மன்னித்துப் பாருங்கள் மனபாரம் குறையும்!

Motivation Image
Motivation ImageImage credit -pixabay.clm

ன்னிப்பு என்ற வார்த்தைக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை மன்னிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். நமக்கு ஒருவர் எவ்வளவு கொடூரமான துரோகம் செய்தாலும் சரி அவரை மன்னித்து பாருங்கள் உங்கள் மனம் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையும் மாறும். அது எப்படி மன்னிக்க முடியும் என்றுதானே கேட்கிறீர்கள்? நிச்சயம் முடியும்.

நீங்கள் மன்னிப்பதால் உங்கள் மனது மட்டுமல்ல எதிரில் இருக்கும் உங்கள் எதிரியின் மனம் தலைகீழாய் மாறும். நாம் எவ்வளவு பெரிய குற்றம் செய்தோம் நம்மை எவ்வளவு பெருந்தன்மையோடு இவர்கள் மன்னித்து விட்டார்கள் இவர்களுக்கு போய் நாம் துரோகம் செய்துவிட்டோமே என்ற எண்ணம் மேலோங்கும். அதனால் அவனும் சமுதாயத்தில் இப்படிப்பட்ட செயல்களை செய்யாமல் வாழ நீங்கள் காரணமாய் இருப்பீர்கள். இதோ இந்த சம்பவத்தை படியுங்கள் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் நிறைய பேரை நீங்கள் மன்னிக்கத் தொடங்கிவிடுவீர்கள்.

அமெரிக்காவின் ஆர்கென்ஸாஸ் எனுமிடத்தில் சூ நார்டென் எனும் பெண்மணி வசித்து வந்தார். ஒருநாள் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது., அது உயிரை உலுக்கும் செய்தி...

அவரது அப்பாவையும், அம்மாவையும் ஒருவன் சுட்டுக் கொன்று விட்டான் என்று.” அவள் அதிர்ந்து போனாள். வீட்டுக்கு ஓடினாள். கதறினாள். நாட்கள் கடந்தன. கொலைகாரன் பிடிபட்டான். ஒரு நாள் சிறையில் சென்று கொலைகாரனைப் பார்க்க வேண்டும் எனும் விருப்பத்தைச் சொன்னாள். அனுமதி கிடைத்தது. கொலைகாரன் இருக்கும் சிறைக்குச் சென்றாள்.

கொலைகாரன் கம்பிகளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான். உயர்ந்த வலுவான கரடுமுரடான உருவம். சூ அவனை நோக்கினாள். சில வினாடிகள் மௌனமாய் இருந்தாள். பிறகு கூறினாள்,

“நான் உன்னை மன்னித்துவிட்டேன். என் பெற்றோரும் தாத்தா பாட்டியும் மன்னிப்பையே எனக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். என்னால் உன்னை வெறுக்க முடியாது" என்று சொல்லி முடிக்கையில் சூ'க்கு கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது.

கொலைகாரன் திடுக்கிட்டான். நம்ப முடியாமல் பார்த்தான். அவளைச் சுற்றி இருந்தவர்கள் ஒருவேளை மனநிலை இவளுக்குச் சரியில்லையோ என அய்யுற்றிருந்தார்கள்.

இதையும் படியுங்கள்:
உங்களை இனிமே தலையாட்டி பொம்மைன்னு சொன்னா கோபப்படாதீங்க!
Motivation Image

 சூ அமைதியாய் அந்த இடம் விட்டு நகர்ந்தாள். அவளுடைய மனதில் கூறவியலா நிம்மதி நிரம்பி வழிந்தது. ஒருவர் செய்த தவறு உங்களை உறுத்துவதால்தான் அவர்மேல் கோபம் வருகிறது. அவரை மன்னிக்கும்போது உங்கள் மனம் இலகுவாகிறது.

உங்கள் புன்னகை தடையில்லாமல் பொங்குகிறது. ஆறிய காயத்தின் சுவடே காலப்போக்கில் காணாமல் போவதுபோல், கோபம் என்ற தழும்பின் தடயமே அற்றுப்போகிறது. கோபத்தில் இருந்த நாட்களைவிட கூடுதலாக வாழ்வில் வளங்களையும் வெற்றிகளையும் நீங்கள் பெறுகிறீர்கள்.

மன்னிப்பு என்ற வார்த்தை, பெரிய பெரிய சிக்கல் களையும், விவாதங்களையும் கூட ஒரே நொடியில் முடிவுக்குக் கொண்டு வரும் திறமை இந்த வார்த்தைக்கு உண்டு. மன்னிப்பு வாழ்க்கையை உருவாக்குகிறது, மன்னிப்பு மனிதர்களை உருவாக்குகிறது. வாழ்க்கை அழகானது, அதை மன்னிப்பின் மூலம் அனுபவிப்போம்.

மன்னிக்க கற்றுக்கொள்வோம் மனம் சிறகடிக்க வாழ்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com