கவலையைத் தூக்கியெறிந்து கனவில் உறுதியாக இருங்கள்..!

Stay true to your dream
Sylvester Stallone
Published on

வெற்றிக்கு பின்னே கவலைகளும் கண்ணீரும் இருப்பது சகஜம்தான். எவராவது தாங்கள் புன்னகைத்துக் கொண்டே அல்லது சுகமாக படுத்துகொண்டே வெற்றி அடைந்தோம் என்று சொல்லி இருக்கிறார்களா?

கவலைப்பட்டு காணாமல் போவதை விட மகிழ்ச்சியாக இருந்து வெற்றி பெறுவது அவரவர் கைகளில்தான் உள்ளது. வாழ்க்கை ஒருமுறைதான் அதில் நமது லட்சியத்தையும் கனவையும் நிஜமாக்கத் துணிவதே அழகு.

புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரான சில்வர்ஸ்டார் ஸ்டோலோனுக்கும் சிறுவயதில் இருந்து அவரது தோற்றம் பற்றிய பெரும் கவலை ஒன்று இருந்தது. பிறக்கும்போதே  பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரான அவரின் முகத்தோற்றம் அழகாக இருக்காது.  

ஆனால் சிறுவயதிலிருந்தே தானும் ஹாலிவுட்  நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் ஹாலிவுட் ஹீரோவாக ஆக வேண்டும் என்பது அவ்வளவு எளிதான ஒன்றா என்ன? ஹாலிவுட் ஹீரோக்கள் உடல் அமைப்பு, உயரம், தோற்றம் எல்லாவற்றிலும் கம்பீரமாக இருப்பார்கள். ஆனால் இவருக்கோ அழகில் குறை, ஆனால் இவர் அந்த நிலையிலும் தனது உடல் கட்டை உடற்பயிற்சிகள் மூலம் கட்டுமஸ்தாக வைத்திருந்தார்.

அவரும் தன்னுடைய ஆசையை சொல்லி பல தயாரிப்பாளர்களிடம் சென்று ஹீரோ சான்ஸ் கேட்கிறார் ஆனால் அவரைப் பார்த்தவர்கள பரிகாசம் செய்து அனுப்புகின்றனர் .1970 லிருந்து 75 வரை பல சிறிய வேடங்களில் நடிக்கிறார். ஒரு கட்டத்தில் எந்த வாய்ப்பும் கிடைக்காமல் வறுமையான சூழலுக்கு தள்ளப்படுகிறார்.

ஒருமுறை டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது அதில் வந்த குத்துச்சண்டை வீரர் முகமது அலி பங்கேற்கும்  ஆட்டத்தை பார்க்கிறார். அவருக்குள் ஒரு பொறி. முகமது அலியை அடிப்படையாக வைத்து ஒரு கதையை 26 மணி நேரத்தில் எழுதி முடிக்கிறார். அந்த கதையில் தானே ஹீரோவாக நடித்தது போன்ற காட்சிகளுடன் எழுதுகிறார்.
இது பற்றி அவர் எழுதியுள்ள புத்தகத்தில் "சினிமாவுக்காக எழுதப்பட்ட கதை அல்ல இது. என் சொந்தக் கதை ஒவ்வொரு காட்சியிலும் நான் இருப்பது போலவே சிந்தித்து எழுதினேன்" என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் வெற்றி பெற பேச்சுத் திறமை வளர்த்துக் கொள்ளுங்கள்!
Stay true to your dream

இந்த கதையை எடுத்துக்கொண்டு அவர் பல ப்ரொடியூசர்களிடம் செல்கிறார் அவர்களுக்கு இந்த கதை பிடித்தாலும் கதாநாயகனாக வேறொருவரையும் போட முடியும் என்று சொல்ல சில்வர்ஸ்டர்  மறுக்கிறார். ஆனால் சில்வர்ஸ்டர் தன் இலக்கில் விடாப்பிடியாக நிற்கிறார். இறுதியாக ஒரு தயாரிப்பாளர் வேண்டாவெறுப்போடு அந்த கதைக்காக சில்வர்ஸ்டரை ஹீரோவாக போட சம்மதித்து எடுக்கப்பட்ட படம்தான் 1976 இல் வந்த 'ராக்கி' ஒரு குத்துச்சண்டை வீரர் பற்றிய கதையை மையமாக வைத்து எழுந்த அந்த படமானது.

அந்த வருடம் உலகின் உயரிய  நான்கு ஆஸ்கார் விருதுகளை வாங்கி குவித்த அந்த படம் தொடர்ந்து ஆறு பாகங்கள் வரை வந்திருப்பது ஹாலிவுட்டின் மகத்தான ஒரு சாதனை.

பிறக்கும்போதே பக்கவாதத்தால் முகம் கோணலாக பிறந்து ஹாலிவுட் நடிகராக வேண்டும் என்று விருப்பப்பட்டு கவலைகளை உடைத்து இன்று உலகறியும் பிரபல ஹாலிவுட் நடிகராக உள்ளார் தற்போது 78 வயதாகும் சில்வஸ்டர்.

நாமும் முயன்றால் இவரைப் போன்ற சாதனை மனிதராக முடியும் கவலைகளைத் தூக்கிப் போட்டால்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com