வேண்டாத பழக்கங்களை விரட்டினால் வெற்றி கிட்டும்!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

காலையில் காபி குடிக்கவில்லை என்றால் தலையே வெடிச்சிடும். டிபனோ சாப்பாடோ ஆனபிறகு உடனே புகை பிடிக்கணும். தினமும் 5 தடவையாவது வெற்றிலை பாக்கு போடணும். இப்படி தாற்காலிகமாக ஆரம்பிக்கப்படும் பழக்கங்கள் ஒருவரை அடிமை ஆக்கிவிடுகிறது.

தலைக்குமேல் பிரச்னை இருப்பதால் இந்தப் பழக்கத்திற்கு ஆளாகி விட்டேன் என கூறுபவர்கள் பிரச்னை தீர்ந்து விட்டால் பழக்கத்தை விட வேண்டியதுதானே. சூழ்நிலைகளால்  மனதின் பாதிப்பிலிருந்து தப்பிக்க  தீய பழக்கங்களுக்கு சிலர் அடிமை ஆகிறார்கள். சூழ்நிலையால் மனதின் பலம் குறையும்போது உடலும் பலவீனமாகி விடும்.

எந்த பிரச்னையும் நிரந்தரம் இல்லை. இன்று பெரிய பிரச்னையாக இருக்கக் கூடிய ஒன்று நாளையே இதற்காகவா  இப்படி வருந்தினோம் என்று தோன்றக்கூடும். ஆனால் பிரச்னைகளை காரணம் காட்டி தீய பழக்கங்களை தொடங்கினால் அது அது மூளையின் செயல்திறனை பாதிக்கும்.

பலவீனமாக இருக்கும் எதிரி நாட்டின் கோட்டைக்குள் நுழைந்துவிடும் படை வீரர்கள் போல்  உங்களுக்குள் நுழைந்து ஆக்ரமிக்கும். தீய பழக்கங்களை நீங்கள் நியாயப்படுத்த நினைத்தாலும் உங்கள் ஆழ்மனதின் வால்யூ சிஸ்டம் அவற்றைத் தவறு என்று தொடர்ந்து நிராகரித்துக் கொண்டேயிருக்கும். இதனால் அமைதியற்ற நிலை உருவாகும். இதை விட்டுவிட வேண்டுமா இனிமேல் செய்யக்கூடாது என்று நினைப்பதை விட நீங்கள் அடிமையாகி அனிச்சையாக செய்துகொண்டிருக்கும்  தீயபழக்கத்தை செய்யும்போது நான் என்ன செய்கிறேன் என்ற விழிப்புணர்வுடன் யோசித்து முழு கவனம் செலுத்துங்கள். அதன் விளைவு வியக்கச் செய்யும்.

அடிமைத்தனமாகச் செய்யும் பழக்கத்தை அறிவுபூர்வமாக செய்யும்போது அது உங்கள் பழக்கம் நல்லதா கெட்டதா என்று அலசி ஆராயும். நல்ல பழக்கமாக இருந்தால் தனக்குள் எடுத்துக் கொள்ளும். தீய பழக்கமாக இருந்தால் இந்த எண்ணத்தை Frontal  contex க்கு அனுப்பும்.

இதற்கு ஒரு உதாரணம். துருக்கி தேசத்திற்கு மணமுடித்து வந்தாள் ஒரு பெண். மண வாழ்க்கை திருப்தியாக இல்லாததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி புகைப் பழக்கத்திற்கு ஆனாள். அவளை குடும்பத்தினர் குழந்தைகள் வெறுத்தார்கள். ஒரு கட்டத்தில் ஞானோதயம்போல் தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம்  என்ற எண்ணம் எழ அவள்  உடனே  கொஞ்சம் கொஞ்சமாக விடுபட முயற்சித்தாள்.

இதையும் படியுங்கள்:
மற்றவர்களுக்காக வாழாமல் உங்களுக்காக வாழுங்கள்...!
motivation article

இன்று தன்னம்பிக்கை நிறைந்த பெண்மணியாக அவள் சொன்னது இதுதான் "ஒரு பிரச்னைக்கு எப்படி இன்னொரு பிரச்னை தீர்வாக இருக்க முடியும் என நினைத்தேன்  நல்ல தீர்வு நிச்சயம்  தீய பழக்கத்தில் இருக்க முடியாது என்று மனதார மாற நினைத்தேன். தீய பழக்கங்களுக்கு விடை கொடுத்தேன். நல்ல பழக்கங்களுக்கு இடம் கொடுத்தேன். தீயவை தானே விடை பெற்றுச் சென்றுவிட்டது"  என்று கூறும் இவர் பலரின் மாற்றத்திற்குக் காரணமாக இருக்கிறார்.

பிரச்னைகளால் மனம் இளகி இருப்பது  ஈரமான சிமெண்டுக்கு சமம்.  அதில் தீய பழக்கங்கள் காலடி வைத்தால் தடம் நிலைத்துவிடும். இளகி இருக்கும் மனதை நேரான எண்ணங்கள் மற்றும் செயல்களால் இறுகப் செய்யுங்கள். மனம் விழிப்புணர்வுடன் இருக்கும். வேண்டாத பழக்கங்களை விவேகமாக விரட்டினால்  வெற்றிகிட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com