்கு -நெல்லை நடுங்கள். பத்து ஆண்டுகள் பலனுக்கு-மரங்களை நடுங்கள். நூறாண்டுப் பலனுக்கு -கல்வியை கொடுங்கள்.
வீழ்வது வெட்கமில்லை, வீழ்ந்தே கிடப்பதுதான் வெட்ககரமானது.
பசியுடன் இருப்பவனுக்கு அவனது பசியைப் போக்க ஒரு மீனைக் கொடுப்பதை விட, மீனைப் பிடிக்கும் தொழிலை கற்றுக் கொடுத்தால் அவன் தன் வாழ்நாள் முழுவதும் பசி இல்லாமல் வாழ்வான்.
அதிர்ஷ்டமுள்ளவன் ஒரு நல்ல நண்பனைச் சந்திக்கிறான், அதிர்ஷ்டம் கெட்டவன் ஓர் அழகியைச் சந்திக்கிறான்.
உங்கள் சந்ததியர்களுக்குச் சரியான இரண்டு மார்க்கங்களைப் பற்றிச் சொல்லிக் கொடுங்கள்; ஒன்று விவசாயம், மற்றொன்று இலக்கியம்.
-சீன பழமொழி
ஏழ்மையிலிருந்து செழுமைக்குப் போகும் பிரயாணம் கடினம், திரும்ப வருவது எளிது.
-ஜப்பானிய பழமொழி
இந்த உலகம் நீங்கள் எப்போது விழுவீர்கள் என்று எதிர்நோக்கிக் காத்திருக்கிறது, உங்கள் மீது ஏறி ஓட.
-அமெரிக்க பழமொழி
விளம்பரம் செய்யப்படாத தொழில் இருட்டில் ஒரு பெண்ணைப் பார்த்துக் கண்ணை சிமிட்டுவதற்குச் சமம். இருட்டில் கண் சிமிட்டுபவனுக்கு மட்டுமே. தான் செய்வது தெரியும். ஆனால் அந்தப் பெண்ணுக்கு?
- பாரசீகப் பழமொழி
பல மனிதர்கள் நோய்களால் மடிவது இல்லை. தாம் உண்ட மருந்துகளாலேயே மடிகின்றனர்.
பின்னால் இரண்டை கொடுப்பதாகச் சொல்வதை விட, ஒன்றை உடனே கொடுத்து அனுப்புவது மேல்.
-பிரெஞ்சு பழமொழி
நண்பனின் யோக்கியதையை, நீண்ட பயணத்திலும், சிறிய சத்திரத்திலும் கண்டு கொள்ளலாம்.
-இங்கிலாந்து பழமொழி
ஒரு சிறு புண்ணையும், ஏழை உறவினரையும் ஒருபோதும் அலட்சியம் செய்யக் கூடாது.
ஒவ்வொரு பொய்யும் ஒரு பல்லைத் தட்டுவதாக இருந்தால் எவருக்கும் பல்லே இருக்காது.
- ஸ்வீடன் பழமொழி
மிகப்பெரிய ஒரு போர். ஒருநாட்டில் மூன்று வகையான படைகளை விட்டுச் செல்கிறது. அவை ஊனமடைந்தவர் களின் படை, அழுகின்றவர்களின் படை, திருடர்களின் படை.
ஆணும், பெண்ணும் தனியாக இருக்கும்போது இருவருக்கிடையில் உறுதியான சுவர் இருக்கட்டும்.
-ஜெர்மன் பழமொழி