தோல்வியை மறந்து வெற்றியை நினையுங்கள்!


If you want to taste victory..
Success story...
Published on

வெற்றிக்கனியை ருசிக்க வேண்டுமானால், தோல்விகளை தாங்கும் மனப்பக்குவம் அடைந்திருக்க வேண்டும். ஏனெனில், இந்த உலகில் தோல்வியே அடையாமல், வெற்றி பெற்றதாக எவருக்கும் சரித்திரம் இல்லை. தோல்விகளை நினைத்து புலம்புவதில் அர்த்தமில்லை என்பதற்கு இந்தச் சிறிய கதையைக் கேளுங்கள்.

கானகத்தில் சந்தோஷ ஜோடியாகப் பறந்து திரிந்தன இரண்டு கிளிகள். ஒரு மோசமான துக்க தினத்தில் ஜோதிடக்காரன் ஒருவனிடம் சிக்கிக்கொண்டது பெண் கிளி.

தப்பிவிடாமல் இருப்பதற்காக அதன் சிறகுகளை பிடுங்கினான் ஜோதிடன். சுயநினைவுக்கு வந்த கிளி, பறக்க முயற்சித்துக் தோற்றது. சில நாட்களில் மறுபடியும் சிறகுகள் முளைத்தன. மறுபடியும் அவற்றை பிடுங்கினான் ஜோதிடன். மறுபடியும் பறக்க முயற்சித்துத் தோற்றது கிளி.

இப்படியே மறுபடி மறுபடி சிறகுகள் முளைப்பதும் அதனை இழந்து பறக்க முடியாமல் கிளி தவிப்பதும் பல முறை நடத்தது. அவ்வளவுதான், அதற்குப் பின்னர் தன்னுடைய பறக்கும் சக்தியை முழுமையாக இழந்துவிட்டதாக நினைத்துக்கொண்டது அந்தப் பெண் கிளி  அதனால் அதற்குப் பின்னர் பறக்க முயற்சிக்கவே இல்லை.

ஜோடியைக் காணாமல் தவித்த ஆண் கிளி ஆறேழு மாதங்களுக்குப் பின்னர் ஒரு சுபயோக சுபதினத்தில் பெண் கிளியைக் கண்டது. ஜோதிடக்காரனின் கூண்டுக்குள் வேகாத அரிசியை தின்று விதி வந்தால் சாவதற்குக் காத்திருந்த பெண் கினியை பாரத்ததும் அதற்கு துக்கம் தாளவில்லை.

ஜோதிடக்காரன் தூங்கும் சமயத்துக்காகக் காத்திருந்தது ஆண் கிளி. அந்த அவகாசம் கிடைத்ததும், அடிமை வாழ்வு போதும் வா தப்பிவிடலாம்! என பெண் கிளியை அழைத்தது.

"என்னால் பறக்க முடியாதே எப்படித் தப்பிப்பது?” எனப் பதறியது பெண் கிளி.

இதையும் படியுங்கள்:
உண்மையான புகழ்ச்சி என்பது எது தெரியுமா?

If you want to taste victory..

"உன்னால் முடியும் பற" என்றது ஆண். "இல்லை இதுவரை அறுபது முறை முயற்சித்துவிட்டேன். பறக்கும் சக்தி என்னிடம் இல்லை" என்றது பெண்.

'போடி லூசு' உன்னால் முடியும்… பற" என்று அதட்டியது ஆண்.

புதிய இறகுகளை அசைத்தது, நம்பிக்கை வந்தது. பறந்தது பெண் கிளி.

வெகுதூரம் பறந்துபோனதும் ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்காக மரக்கிளை ஒன்றில் அமர்ந்தன கிளிகள் இரண்டும். அப்போது பெண் கிளியிடம் "எத்தனை முறை தோற்றாய் என்பதை நினைத்துப் பார்ப்பதால் பயம்தான் உண்டாகும். போனமுறை தோற்றேன். இந்த முறை ஜெயிப்பேன் என்ற சிந்தனைதான் வெற்றிக்கான வழி" என்று சொன்னதாம் ஆண்கிளி.

நாமும் ஆண் கிளி சொன்ன அறிவுரையைப்போல தோற்றதை நினைத்துப் பார்த்து பயம் கொள்ளாமல் வெற்றிக்கான பாதையை நோக்கி, இந்த முறை ஜெயிப்பேன் என்ற சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com