
மனிதனது வாழ்க்கையில் உறவுகள் எப்படி முக்கிய பங்கு வகிக்கிறாா்களோ அதேபோல பள்ளிக்கூடப் பருவத்திலிருந்தே நட்பும் தனி இடம்பிடித்துள்ளது. தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, இப்படி பல்வேறு உறவுகளையும் தாண்டி ஆழமான நட்பு மேலோங்கி இருப்பதும் நிஜம்.
சிலர் அளவோடு பழகுவாா்கள் பலர் அளவுக்கு அதிகமாக பழகுவதும் பல இடங்களில் உண்டு. சில குடும்பங்களில் சில பிள்ளைகள் தாய், தகப்பனாா் பேச்சைக் கேட்காத நிலையில் மகனின் நண்பரைக்கூப்பிட்டு என்னப்பா உன்னுடைய நண்பன் நாங்க சொல்லுவதையே கேட்கமாட்டேன் என்கிறான், நீயாவது கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா என உாிமையோடு கேட்பதும் உண்டு.
அப்படி நட்பானது பலரது வாழ்வில் நிரந்தரமான இடம் பிடித்திருப்பதும் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.
உன்னுடைய நண்பன் யாா் எனச்சொல் நீ எப்படிப்பட்டவன் என்பதை நான் சொல்கிறேன், என்ற ஒரு ஆங்கிலப் பழமொழியும் உண்டல்லவா!
அதேபோல் நல்ல நட்பானது இரத்த சம்பந்தமான உறவை விடவும் வலுவானதாகவும், அசைக்கமுடியாமலும் இருந்து வருவது சிறப்பான ஒன்று மட்டுமல்ல, அது கடலைவிட பொிதானது.
நட்புக்கு அடையாளமாய் திருவள்ளுவர் தனது குறளில் "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கன்களைவதாம் நட்பு" என குறிப்பிட்டுள்ளாா்.
நண்பனுக்கு ஒரு சங்கடம் வரும்போது அதற்கு உதவி செய்ய வரவேண்டும், என்பதே பொருளாகும் சங்ககால இலக்கியங்களில் துாியோதனன் -கர்ணன்,
பிசிராந்தையாா்- கோப்பெருஞ்சோழர்,
கிருஷ்ணர்-அர்ஜுனண் இவர்களது நட்பின் ஆழம் வலுவானது.
பொதுவாகநண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துப் போகவேண்டும். நட்பில் நல்ல புாிதல் இருக்கவேண்டும். ஒருவருக்கு ஒருவர் உண்மை பேசவேண்டும். இதுவே நல்ல நட்புக்கு உதாரணமாகும்.
இப்படிப்பட்ட நட்புகளில் காலப்போக்கில் விாிசல் சில இடங்களில் தலை தூக்க ஆரம்பித்துவிட்டதோடு கூடா நட்பு சோ்ந்து மது, மாது, கஞ்சா, பாலியல், எல்லை மீறிய கலாச்சாரங்கள், மற்றும் எல்லை கடந்த உறவுகளுக்கு துணைபோவது, போன்ற நிகழ்வுகள் பல இடங்களில் தினசரி வாடிக்கையான நிகழ்வாக தொடர்வது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நல்ல நண்பர்களாய் இருந்தவர்கள் கூட சில செயல்பாடுகளால் எதிாியாகிவிடுவதும் அரங்கேறிவருவது வேதனையின் உச்சமே. பொதுவாக நண்பன் எதிாியாகிவிட்டால் நிம்மதி இருக்காது. அதேபோல எதிாி நண்பனாக ஆனால் நம்பிக்கை இருக்காது.
தற்கால இளைஞர்கள் நட்பு என்ற பெயரில் ஒன்று சோ்ந்து சமுதாயத்தில் தேவையில்லாத அவலங்களை செய்து வரும் நிலை மாறவேண்டும். தேவையில்லாத அநாகரீகமான சமுதாய சீரழிவுக்கான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல் திருந்தி வாழ்வதோடு எதிா்காலத்தையும் சீரழிக்கும் செயலில் ஈடுபடுவது நல்லதல்ல. இளைஞர்களே நட்பு என்ற போா்வையில் சமுதாய அவலங்களுக்கு இறையாகாதீா்கள். நல்ல பல காாியங்களில் ஈடுபாடு கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு பாலமாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.