இந்த பழக்க வழக்கங்களை விட்டொழியுங்கள். உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்..!
நாம் அனைவருமே மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் வெற்றி பெறவே எண்ணி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆனாலும் பல தருனங்களில் அது நமக்கு சாத்தியமாக அமைவதில்லை. அதற்கு நம்மிடம் உள்ள சில தவறான பழக்கவக்கங்களும் காரணமாக உள்ளது.
இங்கு முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது, வெற்றியானது தனியாக நம்முடைய முயற்சியினால் மட்டும் கிடைத்து விடுவதில்லை. அதற்கு மற்றவர் களுடைய ஒத்துழைப்பும் அவசியம் தேவை. நாம் நமக்கு தெரியாமலேயே சில பழக்கவழக்கங்களை நம்மில் வளர்த்துக்கொண்டு இருக்கிறோம். இப்பதிவில் நமது வெற்றிக்கு தடையாக நம்மிடம் இருகிற பழக்கவழக்கங்களை காண்போம்.
எப்போதுமே நான்தான் ஜெயிக்க வேன்டும் என்ற எண்ணம் கொண்டுடிருப்பது. மற்றவர்கள் கூறவருவதை கூறவிடாமல் தவிர்ப்பது அல்லது அதனை உள்வாங்காது இருப்பது.
நாமாகவே ஒருவரை பற்றி முடிவு எடுத்து எதிர்மறையான முடிவிற்கு வருவது. மற்றவர்களின் செயல்களுக்கு நாம் அவர்களை குறையாக மதிப்பிடுவது.
மற்றவர்கள் ஏதேனும் புதிய விசயங்கள் செய்யவேண்டும் என்று கேட்டால் உடனே இதெல்லாம் உன்னால் முடியாது என்று அவர்களின் சுயமதிப்பு குறைக்கும்படியாக பேசுவது.
எப்போதும் நம்மை பற்றி தற்பெறுமை பேசுவது. எப்போதும் மற்றவர் பேசும்போது உடனே கோப்படுவது. எப்போதும் எதிர்மறையாகவே யோசிப்பது. ஒரு விசயத்தை முழுமையாக கூறாமல் சில விசயங்களை மறைத்து கூறுவது.
மற்றவர்கள் செய்யும் நல்ல விசயங்களை மனம் திறந்து பாராட்டாமல் இருப்பது. மற்றவர்கள் செய்த விசயத்தை நான்தான் செய்தேன் என கூறி பாராட்டு பெறுவது.
ஒரே செயலை பலமுறை தவறுதலாக செய்து மன்னிப்பு கேட்டுகொண்டே இருப்பது. பழைய விசயங்களை நினைத்து புலம்பிக்கொண்டே இருப்பது. புதிதாக எதையுமே முயற்சி செய்யாமல் இருப்பது.
நாம் செய்யும் தவறுக்கு மன்னிப்பு கேட்க மறுப்பது. மற்றவர்கள் கூறும் போது நமக்கு தெரியாதவற்றையா கூறப்போகிறான். என நினைப்பது. மற்றவர்கள் நமக்கு செய்யும் சிறு சிறு உதவிகளுக்கும் நன்றி கூற மறுப்பது.
மற்றவர்கள் நாம் செய்யும் செயலை தவறு என்று கூறினால் அவர்களை தண்டிப்பது. நாம் செய்த தவறை மற்றவர்கள் மேல் போடுவது.
நாம் எப்போதும் நம்மை பற்றி மட்டுமே சிந்திப்பது.நாம் சிந்தித்து பார்த்தால் மேற்கூறிய ஏதாவது சில பழக்க வழக்கங்கள் நம்மிடமும் ஒட்டிக்கொண்டு இருக்கலாம். அவைகளை அறிந்து அவற்றை சரிசெய்து கொள்ளும் போது வெற்றி தன்வசப்படுத்திக்கொள்வது உறுதி.
பலரை பார்த்து இருக்கிறோம். காலையில் எழுந்தது முதலே பதட்டமாக இருப்பார்கள். பலறை குறை சொல்லிக் கொண்டு இருப்பார்கள். எதற்கு இந்த பதட்டம். ஒன்றை மட்டும் வாழ்வில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை என்பது பந்தயம் அல்ல. மூச்சிரைக்க ஓடுவதற்கு. வாழ்க்கை ஒரு அழகான பயணம். ஒவ்வொரு செயலையும் ரசித்து, நிதானமாக, அனுபவித்து செய்தால் சிறப்பாக அமையும். வாழ்க்கையே வசந்தமாகவும் மாறிவிடும்.